டெங்கு நுளம்புகளை உருவாக்கும் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக இன்று (1) முதல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அபராதமும் தண்டனையும் விதிக்கப்படவுள்ளதாக சுகாதார போசாக்கு அமைச்சு கூறியது.
இது தொடர்பான சட்ட மூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின் பிரகாரம் டெங்கு நுளம்புகளை உருவாக்கும் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் நபர்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்கள் என்பவற்றிடமிருந்து ஆயிரம் ரூபா முதல் 25 ஆயிரம் ரூபா வரை அபராதமும் 6 மாதம் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.