வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நலன் கருதி வவுனியாவிலுள்ள இராமநாதன் நிவாரணக் கிராமத்தில் இலங்கை வங்கிக் கிளையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வவுனியாவிலுள்ள இலங்கை வங்கியின் பிரதான காரியாலயத்துடன் இணைந்ததாக இயங்கவுள்ள இவ்வங்கியை மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் நேற்றுத் திறந்து வைத்தார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள ஏனைய நலன்புரி நிலையங்களில் 7 நடமாடும் வங்கிக் கிளைகளை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வைபத்தில் அமைச்சர்களான விநாயமூர்த்தி முரளிதரன் மற்றும் அமீர் அலி ஆகியோரும் கலந்துகொண்டதாகவும் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
thevi
அப்படியானால் மக்களை வெளியே விடும் யோசனை இல்லையா அமைச்சரே? உங்களுக்கு வெளிநாடுகள் தரும் நிதிகளை என்ன செய்யப்போகின்றீர்கள்? நீச்சல் குளம் கட்டப் போகின்றீர்களா? அரசு எதுவும் செய்யாது என்ற மக்களின் அபிப்பிராயத்தை இது உறுதி செய்கிறது.