வடக்கிலிருந்து இளைஞர் யுவதிகளை பொலிஸ் சேவையில் சேர்த்துக் கொள்ளும் வகையில் முல்லைத்தீவில் 2000 ஏக்கர் நிலப்பரப்பில் பொலிஸ் பயிற்சிக் கல்லூரி நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ன தெரிவிக்கின்றார்.
இந்த காணி ஒதுக்கீடு தொடர்பாக அரசாங்கத்திடம் கோரிக்கை முன் வைக்கபடப்டுள்ளதாகவும் தெரிவிக்கும் அவர் முதற் கட்டமாக 1000 தமிழ் இளைஞர் யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்பட விருப்பதாகவும் தெரிவிக்கின்றார்.
இடம் பெயர்ந்துள்ள மக்களின் மீள் குடியேற்த்தின் பின்னரே இந்த ஆட்சேர்ப்பிற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள போதிலும் தேவை ஏற்பட்டால் அதற்கு முன்னதாகவே பின்னனி ஆராயப்பட்டு ஆட்சேர்ப்புகள் இடம் பெறலாம் என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.