இரத் மலானை விமான நிலையத்திற்கும் பலாலி விமான நிலையத்துக்குமிடையான பயணிகள் விமான சேவையின் பாதையில் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதுவரை காலமும் இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானங்கள் கொழும்பு புத்தளம்மன்னார் கடல் வழியாக சென்று குடா நாட்டில் தீவுகளையும் தாண்டி பலாலி விமான நிலையத்தை சென்றடைந்தன. இதனால், அதிகளவு நேரம் பயணம் இடம்பெற்றுவருகிறது. அதேபோல, பலாலியில் இருந்தும் இதே பாதையூடாகவே இரத்மலானை விமான நிலையத்தை விமானங்கள் வந்தடைந்தன.
வன்னியில் யுத்தம் முடிவுற்றதையடுத்து தற்போது இரத்மலானை விமான நிலையத்திலிருந்து நாட்டின் தரைப்பகுதியூடாக வன்னிப்பகுதியால் வடக்கே விமானங்கள் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாதையின்படி இச்சேவை நடைபெற்றால் பயணநேரமும் சுமார் 20 நிமிடநேரம் குறையும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.