இந்த வருடம் முதல் ஹஜ் கடமைக்குச் செல்வோர் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டையே பயன்படுத்த சவுதி அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த வருடம் முதல் புனித மக்காவுக்குச் செல்லும் ஹாஜிகளின் கடவுச்சீட்டுக்கள் சகல நாடுகளுக்குமான சர்வதேச கடவுச்சீட்டாக இருக்கவேண்டுமென சவுதி அரேபியாவின் ஹஜ் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறை குறித்து ஏற்கனவே முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் வை.எல்.எம். நவவி தெரிவித்துள்ளார். இதேவேளை முன்னதாக புனித ஹஜ் கடமைக்காக விஷேட கடவுச்சீட்டுக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.