பாகிஸ் தானின் ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள பெரிய நகரம் ஒன்றின் பெரும்பகுதியை தாலிபான் வசமிருந்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டின் இராணுவம் கூறுகிறது.
மிங்கோரா நகரம் இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்றாலும் சில பகுதிகளில் சிப்பாய்கள் கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதாக இராணுவம் சார்பாகப் பேசவல்ல மேஜர் ஜெனரல் அதர் அப்பாஸ் கூறினார்.
ஆரம்பத்தில் தாலிபான் தரப்பிலிருந்து வலிமையான எதிர்த்தாக்குதல் வந்திருந்தது. ஆனால் அவர்கள் தப்பித்துச் செல்வதற்கான பாதைகள் துண்டிக்கப்பட ஆரம்பித்துள்ளன என்று உணர்ந்ததை அடுத்து அவர்கள் சண்டையிடாமல் பின்வாங்கிக் செல்வதாக இராணுவ பேச்சாளர் தெரிவித்தார்.
தாலிபான் ஆயுததாரிகள் தற்போது கிராமப் பகுதிகளுக்குள் சென்றுவிட்டார்கள் என்றும், அங்கு அவர்களுக்கு சித்தாந்த அடிப்படையில் மக்கள் ஆதரவு இல்லை என்றும். அவர்கள் பதுங்கியுள்ள இடங்களைக் கண்டுபிடிக்க மக்கள் உதவி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.