400 விடுதலைப் புலிகள் ஊடுருவல்-சோனியா, ராகுல் தமிழகம் வர வேண்டாம் என எச்சரிக்கை

01-sonia-rahul.jpgஅகதிகள் என்ற போர்வையில் 300 முதல் 400 விடுதலைப் புலிகள் வரை தமிழகத்திற்குள் ஊடுருவியிருப்பதாகவும், எனவே சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கடை நிலைப் போராளிகளே இவ்வாறு ஊடுறுவியிருக்கலாம் எனவும், அகதிகள் முகாம்களில் இவர்கள் அகதிகள் போல தங்கியிருக்கலாம் எனவும் உளவுப் பிரிவு தகவல்கள் கூறுகின்றன. இந்தத் தகவலைத் தொடர்ந்து தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக மாநில கடலோரப் பகுதிகளில் தீவிர உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

அகதிகள் போர்வையில் புலிகள் ஊடுறுவியிருப்பதாக கூறப்படுவதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முகாம்களில் சந்தேகத்திற்கு இடமான வகையில் யாரேனும் நடமாடுகிறார்களா என்பதும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சந்தேகப்படும்படியான நடவடிக்கைகளைக் கொண்டவர்கள் பலத்த பாதுகாப்புடன் உள்ள முகாம்களுக்கு அனுப்பப்படுகின்றனர். மற்றவர்கள் மட்டுமே திறந்த வெளி முகாம்களில் தங்க அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையற்ற நிலை காரணமாக, சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவரும் இப்போதைக்கு தமிழகத்திற்கு வருவதைத் தவிர்க்குமாறும் உளவுப் பிரிவு அதிகாரிகள் அவர்களை எச்சரித்துள்ளனராம்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 Comments

  • msri
    msri

    உங்கள் எச்சரிக்கையைப் பார்த்தால்> சோனியாவுக்கு முண்டு கொடுக்கும் கலைஞரும் டில்லிக்குத்தான் போகவேண்டுமோ?

    Reply
  • Nia
    Nia

    இது என்ன புதுக்கதை. பிரபாகரனை முடுக்கிவிட்டு இராஜீவைப் போட்டதே சொனியா என்பதை ஏன் மறைக்கிறீர்கள். கணவனின் கொலையை சுப்பிரமணியசுவாமிகள் மூலம் நிறைவேற்றயது யார்? தொடர்ந்து கட்சியில் அவரை நட்புறவோடு வைத்திருந்தது யார்? பிரபாகரனின் வாக்குமூலம் எடுக்க முன்பே போட்டுத்தள்ளுமாறு உத்தரவிட்டது யார்? கணக்கை கூட்டிக்களித்துப்பாருங்கள் சரியாக இருக்கும்

    Reply
  • மாயா
    மாயா

    // பிரபாகரனை முடுக்கிவிட்டு இராஜீவைப் போட்டதே சொனியா என்பதை ஏன் மறைக்கிறீர்கள்.- நிலா//

    நீங்கள் பிரபாகரன் சாவதற்கு முன் சொல்லியிருந்தால், இதை வைத்தே இந்தியாவை ஆட்டம் காண வைத்திருக்கலாம். சே…. “சோனியா, என்னைக் காப்பாற்று. இல்லையென்றால் உண்மையைச் சொல்லிவிடுவேன்” என்று வெருட்டாமல், உலகம் முழுவதும் போண் அடித்து காப்பாத்துங்கோ என்று மண்டியிட்ட பிரபாகரன் அவ்வளவு முட்டாளா?

    இதை நீங்களாவது நினைவுபடுத்தியிருக்கலாமே நிலா?

    Reply
  • thevi
    thevi

    நியாவிற்கு…. ஏதோ சுகமில்லைப் போலுள்ளது? அல்லது சாண்டில்யன், கல்கி இவர்களின் கதைகளைப் படித்த பாதிப்பாகவும் இருக்கலாம்.

    நாளைக்கு மதிவதனிதான் பிரபாகனைப் பிடித்து கொடுத்தார் என நியா சொல்லுவார்.

    Reply
  • BC
    BC

    எல்லாம் இலங்கை ராணுவம் கொடுத்த அதிர்ச்சி தான்.நியா உளற தொடங்கிவிட்டார்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தலையின் தலையாய பெருமையே நியா போன்று தலையாட்டும் ஆட்டுமந்தைக் கூட்டமாக பல தமிழ் மக்களை மாற்றி அமைத்ததே. இவர்கள் சாதாரண நிலைக்குத் திரும்ப பல வருடங்கள் எடுக்கும்…

    Reply