படையினரின் வெற்றியை கொண்டாடும் தேசிய வைபவம் – 3ஆம் திகதி காலிமுகத்திடலில்

last-mulli.jpgபுலி களுக்கு எதிரான மோதல்களில் படையினர் பெற்றுக் கொண்ட வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவமொன்று எதிர்வரும் 3 ஆம் திகதி கொழும்பில் கொண்டாடப்படவிருக்கிறது.

இந்த வைபவத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் காலிமுகத்திடலில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப் பட்டிருப்பதாகவும், இந்த வைபவத்தில் முப்படைகளின் தளபதியும், இலங்கை ஜனாதிபதியு மான மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிய வருகிறது.

இதன்போது, முப்படையினரின் அணி வகுப்பு இடம் பெறுவதுடன், யுத்தகளத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும், கடல் மற்றும் விமானப் படையினரின் சாகச நிகழ்வுகள் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டு ள்ளது.

இந் நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ, இராணுவ கடற்படை, விமானப் படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் சிவில் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.வடக்கு, கிழக்கு மீட்பு நடவடிக்கைகளின்போது கள முனையிலிருந்து செயற்பட்ட படை வீரர்கள் மற்றும் படைத் தளபதிகளுக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந் நிகழ்வில் விசேட கெளரவிப்பு வழங்கப்படவுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 Comments

  • Nila
    Nila

    இவர்கள் கருணாவையும் கே.பி யையும் கைவிட்டுவிட்டார்களே. ஐயோ பாவங்கள் இப்படித்தான் எல்லாம் நடக்கும்

    Reply
  • Kulan
    Kulan

    புலிகளை வெற்றி கொண்டதை தேசிய வைபவமாகக் கொண்டாடுகிறது எனில் 28000 தமிழரைக் கொன்று குவித்ததையும் சேர்த்துக் கொண்டாடுகிறது என்றே அர்த்தம். இப்போரில் இடந்தெரியா வன்னிப் பகுதியில் தம்முயிர்களை நீர்த்த இராணுவர்வீரர்களின் உடலத்தின் மீதுமா இந்த அரக்க இனம் தேசிய வைபவமாகக் கொண்டாடுகிறது. ஒரேநாடு ஒரே மக்கள் என்று கோசம் போடும் இராச்சதர் குடும்பம் எம்மக்களைக் கொன்று குவித்ததையே கொண்டாடுகிறது என்று கருதுகிறேன். நான் இதுவரை போரில் மரணித்து முடமாக்கப்பட்ட மக்களுக்காக ஒரு ஆறுதல் வார்த்தையோ அனுதாபமோ தெரிவித்ததாகத் தெரியவில்லை. ஒன்றாய் ஒருமித்து வாழ்வதற்கான எந்த சமிஞ்ஞையும் எமக்கு இன்னும் கிடைக்கவில்லையே. எம்மக்களின் பிணங்களில் மகிழ்ச்சி கொண்டாடும் அரசுடனும் சிங்கள இனத்துடனும் எப்படிச் சேர்ந்து வாழ்வது என்பதுதான் என்கேள்வி? இது உண்மையில் தமிழர்களின் துக்கதினமே. புலிகள் பயங்கரவாதி என்றீர்கள் ஒப்புக்கொள்கிறோம் தம்மக்களையே கேடயமாக தமக்குப் பாதுகாப்பாக வைத்துக் கொன்றார்கள். ஒரு தார்மீகப்போறுப்புள்ள ஒரு அரசு இப்படி தன்மக்களையே கொன்று குவித்ததை அரக்க சமூகமே பார்ததுக்கொண்டு தானே இருந்தது. இயக்கர் எனும் அரக்கர்களில் இவ்வளவு அப்பாவிப் பொதுமக்கள் செத்திருந்தால் கொண்டாடியிருப்பார்களா? அரக்கர்களிடம் இரக்கத்தை எதிர்பார்ப்பது பிழை என்கிறீர்களா? என்வேதனையை எழுதினேனே தவிர துவேசத்தை தூக்கிப்பிடிக்கவல்ல. அன்று புலிகள் எம்மைத்தம்மக்கள் என்றார்கள்; கொன்றார்கள். அரசும் எம்மை இலங்கையர் என்றது; அவர்களும் கொன்றார்கள். கொன்றதைக் கொண்டாடுகிறார்கள். இலங்கை தந்த பாடம் சிறுமான்மை இனங்களைக் கொன்று குவி என்பதே

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    குலன்,
    முன்பு புலிகளால் பல அப்பாவிச் சிங்கள மக்கள் கொல்லப்பட்டதற்கு நாமோ அல்லது கூத்தமைப்பினரோ ஒரு வருத்தம் கூட தெரிவித்தது கிடையாது. கல்மடுக் குளமுடைத்து 5000 இராணுவத்தினர் பலி என்று விட்ட ரீலை நம்பி, சில “புலன்” பெயர்ந்ததுகள் அது சாத்தியப்படுமா என்று கூடச் சிந்திக்காது வெடி கொழுத்திக் கொண்டாடியது எனக்கும் தெரியும். இன்று புலிகள் அழிகக்கப்பட்டதால் தமிழர்களின் வாழ்வில் எனி ஒரு போர்ப் பயமற்ற நிம்மதியான வாழ்வு கிடைக்கும் என நம்பும் தமிழர்கள் கூட, அந்தப் புலியளிப்பில் உயிர் நீத்த இராணுவத்தினருக்கு அஞ்சலி செய்தது கிடையாது. முதலில் நாங்களும் இலங்கைப் பிரசைகள் என்பதை நிரூபிப்போம். அதன் பின்பும் இலங்கை அரசின் நடவடிக்கைகளில் தவறிருந்தால் விமர்சிப்போம்.

    Reply
  • msri
    msri

    படை என்பது “ஓர் அரசு இயந்திரம்” இதில் இலங்கையில் என்ன உலகில் ஆளும் வர்கத்தையே பாதுகாக்கின்றது! இந்த அரசு இயந்திரம் சமகால இலங்கையின் பெளத்த+சிங்களப்; பேரினவாத மகிந் அரசை பாதுகாக்கின்றது! இந்தப்பாதுகாவலர்களின் அண்மைக்கால நடவடிக்ககைகளுக்காக அதன் எசமான் வெற்றி கொண்டாடுகின்றார்! அவ்வளவுதான்! இதற்குப் போய்…..

    Reply
  • Nia
    Nia

    கூத்தமைப்போ தமிழர்கட்சிகளோ இயக்கங்களோ தமிழர்களின் வாக்கில் அல்லது விருப்பை பிரதிநிதப்படுத்துபவர்கள். ஆனால் ஜனாதிபதி என்பவர் அப்படியல்ல தமிழர்கள் வாக்களால் அரசுக்கு வந்தவர். எல்வாவற்றையும் ஒன்று என்று ஒப்பிட இயலாது பார்த்திபன். புலிகளோ கூத்தணியோ மாறி மாறி வந்து சிங்கள துவேச அரசுகளின் வெளிப்பாடுகளே. அவர்களிடம் சிங்களச் சிப்பாய்களின் சாவுக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என்று எதிர்பார்க்க இயலாது.இக்கொண்டாட்டங்கள் எல்லாம் செத்துப்போன சிப்பாய்களின் பிணங்களின் மேல்தான் நடக்கிறது என்பதை மறவாதீர்கள். ஒரு தார்மீகப்பொறுப்புள்ள ஜனாதிபதி காடையர் போலவும் பயங்கரவாதிகள் போலவும் நடப்பது இராச்சதகுணமும் அரக்கத்தனமுமே

    Reply