படையி னரின் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவத்தின் நிமித்தம் இன்று முதலாம் திகதி முதல் மூன்றாம் திகதி வரையும் கொழும்பில் 21 பாடசாலைகள் மூடப்படுமென கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார அறிவித்துள்ளார்.
இன்று முதல் மூன்றாம் திகதி வரையும் மூடப்படுகின்ற பாடசாலைகளின் பெயர் விபரம் வருமாறு, ரோயல் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, மஹாநாம கல்லூரி, யசோதரா மகளிர் வித்தியாலயம், போல் ஹென்கொட மஹாமாத்ய வித்தியாலயம், கொழும்பு தெற்கு டட்லி சேனநாயக்க வித்தியாலயம், லும்பினி கல்லூரி, மாளிகாவத்தை பாரன் ஜயதிலக்க வித்தியாலயம், மருதானை அசோகா வித்தியாலயம், கொம்பனித்தெரு புனித ரோசரி சிங்கள வித்தியாலயம், கொம்பெனித்தெரு புனித ரொசரி தமிழ் வித்தியாலயம், கொம்பனித்தெரு ரி. பி. ஜாயாக் கல்லூரி, கொம்பனித்தெரு அல் இக்பால் கல்லூரி, இசிப்பத்தான கல்லூரி, பொரல்ல சுசமயவர்தன வித்தியாலயம், பொரல்ல பண்டாரநாயக்கா வித்தியாலயம், வாழைத்தோட்டம் அல்- ஹிக்மா கல்லூரி, பத்தரமுல்லை சிறிமபோதி வித்தியாலயம், மாலபே ராகுல வித்தியாலயம் ஆகியனவே மூடப்படுகின்ற பாடசாலைகளாகும்.