இலங்கை அரச படையினர் மீது தெரிவிக்கப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை இலங்கைக்குள்ளேயே இருக்கக்கூடிய நீதிமன்றங்கள் தான் விசாரிக்குமே தவிர அவை சர்வதேச அமைப்புகளினால் விசாரிக்க இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லாகம தெரிவித்துள்ளார்.
அரச படையினர் மீதான குற்றச்சாட்டுகள் இலங்கை நீதிமன்றங்களால் மட்டுமே விசாரிக்கப்பட அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் கூறுகிறார் அதேநேரம் நெடுங்காலமாக யுத்தத்தால் பீடிக்கப்பட்டிருந்த நாட்டை அதிலிருந்து வெளிக்கொண்டுவந்து, தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் இயன்ற காரியங்கள் அனைத்திலும் இலங்கை அரசாங்கம் ஈடுபடும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
Kulan
அதை அரசு தீர்மானிக்க இயலாது. அரசிடம் நீதி இல்லை என்றுதானே தமிழர்கள் உலகம் முழுவதும் தெருத்தெருவாய் கத்தினார்கள். வழக்கு எங்கு தொடரப்படுகிறதோ அங்கே சமூகமளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உண்டு. ஐரோப்பாவில் நடந்த பல பாலியல் வல்லுறவு; நீதியற்ற தீர்ப்புக்களால் சர்வேச நீதி மன்றில் தொடரப்பட்ட வழக்குளில் பல உயர்நீதிமன்று கொடுத்து தீர்ப்புக்கு மாறாகக் கொடுக்கப்பட்டது என்பததை அறிக. தமிழர்களின் நலன் கருதி இதற்கான ஒரு தகமையுள்ள பிரத்தியேக குழு தயார்படுத்தப்படுவது அவசியம். இயலாது என்று ஒன்று இல்லை. சரியான வழியைத் தேடித் தெரிந்து கொண்டு திட்டமிட்டபடி செயற்பட்டால் வெற்றி நிச்சயம். இதை வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் செய்யத்தவறினால் நீவீர் சரித்திரத்தில் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர்களாவீர். இராசபக்ச குடும்பம் இன்று ருசி கண்ட பூனைகள். தொடர்ந்து இனவழிப்பை நடத்தத்தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகள் இவர்களின் இனவழிப்பு வேகத்தைக் குறைப்பதாகவும் இருக்கும்
KUNALAN
குலன்! நீங்கள் இப்படியெல்லாம் நல்லது சொல்லி எம்மைக் கெடுக்க முடியாது. இப்படியான வேலைகளெல்லாம் செய்து எமக்கு பழக்கமில்லை. கொடி பிடித்து/ கூச்சல்போட்டு/ சாலை மறியல் செய்து/ எதையாவது கட்டிடத்தை நொறுக்கி…/ இப்படி ஏதாவது த்ரில்லிங் இருந்தால் சொல்லுங்கோ; வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுக் கீப்பிட்டுப் போட்டு; அப்படியே காலாறக் கொஞ்சம் நடந்து வந்து போராடிவிட்டு வரலாம். அதை விட்டுவிட்டு நீங்கள் ஏதோ பயனுள்ள காரியமாகச் சொல்லி எங்களைத் திசை திருப்ப வேண்டாம்.
போங்கோ குலன். உங்கள் சக்தியெல்லாம் புறங்குடத்தில் வார்த்த நீர்தான் போங்கள்.
குணாளன்.
பார்த்திபன்
குலன்,
ஏற்கனவே இராசபக்ச குடும்பத்தை அமெரிக்காவில் கூண்டில் ஏற்றுகின்றோமென்று ஒரு தொகுதி பணத்தை சுருட்டி முடித்தார்கள். இப்ப மீண்டும் உங்க கோரிக்கையை வைத்து “திட்டம் 2” என புதுப்பெயரிட்டு அடுத்த சுருட்டலை நடத்துவார்கள். வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இதைத் தான் ஒழுங்காகச் செய்வார்கள்.
BC
//“திட்டம் 2″ என புதுப்பெயரிட்டு அடுத்த சுருட்டலை நடத்துவார்கள்.//
இதில் என்ன சந்தேகம்.மிகவும் ருசி கண்ட புலிகள்.
Kulan
குணாளன்; பார்தீபன்! எனக்குப் புரிகிறது உங்களின் கசப்பான அனுபவம். நீங்கள் சொன்னதே இதுவரைகாலமும் நடந்தது. சுருட்டிய பணத்தின் ஒருபங்கையாவது புண்ணியத்துக்குச் செலவிடலாமே. எமக்குத் தெரிந்தததைக் கூறாவிட்டால் எல்லாம் முடிந்தபின்பு கேட்பார்கள் “தெரிந்தனீங்கள் சொல்லியிருக்கலாம் தானே என்று. இந்தச் செயல் திட்டத்தை செயற்படுத்தப் பணம் தேவைப்படும் என்பது உண்மை. கடசிப்போர் என்று சேர்த்த பணத்தின் கருத்து இப்பதான் புரிகிறது. குணாளன்; பார்த்தீபன் நடந்து முடிந்தது புலிகளுடனான கடசிப்போரா இல்லையா? புலம் பெயர்ந்த புலிப்பினாமிகளின் நாசுக்கான கூற்றை மக்கள் தான் புரிந்து கொள்ள வில்லை என்று எண்ணுகிறேன். சொந்தநாட்டினுள் நீதி கிடைக்காதவர்கள் தம் தனிப்பட்ட வழக்கை மனிதஉரிமைகள் நீதி மன்றில் ஏற்றலாம் என்கிறது சட்டம். புலிகளுக்கு ஊன்று கோலாக இருந்த புலம் பெயர் புலிப்பினானிகள் செய்த வரலாற்றுக்கவறுகளை சரி செய்வதற்காகவாவது தாம் சுருட்டிய பணத்தின் ஒரு பகுதியை மனச்சாட்சிப்படி இப்படியான நீதியான செயல்களுக்குப் பயன்படுத்துவார்களானால் கொஞ்ச புண்ணியமானவாவது இதுக்கும்.
palli
குலன் சர்வதேசம் என்றாலே அமெரிக்காதான் என ஒரு பொய்யான முக மூடி அனைவராலும் கொண்டு வரபட்டு விட்டது;அதுக்கு யார் காரணம் என தெரியவில்லை; ஆனால் கண்டிப்பாக எம்மின மக்களுக்கு நடந்த கொடுமைகழுக்கு சர்வதேச கோட்டில் அரசை நிறுதா விட்டால் ;எமது நாட்டில் அல்ல உலகமே சண்டிதன நாடுகளாக மாறி அப்பவி மக்களை அழித்து விடும்; இதுக்கு ஒரு உதாரனம் சதாமை சர்வதேச கோட்டில் நிறுத்தியா தண்டனை கொடுத்தார்கள்? இந்த தவறை செய்தது சர்வதேசமா? அல்லது அமெரிக்காவா?இந்த தவறுகளை சர்வதேசம் கவனியாவிட்டால் அன்று ஈராக்; இன்று இலங்கை; என்றுமே பாலஸ்தீனம் இப்படி அழிவுகள் தொடரும்; இன்னும் சொல்ல போனால் வடகொரியா சர்வதேசத்தைய்யெ மிரட்டும் அளவுக்கு செயல்படுகிறது; மகிந்தா குடும்பமோ சர்வதேசத்திடம் கடன் கேக்கும் மட்டும் காலில் விழுவதும் பின் லுங்கியை மடித்து கட்டி அறிக்கை விடுவதுமாகவே இருக்குது;
ஸ்ரேல் ஜனனாயகம் பற்றி பேசுகிறது; இது அனைத்துக்கும் காரனம் சர்வதேச சட்டநடவடிக்கை இயலாமையே. ஈரான் மீது ஈராக் தாக்கும் போது அமெரிக்காவுக்கு ஈராக் நட்ப்பு நாடு; இப்போது அதுவே நடப்பு நாடாக உள்ளது அமெரிக்காவுக்கு; அதேபோல் புலியை அழிப்பதால் இந்தியாவுக்கு இலங்கை செல்லபிள்ளை ஆனால் அதே செல்லபிள்ளை சீனா என்னும் இந்தியாவின் கணக்கு வாத்த்யாரை தமது கோட்டையிலே பின்புற வழியாக எடுத்து கொண்டது காலபோக்கில் இந்தியாவின் எதிரி நாடுகள் வரிசையில் இந்த செல்லபிள்ளையும் அடங்கலாம்;ஆகவே சட்டம் என்பது மதிக்கபட வேண்டும் அது சர்வதேசமென்றாலும் சரி தேசம் என்றாலும் சரி; இல்லாது போனால் அரசுக்கும் பயஙரவாதத்துக்கும் உள்ள வேறுபாட்டை பார்க்க பூத கண்ணாடிதான் தேட வேண்டும்;
Kulan
உண்மை தான் பல்லி! அதனால்தான் நீதிகாக்கப்படும் போதுதான் குற்றங்கள் முற்றாக தடுக்கப்படாவிட்டாலும் குறைக்கப்படும். நீதியின் முன் இராச்சதர் குடும்பம் நிறுத்தப்படாவிட்டால் புலம்பெயர் தமிழர்கள் செய்வது தமிழ்துரோகமில்ல சர்தேசத்துரோகம்.
சதாம் குசெயில் சர்வதேசமன்றில் நிறுத்தாமைக்குப் பலகாரணங்கள் உண்டு. 1)உலகம் முழுவதும் அவருக்கு எதிர்ப்பு இருந்தது. 2) உள்நாட்டிலும் போதியளவு பகை இருந்தது. 3) எம்மினத்தைப்போல் பண ;அறிவுப்பலத்துடன் இராக்கியர்கள் வெளிநாடுகளில் இல்லை. 4) அமெரிக்காவுக்கு ஒரு பிடிமானம் இருந்தது குருடிஸ் இனத்தவதை இரசாயணக் குண்டு போட்டு அழித்தமை என அடுக்கிக் கொண்டு போகலாம். இது சர்வதேச மனிதஉரிமை மீறல் சட்டத்தின் கீழ் அமெரிக்காவும் தண்டனைக்கு உள்ளாக வேண்டி இருந்திருக்கும். இதை அமத்தி அடக்கவே இராக்கிய நீதிமன்ற முதன்மை நீதிபதி குருடிஸ் இனத்தவராக அமர்த்தப்பட்டார் . எப்படி இருக்கிறது நாடகம். வீரோ பவர் என்றார்களே அமரிக்கா ஈராக்குக்குள் போகும் போது எதிர்த்த இரஸ்சிய சீனா ஏன் வீரோ பவரை பாவிக்கவில்லை. வீடோ கீடோ எல்லாம் வெறும் சொல்லுக்குத்தான். எல்லா ஆயுதவலுக்கொண்ட ஆதிக்கவெறியரது நாடுகள் எல்லாம் ஒரே மொழியைத்தான் பேசுகின்றனர். எமக்குத்தான் அது சரியாகப் புரியவில்லை. எதிர்கிறமாதிரி எதிர்த்து குடுக்கிறமாதிரி கொடுப்பார்கள். எல்லாம் ஒருகுட்டையில் ஊறிய மட்டைகளே.
போரில் தோற்றுப்போன புலிகள் குறைந்தபட்சம் நீங்கள் சுருட்டிய பணத்தில் எம்மக்களுக்கான நீதியைத் தேடுங்கள். இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துங்கள். உங்களால் அவமானப்பட்டு கூனிக்குறுகிய நிற்கும் எம்மினத்துக்கு சிறுநின்மதியாவது கிடைக்கும். செய்வீர்களா?
Raj
சட்டம் என்ன சட்டம் என உதறித்தள்ளுமளவிற்கு இலங்கை அரசைக் கடுப்பேற்றியதே இந்த புலன்பெயர் புலிப்போராட்டமே! எமது சனம்பற்றி ஆகா ஓகோ என்று புலுடாவிடும் அமைப்புகள் புலிகளுக்கு அழுத்தம் பிரயோகிக்காமையே இந்த பேரழிவுக்கு ஊக்கியாக அமைந்தது என்பது உண்மையே. இரு தரப்பிற்கும் கண்டனம் வைத்துக்கொண்ட அதே வேளை புலம்பெயர் மக்களின் உண்மையான ஓர் பிரதிநிதித்துவத்துடன் ஏககாலத்தில் மகிந்தாவுடன் ஓர் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தால் இந்த இழப்பில் பாதி குறைவடைந்திருக்கும் என்ற செய்தியை நான் யாருடன் பகிருவதும் யார் கேட்பதும்? இப்போ சட்டம் சர்வதேசம் என உலகிற்கு பாடம் வைக்கும் நிலையிலா நாம் உள்ளோம்?.முதலில் புலிப்பிரமையிலிருந்து எம்மக்கள் வெளிவந்தாலே போதும் எம்சமுகம் உருப்பட்டதாகிவிடும். முதலில் நமக்குத்தெரிந்த 5பேரையாவது தெரிந்து அவர்கள் மனதில் கருணை காருண்யம் அன்பு சேவை என்பவற்றை விதைத்து கொலைவெறியற்ற சமுகம் உருப்பெற முயற்சிப்போம்! நன்றி.
thevi
மகிந்தராஜபக்ச கொமபனி என்ன வன்னிக் காட்டிற்குள் மறைந்து இருந்தா அரசியல் செய்யப் போகின்றார்கள். முப்பது வருடங்கள் அவர்கள் நிலைத்திருக்க முடியாது. எங்கும ஓடி ஒளிய முடியாது. வெளியே தானே இயங்க வேண்டும்.
BC
Raj சென்னது போல் முதலில் கொலைவெறியற்ற சமுகம் உருப்பெற முயற்சிப்போம்.
பார்த்திபன்
என்னைப் பொறுத்தவரை போரில் பல்லாயிரக் கணகக்காக மக்கள் கொல்லப்பட்டதற்கு எந்தளவிற்கு அரசின் மீது குற்றம் சுமத்த முடியுமோ, அதேயளவிற்கு புலிகளிலும் குற்றம் சுமத்தலாம். எத்தனையோ நாடுகளும், பொதுஅமைப்புகளும் மக்ககள் அழிவு ஏற்படப் போவதை எச்சரித்து புலிகளை ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு சொல்லியும் புலிகள் அப்போது செவி சாய்க்கவில்லை. கடைசி புதுக்குடியிருப்பு வீழ்ந்த போதாவது புலிகள் அதனைச் செய்திருக்கலாம். அதனால் பல்லாயிரக் கணக்கான மக்கள் அழிவுகள் இல்லாது போயிருக்கும். ஆனால் அதில் கூட புலித் தலைமைகள் இறுதி நேரத்தில் தமது உயிர்களைக் காப்பாற்றவே சரணடைய முனைந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கான போராளிகளுக்கு சயனைட் கடிக்க போதனை செய்தவர்கள் எவரும், தாம் அதை மேற் கொள்ள இறுதி நேரத்தில் கூட விரும்பவில்லையென்பதே கசப்பான உண்மை.
இந்த நிலையில் இலங்கை அரசை கூண்டிலேற்றி வழக்கு வாதங்கள் நடத்தலாமென இன்னும் காலத்தைக் கடத்துவதை விட, இலங்கை அரசிற்கு உலக நாடுகள் ஒரு அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்கள் பிரைச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை கொண்டு வர முயற்சிப்பதே முக்கியம். இதற்கு இலங்கை அரசு இணங்காது போனால், அதன் பின் இந்த வழக்கு வாதங்களை கையிலெடுக்கலாம். எனவே ஐ.நா வோ அல்லது மற்ற பொதுநல அமைப்புகளோ முதலில் பாதிக்கப்பட்டு வந்து அகதிகளாகி இருக்கும் அந்த மக்களை சாதாரண வாழ்க்கைக்கு திருப்பும் முயற்சிகளை மேற் கொள்ளட்டும். அது போல் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு தமிழரும் அந்த மக்களுக்கு எந்த வகையிலாவது முடிந்த உதவிகளைச் செய்யவும் முன் வாருங்கள். ஆயுதங்களை வாங்க கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்தவர்கள், இன்று அன்பிற்கு ஏங்கும் அந்த மக்களின் நல்வாழ்விற்காக அள்ளிக் கொடுக்காவிட்டாலும், கிள்ளியாவது கொடுங்கள். அதன் மூலம் மனித நேயத்தை மீண்டும் கட்டியெழுப்புங்கள்.