கள யதார்த்தத்தின் அடிப்படையிலும், மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற்கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதி பூண்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “சிறிலங்கா அரசாங்கமும் அதன் சிங்கள இராணுவ இயந்திரமும் தமிழீழ மக்கள் மீது ஏற்படுத்தியுள்ள மனிதப் பேரவலம் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்களை அவர்களின் பாரம்பரிய வாழ்விடங்களில் இருந்து நிர்க்கதியாக்கி இடம்பெயர்த்து அனைத்துலகத்தின் கண்காணிப்புக்கு அப்பால் சிங்கள இராணுவத்தின் தடுப்பு முகாம்களுக்குள் தனிமைப்படுத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் கடந்த புதன்கிழமை (27.05.09) நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணைக்குழு வன்னியில் இடம்பெற்ற தமிழ் மக்கள் மீதான படுகொலைகளுக்கு நியாயம் வழங்கத் தவறியமை குறித்து எமது விசனத்தையும் கண்டனத்தையும் தெரிவிக்கின்றோம். இராணுவ மேலாதிக்க நிலையின் ஊடாக தாயகத்து மக்களின் வாழ்வு உரிமையினைப் பறித்த சிறிலங்கா அரசாங்கம், தற்போது இராஜதந்திர வழிமுறைகளைக் கொண்டு உலக அரங்கில் நமது மக்கள்மீது போர்ப் பிரகடனம் செய்துள்ளது.
தனக்கு துணையாக அனைத்துலக சக்திகளுடன் இணைந்து இராஜதந்திர செயற்பாடுகளின் ஊடாக தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்த்து எறிவதில் முனைப்பு கொண்டுள்ளது. அதேவேளையில் தமிழீழ மக்கள் அடைந்துள்ள மனிதப் பேரவலத்தினையும், எதிர்கொண்டுள்ள மனிதாபிமான நெருக்கடிகளையும் முன்வைத்து அனைத்துலகத்திடம் பெருமளவில் வெளிநாட்டு வளங்களையும், உதவிகளையும் திரட்டுவதில் சிறிலங்கா கொள்கையளவில் வெற்றி பெற்றுள்ளது.
அந்த வளங்களைக்கொண்டு புனர்வாழ்வு, புனரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் தமிழ் மக்களின் நலனில் சிங்கள அரசாங்கம் மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக காட்டி தான் மேற்கொண்ட தமிழ் இன அழிப்பு பழியில் இருந்து தப்பித்துக்கொள்ளவும் வழி தேடுகின்றது.
rohan
தலைவா தலைவா புல்லரிக்கிறது தலைவா
காலால் ஆணையிடு – நாம் தலையால் செய்கிறோம்!!!
சந்தனம்
உங்கள்கடந்த காலத்தை நாங்கள் மறக்கிறோம் நிகழ்காலத்தை இப்படியேபின்பற்றவும் மனிதம் வாழவழிசெய்யவும்.
பார்த்திபன்
பத்மநாதனுக்கு எனி புலிகளை, தமிழக புலி அரசியல்வாதிகள் தான் திரட்டிக் கொடுக்கணும். ஆனால் அவர்களும் இவருக்கு துரோகிப்பட்டம் இலவசமாக கொடுத்து விட்டதால் உதவ முன் வருவார்களா??
KUNALAN
தமிழரப் பிடிச்ச சனியன் இன்னுந்தான் துலையவில்லையா? இன்னும் இருக்கிறதா?………….
//கள யதார்த்தத்தின் அடிப்படையிலும் மாற்றமடைந்து வரும் உலக அரசியல் ஒழுங்கினை கருத்திற்கொண்டும் துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து வன்முறையற்ற வழிகள் ஊடாக போராட தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதி//
யப்பா… என்ன கொடுமை இது?
சரி; வன்முறையற்ற வழியில்த்தானே போராடப் போகிறார்கள். அப்படியானால் பெரிய பணச் செலவு இல்லைத்தானே? இதுவரை ஆயுதம்/ இறுதிப்போர்/வகைத்துறைவள மேம்பாடு இப்படி ஆயிரத்தெட்டு நியாயம் சொல்லி எம்மிடம் ஏமாற்றிப் புடுங்கிய பணத்தையெல்லாம் இந்தப் பன்னாடைகள் இப்போ வன்னி மக்களுக்கு உடனே கொடுக்க வேண்டும். எங்கே யாரிடம் கொடுக்கப் போகிறார்கள் என்று தயவு செய்து யாராவது கேட்டுச் சொல்லுங்கள். அத்துடன் வெளிநாடுகளில் உள்ள 90சதவீதமான தமிழ் வர்த்தக நிலையங்களில் புலிகளின் பணம் (அதாவது பாவப்பட்டு ஏமார்ந்த நமது பணம்) இருக்கிறது. அவற்றையும் உடனே பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இல்லையேல் அவற்றை வெளியே கொண்டுவருவதற்கான பல இயக்கங்கள் வெளிநாடுகளில் தோன்றப் போவதையும்/ பல அனர்த்தங்கள் விளையப் போவதையும் நாம் சந்திக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வரப் போகின்றது. காணாமல்ப்போகும் தமிழ் வர்த்தகர்கள் பற்றிய செய்திகள் இந்த நாடுகளிலும் மலியப் போகிறதே பராபரமே…!
குணாளன்
msri
கண்கெட்டபின் சூரிய வணக்கம் எனபர்! இந்நிலையில் உள்ளது> பத்மநாதன் அறிக்கை: தேச கால வர்த்தமானம்> இடம் பொருள் ஏவல்> எதரி நண்பன் மக்கள் பற்றிய கரிசனை எதுவுமற்ற நிலையால் நீங்களும் அழிந்து மக்களையும அழித்து>அநாதைகளாக்கி > சிங்களப்பெரினவாதத்தின் காலடியில் போட்டுள்ளீர்கள்! இந் லட்சனத்தில் உங்களுக்கோர் அகிம்சைப்போர்! மகிநதா இன்று “இலங்கையில் சிறுபான்மை என்ற ஒன்றே இல்லை” என்கின்றார்! இதன் உள்ளார்ந்தம்> “எல்லாம் பெரும்பான்மை” என்பதே! இதை நோக்கியே சகலதையும் செய்கின்றார்!
Nila
புலிகள் வளர்த்தால் குடும்பி வழித்தால் மெட்டையாக்கும். கொலைக்கருவிகளில் மனநோய் கொண்ட பிரபாகரன் வழித்தோன்றல்களே. இது தலைவனுக்குச் செய்யும் துரோகமல்லவா. உங்கள் தலைவன் சத்தியாக்கிரகம் இருந்த மதிவதனியக்காவை விரும்பால் தூக்கிக் கொண்டுபோய் கல்யாணம் கட்டுவார். சத்தியாக்கிரகம் அதாவது பட்டிணிப்போராட்டம் சரிவராது என்பார். ஆனால் ஆட்டுக்குடல் பொருத்திய பார்த்தீபன் எனும் திலீபனை நல்லூர் முருகனடியில் பட்டிணி போட்டுக் கொல்வார். திலீபன் பார்த்தீபன் எனும் சரித்திரப் பெயர்களை ஏனப்பா மாசுபடுத்துகிறீர்கள்? அகிம்சை போராட்டம் என்று ஆயுதப்போராட்டமற்ற ஒரு போராட்டத்தை உச்சரித்தீர்களோ தலைவரின் ஆத்மா பேயாய் வந்து உங்களை கிம்சைப்படுத்தும். தலைவன் தலைவன் என்று தலையைக் கவுட்டுவிட்டு தலைவன் தலைபோனபின்னும் தலைவனுக்கு ஆப்பா?