இடம் பெயர்ந்து வந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் ஒன்றை அரசாங்கம் அமுல்ப்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில் ஜனாதிபதி செயலகமும் பொலிஸ் திணைக்களமும் இணைந்து அடையாள அட்டைக்குரியவரின் விரல் அடையாளங்களுடன் கூடிய அடையாளஅட்டைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவைகள் மற்றம் மீள் குடியேற்ற அமைச்சின் செயலர் யு எல் எம் ஹால்தீன் தெரிவித்துள்ளார். முகாம்களில் உள்ள 10 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் இந்த அடையாள அட்டை வினியோகிக்கப்படவுள்ளது. இவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
முகாம்களில் 2 இலட்சத்தி 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருக்கின்றனர். இவர்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்படும் போதும், மற்றும் வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கும், இந்த அடையாள அட்டை மிகவும் உபயோகப்படும் என குறிப்பிட்டுள்ளார்
Nila
புலிகளும் அரசும் சேர்ந்து எம்மக்களுக்கு இருசந்ததிக்கான அடையாளத்தையே பறித்து விட்டு என்ன அடையாள அட்டை கொடுக்கிறீர்கள். அடிமைகள் என்ற அடையாள அட்டையா? சுவாசிப்பது போன்றது தான் சுதந்திரமும். இதை பறிப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. உன் சுதந்திரத்துக்காக இன்னோருவனின் சுதந்திரத்தை பாதிப்பாயானால் நீயும் ஆதிக்க வெறியனே.