அனுராதபுரத்திற்கு எரிபொருளை எடுத்துச் சென்ற சரக்கு ரயிலின் என்ஜின் தலாவ ரயில் நிலையத்தில் நேற்று தடம் புரண்டு தீப்பற்றியதாக அனுராதபுரம் ரயில்வே பிரதான கட்டுப்பாட்டாளர் எம். எம். எஸ். மனதுங்க தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகளும், பொலிஸாரும் தனித்தனியாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்கு எரிபொ ருளை எடுத்துச் சென்ற ரயில் தலாவ ரயில் நிலையத்தில் நேற்று காலை 7.00 மணியளவில் தடம் புரண் டது.
ரயிலின் என்ஜின் உட்பட மூன்று எண்ணெய் கொள் கலன்கள் தடம்புரண்டன. இதனால் ரயில் என்ஜின் தீப்பிடித்து எரிந்தது.
அனுராதபுரம் தீயணைப்பு படையினரின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
ரயில் என்ஜினில் ஏற்பட்ட தீயினால் உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை. அத்தோடு ரயிலின் பெட்டிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை.
இச்சம்பவம் ஏற்படும் போது ஐந்து ரயில் கொள்கலன்களில் 29 ஆயிரம் லீட்டர் டீசலும், ஒரு கொள்கலனில் பத்தாயிரம் லீட்டர் பெற்றோலும் இருந்தன. இச்சம்பவத்தினால் அவற்றுக்கு எதுவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.