இலங் கையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீண்ட காலமாக வெளிநாடுகளில் தங்கியிருப்பதாகவும், அவர்கள் தங்களது ஜனநாயக கடமைகளை மேற்கொள்ளும் விதமாகவும், தம்மை தேர்ந்தெடுத்த தொகுதி மக்களின் தேவைகளை கவனிக்கும் முகமாகவும் விரைவில் நாடு திரும்ப வேண்டும் என்கிற கோரிக்கைகள் பலதரப்பிலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
இதில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு மாதம் முதல் ஒரு வருட காலம் வரை வெளிநாடுகளில் தங்கியுள்ளனர் என்றும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாறுதல்களையடுத்து அவர்கள் நாடு திரும்ப வேண்டியது மிகவும் முக்கியமானதாக கருதப்படுவதாகவும் பலர் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இவர்களை நாடு திரும்ப வலியுறுத்தும் வகையில் அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நாடாளுமன்ற குழுவின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர்களை விரைவில் தங்களது பணிகளை முடித்து கொண்டு நாடு திரும்பும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா சம்பந்தர் தெரிவித்தார்.
தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அச்சுறுத்தல் இருப்பது புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது என்றும், எனினும் தற்போது வெளிநாட்டில் இருக்கும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை நாடு திரும்புமாறு கேட்டுள்ளதாகவும் சமபந்தர் அவர்கள் கூறுகிறார்.
Nila
இவர்களையும் அப்புறப்படுத்தினால் தானே ஒரேநாடு ஒரே கட்சி என்று ஆகும்.
பார்த்திபன்
கட்சித் தலைவராகவும் நாடாளுமன்ற அணித்தலைவராகவும் சம்மந்தனே இருக்கின்றார். நேற்றைய பிபிசி பேட்டியில் இவருக்கு எத்தனைபேர் வெளிநாட்டுச் சுற்றுலாவில் நிற்கின்றார்கள் என்று கூடத் தெரியவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. அப்படியிருக்க இவரால் அவர்களுக்கு விரைவில் தங்களது பணிகளை முடித்து கொண்டு நாடு திரும்பும்படி அறிவித்தல் விட்டிருக்க முடியும்?? ஆமா அப்படி என்ன பணிக்காக அவர்கள் வெளிநாட்டில் நிற்கின்றார்கள்?? இப்ப சுற்றுலாவும் பணியாகி விட்டதோ??
chandran.raja
இந்த இருபத்திரெண்டும் “அரசனை நம்பி புருசஷனை கைவிட்டவர்கள்” இவர்களின் பரிந்துரைகள் உபதேசங்கள் எல்லாம் தமிழருக்கு புரிந்து கொள்வதற்கு பெரிய கஷ்ரங்களை கொடுக்காது என நினக்கிறேன். அரசியலை விட்டு தமது அசிங்கமான எண்ணங்களை துறந்து அவலப்பட்டிருக்கும் புணர்நிர்மான முகாம்களுக்கு சென்று பணி புரிவார்கள்களேயானால் என்றாவது அவர்கள் மனங்களில் இடம் பிடிப்பார்கள் என்பதே கேள்விக் குறி. இருந்தாலும் அதை செய்யும்படி வலியுறுத்துவதே எமது தர்மமாக இருக்கிறது.
msri
கூட்டணியினர் கடந்தகால தவறுகளை புனராலோசனை செய்யவேண்டும! இந்திய மாயையில் இருந்து விடுபடவேண்டும்! கோத்தபாயாவின் கோரிக்கையை கணக்கில் கொள்ளவேண்டும்! மகிந்தப் பாசிசம் எல்லாம் பெரும்பான்மையே> என்ற போக்கில்>தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களை பிரித்து> இனச்சுத்திகரிப்பையே செயகின்றது! தமிழ்மக்களின் தேசியம்> சுயநிர்னய உரிமை> ஏன் தமிழ் கட்சிகளையே அழிக்கும் நோக்கிற்கு வந்துள்ளது! இதைக் கணக்கில் கொண்டு> தமிழ்மக்களுக்கான உங்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டும்!