ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையை நேற்றுமுன்தினம் சந்தித்து பேச்சு நடத்தினார்.
ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் முதல் மூன்று அமர்வுகளும் முடிவுற்ற நிலையில் வழமையான அமர்வு நேற்றுமுன்தினம் பிற்பகல் ஆரம்பமானது.
இந்த வழமையான அமர்வு ஆரம்பமாவதற்கு சுமார் 2 மணி நேரத்திற்கு முன்னர் ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம்பிள்ளையை சந்தித்து பேசியதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா விலிருந்து தெரிவித்தார்.
வழமையான அமர்வின்போது அமைச்சர் மஹிந்த சமரசிங்க இலங்கையின் சார்பில் விசேட அறிக்கையொன்றையும் சமர்ப்பித்தார்.