மத்திய அமைச்சரவையில் சேர திமுக முடிவெடுத்து விட்டதாக தெரிகிறது. டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுகிறது. அதற்குப் பதிலாக அவர் லோக்சபா துணை சபாநாயகராக நியமிக்கப்படலாம்.
திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தரப்பு கூறி விட்டது. மு.க.அழகிரி, தயாநிதி மாறன், ராஜா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக்கப்படுவார்கள். கனிமொழிக்கும் அமைச்சரவையில் இடம் கிடைக்கும். அவருக்கு தனிப் பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் பதவியைப் பெற திமுக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பார்த்திபன்
//டி.ஆர்.பாலுவுக்கு அமைச்சர் பதவி மறுக்கப்படுகிறது.//
//திமுக சார்பில் யாரை அமைச்சராக அறிவித்தாலும் ஏற்கத் தயார் என காங்கிரஸ் தரப்பு கூறி விட்டது.//
மேலேயுள்ள இரண்டு வசனங்களும் ஒன்றுக்கொன்று முரண்படுகின்றனவே.
msri
இனி கலைஞரின் படத்ததை தெளிவாக ( கண்ணை மறைக்காமல்) பிரசுரிக்கலாம்> அவர்தானே அடுத்த வெற்றிக்கனியையும் பறிக்கப போகின்றார்! அதுசரி டி.ஆர்.பாலு இவ்வளவு மோசமான ஆளோ?