இன நெருக்கடியிலிருந்தும் மீட்சி பெறுவதற்கான ஜப்பானின் உதவியை நாடியிருக்கும் இலங்கை அரசாங்கம் அதேசமயம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை நிராகரித்திருக்கிறது.
பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஜப்பானிய அரசிடமிருந்து நேரடி உதவியை பெற்றுக் கொள்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக நேற்று முன்தினம் டோக்கியோவில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
விவசாயம், உல்லாசப் பயணத்துறை, மீன்பிடித்துறை, சிறிய தொழிற்றுறைகளை மேம்படுத்த ஜப்பான் உதவி வழங்கும் என்று அரசு எதிர்பார்ப்பதாகவும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஜப்பானிய சர்வதேச வர்த்தக அமைச்சர் ரொசிகிரோ திகாயுடனும் வெளிவிவகார அமைச்சர் ஹிரோ பியூமிறாகசோனேயுடனும் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
செய்தியாளர் மாநாட்டில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மரணமடைந்தமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதை அரசாங்கம் விரும்புகின்றதா என்று கேட்கப்பட்ட போது, இல்லை அந்த மாதிரியான மனப்போக்கை நாம் ஏற்கமாட்டோம். அது தண்டனை வழங்குவது போன்ற தன்மையுடைய விசாரணை’ என்று அமைச்சர் பீரிஸ் தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்தது.
எதிர்மறையான ஒவ்வொன்றையும் வலியுறுத்துவதற்கு உலகம் முயற்சிக்கக் கூடாது. அதாவது இலங்கைக்கு கடினமான விடயங்களை ஏற்படுத்துவதற்கு சாதகமானவற்றையும் பொருளாதார தடைகளுக்கான அச்சுறுத்தலான விடயங்களையும் முயற்சிக்கக் கூடாதென்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை அரசின் மீது தேவையில்லாத அழுத்தத்தை ஏற்படுத்துவதானது நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலையெடுப்பதற்கு இட்டுச் சென்றுவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்தத் தருணத்தில் நாட்டுக்கு தேவைப்படுவது அதரவும் புரிந்துணர்வும் பரிவிரக்கமுமே என்றும் கண்டனம், தீர்ப்பு, வெளிக்காட்டும் தன்மை என்பன அல்ல என்றும் பேராசிரியர் பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
msri
எதிர்மறையான விடயங்களுக்கு சர்வதேசம் முயற்சிக்கக் கூடாதோ? நீங்கள் செய்யக்கூடிய பாதகச்செயல்கள் அத்தனையும் செய்வீர்கள்> அதை ஒருவரும் கண்டுகொள்ளக்கூடாது! உதவிகளுக்கு மாத்திரம் கையேந்திச் செல்வீர்கள்! இதுவும் ஒரு மகிந்த சிந்தனை யுக்கதிதான்!
மாயா
பாவம் பீரீஸார். புலிகளோடு சமாதான உடன்படிக்கை சுவர் என்று என்னிடம் அடிச்சு சொன்னவர். பிறகு மேட் த மிஸ்டேக் என்றவர். இப்ப டிராக்குக்கு வந்துட்டார்.