கே.பி யின் உள்ளுர் ஏஜென்ட் வவுனியா முகாமில் கைது

புலிகளின் சர்வதேச இணைப்பாளரான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனின் உள்ளுர் ஏஜென்ட் வவுனியா நிவாரணக் கிராமம்; ஒன்றில் வைத்து நேற்றுக் கைதுசெய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இவர் தொடர்பாக அங்கிருந்த மக்கள்,  இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கொடுத்த பிரத்தியேக தகவல் ஒன்றின் அடிப்படையிலேயே இக்கைது இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இவர் உருமாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் புலிகளுக்கான ஆயுதக்கடத்தல் மன்னாக விளங்கிய கே.பி. யின் இலங்கைக்கான முன்னணி முகவராக செயற்பட்டு வந்ததாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.  இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சகல இராணுவ உபகரணங்களுக்கும் கேபி யுடனான இரகசிய தொடர்பாளராக செயற்பட்டதாக இவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகள் சிலவற்றையும் சரளமாக பேசக்கூடிய இவர் சிறந்த கல்விப்பின்புலத்தை கொண்டுள்ளார்.

அத்துடன் இவர் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 19 தடவைகள் நாட்டை விட்டு வெளியே சென்றுள்ளதுடன் சில தடவைகளில் சட்டவிரோதமாக படகுகளிலும் நாட்டினுள் வந்துள்ளார். இவர் வவுனியா நிவாரணக் கிராமத்தில் இருந்த வேளையிலும் கே.பி. யுடன் செய்மதி தொலைத் தொடர்புமூலம் உரையாடியுள்ளார் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதன்மூலம் கே.பி. இப்போது மறைத்துள்ள இடத்தைக் கண்டுபிடிப்பது சுலபமாகிவிடும் எனவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • KUNALAN
    KUNALAN

    ஆரம்பத்திலயிருந்தே இவர்கள் இதே வேலையைத்தான் செய்யுறார்கள்.

    “மக்கள் செறிவாக வாழும் பகுதிகளிலிருந்து ராணுவத்தை நோக்கி தாக்குதலைச் செய்து விட்டு ஓடுவது”

    “மக்கள் அடர்ந்த தெருக்களில் நின்று ட்றக் வண்டிகளை நோக்கி கைக்குண்டு வீசிவிட்டு ஓடுவது”

    “மக்கள் கூடும் பொது இடங்களில் கண்ணிவெடியை புதைத்து வைப்பது”

    “மக்களின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளுமிடங்களில் வெடிகுண்டு வைப்பது”

    “மக்கள் கும்பலாய்க் கூடுமிடங்களில் மனித வெடிகுண்டை அனுப்புவது”

    இப்படியே வரலாறு முழுவதும் மக்களுக்கான விரோதங்களைச் செய்த புலிகள் இப்போதும் களைத்திழைத்து உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் அந்த வன்னி மக்களின் மத்தியிலிருந்து மொத்த மக்களுக்குமே பாவச் சோதனையை ஏற்படுத்தியிருக்கிறார்கள் பாருங்கள். இவர்கள் திருந்தவே மாட்டார்கள்…?!

    குணாளன்.

    Reply
  • sekaran
    sekaran

    குணாளன் சொல்வதை ஆமோதிக்கிறேன் – ஒரு திருத்தத்துடன். புலம்பெயர் உருமாறன்கள் திருந்துவார்கள் என்பது சந்தேகம். ஆயினும் இலங்கையில் உருவாகாமல் இருந்தால் போதும்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    புலிகளை ஒழிப்பதில் இலங்கைக்கு உதவிய சீனாவின் தந்திரம் : தெற்காசியாவில் வல்லரசாக உருவாக திட்டம் -மே 30,2009
    இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கம் முடிவுக்கு வந்ததன் பின்னணியில் முக்கிய காரணங்களாக பல்வேறு விஷயங்கள் கூறப்படுகின்றன. இருந்தாலும், சீனா என்ற அசைக்க முடியாத வல்லரசு, இலங்கைக்கு அளித்த மிகப் பெரிய உதவி தான், புலிகள் அமைப்பிற்கு இறுதி அத்தியாயத்தை எழுத வைத்தது என, சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்……— http://www.dinamalar.com/fpnnews.asp?News_id=3945&cls=row3

    Reply
  • thurai
    thurai

    புலிகழும் சர்வதேசமும், யானையின் காலின் கீழ் உள்ள எறும்புபோலவே. இவர்களை உலகின் கதாநாயகர்ளாகக் காட்டிப் பிழைப்பவர்களே புலியின் ஊடகங்கள். இவர்களை நம்பி நடுத்தெருவில் நிற்பவர்களே புலத்துத்தமிழர்.

    துரை

    Reply