லண்டன் மாநகரத்தின் மிகப் பிரபலமான ஓர் அடையாளச் சின்னம் இன்று தனது 150வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. உலகப் பிரசித்தி பெற்ற பெரிய கடிகாரங்களுள் ஒன்றாக அறியப்படும் ‘பிக்பென்’ கோபுரம் ஒன்றரை நூற்றாண்டுகாலமாக மக்களுக்கு நேரம் காட்டிவருகிறது.
சரியாச் சொல்ல வேண்டுமென்றால் ‘பிக்பென்’ என்பது அந்த கடிகாரத்தோடு சேர்ந்துள்ள பெரிய மணியைத்தான். ஆனால் காலப்போக்கில் அந்த கடிகாரத்துக்கும் அந்தக் கோபுரத்துக்கும் அந்தப் பெயர் ஏற்பட்டுவிட்டது.
இந்த மணிக்கோபுரம் லண்டன் மாநகரத்தின் மிக முக்கியச் சின்னமாக பிரபலம் அடைந்துவிட்டது. லண்டனுக்கு வரும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்தக் கோபுரதின் அருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
பிக்பென் கடிகாரம் ஓட ஆரம்பித்தது 1859ஆம் ஆண்டும் மே மாதம் 31ஆம் தேதி.
பார்த்திபன்
//லண்டன் மாநகரத்தின் மிகப் பிரபலமான ஓர் அடையாளச் சின்னம் இன்று தனது 150வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறது. //
செய்தியை இன்று (01.06) வெளியிடும் போது “லண்டன் மாநகரத்தின் மிகப் பிரபலமான ஓர் அடையாளச் சின்னம் நேற்று தனது 150வது பிறந்த நாளைக் கொண்டாடியது”. என்றல்லவா வந்திருக்க வேண்டும்.