இலங் கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், மனித உரிமைகள் செயற்பாடுகள், எதிர்கால திட்டங்கள் குறித்த விசேட அறிக்கையொன்றை மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார்.
எதிர்வரும் 2ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வழமையான அமர்வு ஆரம்பமாகிறது. இந்த அமர்வின் போதே இலங்கை சார்பாக இவ்விசேட அறிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவிலிருந்து தெரிவித்தார்.
இலங்கை அரசு மனித உரிமைகளை பேணிப் பாதுகாப்பதற்காக உறுதிபூண்டுள்ள நிலையில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு மனிதாபிமான நிவாரண உதவிகள் வழங்குவதிலும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.