பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டத்துக்கு ஆலோசனை கோருகிறார் செ.பத்மநாதன்

pathmanathan00.jpgதமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது ஆகும்.

தாயகத்தின் தற்போதைய நிலையில் – சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பவையே எங்கள் முன்னால் இன்று உள்ள தலையாய கடமையாகும்.

அதன் தொடர்ச்சியாக – தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தேசிய தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைக் காணுதல் என்பதும் எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும். இந்தப் பணிகளை நிறைவேற்றி – நாம் கடந்துசெல்ல வேண்டிய பாதை மிகவும் நீண்டதும் சவால்கள் நிறைந்ததும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.

சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து – ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் – தமிழீழ மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் பார்க்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது.

சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது. முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் தமது தனித்துவத்தினையும் அடையாளத்தினையும் பேணிக்கொள்வதற்கும் எதிரானது.

சிறிலங்கா அரசின் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத் திணிப்பை எதிர்த்துப் போராட இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் இப்போது உருவாகிவிட்டது.

சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தப் பட்டறிவிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த இனப் படுகொலையை எம்மால் தடுத்துநிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும் தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்களை தமிழர்கள் நடத்தினோம். எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொண்டோம்.

இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் முடியவில்லை. நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.

ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய்நகர்த்தல்களின் பின்புலத்திலேயே தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா நடத்தியது.

தற்போதும் – இதே அணுகுமுறையினைப் பின்பற்றியே – மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்விலும் சிறிலங்கா அரசு வெற்றி ஈட்டியது.

தொடர்ந்தும் – அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்கள மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.

நமது அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. நமது தேசத்திற்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?

நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.

இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது எவ்வாறு?

இதற்கு நமக்கு உள்ள வாய்ப்புக்கள் எவை?

நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எத்தகையவை?

இவை பற்றி நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்க வேண்டும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்கும். அந்த நம்பிக்கையுடன் – நமது விடுதலைத் தாகம் தணிந்துவிடாமல் – நமது விடுதலைச் சுடர் அணைந்துவிடாமல் – தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழ் மக்களின் துணையுடனும் நியாயத்தின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவுடனும் நமது அடுத்த கட்டப் போராட்டத்தை நாம் முன்நோக்கி நகர்த்த வேண்டும்.

யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும். நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.

இந்தத் தொடர்புக்கு வழிசமைக்கும் முகமாக மக்கள் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த முகவரிக்கு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி: prdinternational@gmail.com

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 Comments

  • ராபின் மெய்யன்
    ராபின் மெய்யன்

    சொல்வது ஒன்று, செய்வது அதற்கு எதிர்மாறானது என்பது தான் தனிப்பட்ட முறையிலும் குழுவாக இருந்த போதும் உங்கள் வரலாறு. இனிமேலும் இரண்டு சயனைட் குப்பிகளை கழுத்தில் தொஙக விட்டு வெள்ளைக் கொடி பிடித்துச் சரணடைந்த கூத்தெல்லாம் போதும்… முதலில் தயவு செய்து மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்.. அவர்களிடம் அநியாயமாக பிடுங்கிச் சேர்த்த பணத்தை திருப்பிக் கொடுங்கள்.. அதன் பின்னர் உங்களது மக்கள் கரிசனை மீது நாம் பேசுவோம்…

    Reply
  • anpu
    anpu

    //ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் …../// இது கேட்க நல்லாய்த்தான் இருக்குது. ஆனால் நீங்கள் எந்த பெயருக்குக் கீழ் (தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர்) நிண்டு சொல்லுகிறியளோ அதுதான் உதைக்குது. முதலிலை இந்த – – தமிழீழம் – -விடுதலை- – புலிகள்- – இந்த செட்டைகளை முதலில கழட்டிப்போட்டு பிறகு கதையுங்கோ சனங்கள் கேட்கும். இதுகளில ஏதாவது ஒரு செட்டை பூட்டினவையும் அதை கழட்டுங்கோ. பிறகு தமிழ் மக்கள் எண்டு கதையுங்கோ. கேட்கச் சனம் வரும்.

    Reply
  • BC
    BC

    புலி ஆதரவாளர்கள் சிலர் இப்படி ஒருவரே கிடையாது என்கிறார்கள். அப்படி இருந்தால் ராபின் மெய்யன் சொன்னது போல் மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேளுங்கள்- அவர்களிடம் அநியாயமாக பிடுங்கிச் சேர்த்த பணத்தை திருப்பிக் கொடுங்கள்.

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    /இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் முடியவில்லை. நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை. ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது./–பத்மநாதன்?.

    – கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை.சிங்கள இராணுவம்,இந்திய இராணுவத்தைவிட புத்திசாலிகள் என்கிறீர்களா?.பத்தாயிரமாக இருந்த இலங்கை இராணுவத்தை வல்லரசு நிலைக்கு உயர்த்தியது யாரின் இராஜதந்திரம்?. தமிழ் பேசும் மக்கள் என்று ஒன்றும் கிடையாது. இலங்கைத் தமிழரும், விடுதலைப் புலிகளும் செய்தது சரி, அவர்களும் “நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது”, என்ற நிலையிலேயே செயல்பட்டார்கள், ஒன்றும் “தமிழ் பேசும் மக்களுக்காக” செயல்படவில்லை!. அப்படி செயல் பட்டிருந்தால், தமிழ் பேசும் மக்களின் பிரச்சனைகள் எப்போதே தீர்ந்திருக்கும்!. அதுதான் பிரச்சனையே!, யாழ்ப்பாண வெள்ளாளர் என்று ஒன்று கிடையாது!, இந்த கோணத்தில் நக்கலடித்து விமர்ச்சிப்பவர்கள் கோமாளிகளே!. ஆனால் புல(ன்)ம் பெயர்ந்தவர்களில் கிட்டத்தெட்ட அனைவரும் இவ்வாறு கூறிக் கொள்கிறார்கள்(சமூக அந்தஸ்து?). “ஒரு பெரிய போக்கு”, “அணுகுமுறை”,தோல்வியடைந்ததுதான் இங்கு முக்கியம்.பிரச்சனையில் சம்பந்தப் படாதவர்கள்(தமிழ்நாட்டு தமிழர் உட்பட) ,பிரச்சனையை பற்றி உலக நாடுகளில் “டமாரம் அடித்துக் கொண்டு வந்து” பேசியதுதான்,பிரச்சனை என்று ஒன்று இருப்பதை உலக நாடுகளின் கண்களிலிருந்து மறைத்தது. இதே வழியில்தான் பத்மநாதன் மீண்டும் பயணிக்கிறார். இவர்களின் அணுகுமுறை தமிழ்நாட்டு தமிழருக்கு “சுலபமாக” இருக்கிறது, ஆனால் இவர்கள் “டேன்ஜரானவர்கள்”.

    Reply
  • ஜெயம்
    ஜெயம்

    ரஜபக்சவின் தமிழ் இன அழிப்பு உங்கள் மூலமே நடந்தேறியது. இதை உங்களால் மறுக்க முடியுமா? உங்கள் ஆயுத மோகமும், பணப்பித்தும் மக்களைப் பற்றி சிறிதேனும் உங்களைச் சிந்திக்க விடாமல் அவர்கள் முதுகில் ஏறி உஙகளை சவாரி விட வைத்தது. அந்த அப்பாவி மக்களது முதுகில் குத்திய உங்கள் துரோகத்தனத்தை அவர்கள் அவ்வள்வு இலகுவாக மறந்து விடுவார்கள் என்பது உங்கள் அரசியல் அறிவுப் பற்றாக்குறைக்கு இன்னொரு சான்று…

    Reply
  • thurai
    thurai

    தமிழரின் உருமைகள்,விடுதலை என்னும் பெயரால் ஈழத்தமிழினத்தை பாதாளத்தில் தள்ளிவிட்டவர்களே இவர்கள்.

    இவர்கழுடன் கூடி கோடி, கோடியாகப் பணத்தை சுருட்டியவர்கள் எங்கே? முதலில் இப்படியான தமிழினத்தை ஏமாற்றியவர்களை தேடிப்பிடித்த பின்பே தமிழரிற்கு விடுதலையும்,உருமையும் பற்ரிப்பேச முடியும்.

    துரை

    Reply
  • palli.
    palli.

    //காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும்.//

    உன்மைதான்;;;;; ஆனால் கடந்த காலம் சரி ஆனால் அது உங்களதா? அல்லது புலிகளதா? எதுவாயினும் நாகரிகமற்றதும் வெளிச்சத்துக்காக
    வேடையே எரித்ததும்தான்; சரி விடயத்துக்கு வருவோம் உங்களுடைய கடந்த காலம் என பார்த்தால் ஆரம்பகாலத்தில் மணிக்கூட்டு வியாபாரியாக(இந்தியா&சிங்கபூர்) பின்பு வக்கிலுக்கு உதவியாக ஆழ்கொல்லி பவுடர் வியாபாரம் செய்து அதில் வந்த லாபத்தில் ஏதோ எல்லாம் செய்த சமயத்தில் வக்கில் புலியின் அங்கிகாரம் பெற்ற வியாபாரி(அதுதான்) ஆகநியமிக்க பட்டவுடன் அவரது நிதி பொறுப்பாளராக உங்களை நீங்களே தெரிவுசெய்து அதனால் புலியின் பணமுடிப்பு யாவும் தங்கள் கைபட்டுதான் போக வேண்டும் என்னும் நிலை(வக்கில் இறுதி1995(இருக்கலாம்) ல் அனாதையாக இந்தியாவில் இறந்தார் (உடம்புக்கு முடியாமல் இருந்து தான் அது பற்றி நேரம் வரும் போது ஏசுவோமே) அதனால் தாங்கள் அந்தநிலையை தொடர பல கொலை நாரதர் வேலை புல்லாங்குழல் ஊதல் அது இது இப்படி பல சில காரியங்களை செய்ததை உன்மையில் நாம் நினைவு கூரதான் வேண்டும்; சரி உமது அமைப்பு செயத பல நல்ல காரியங்களை சொல்ல வேண்டாமா??

    சுந்தரத்தின் கொலையில் இருந்து கடசி மகேஸ்வரிவரை;
    இடையில் தம்புகழ் காக்க ரெலோ அழிப்பு;
    வீரசெயல் அயல்நாட்டு பிரதமர்கொலை,
    இன்பதுக்காக நம்னாட்டு பிரதமர் கொலை;
    தவறி போய் பதமனாபா கொலை;
    பதறியபடி குமரப்பா& புலேந்திரன் குழு;
    பயத்தால் மாத்தையா? பாசத்துடன் கிட்டணா; பரிதவிக்ககரும் புலிகள்,
    பாவபட்ட தமிழ் மக்கள்;
    அன்போடு அமிர்தலிங்கம்;
    ஆசையாய் யோகேஸ்வரன்;
    அவருக்காய் அவரது மனைவி;
    யாருக்காய் சிவபாலன்;
    உமக்காக கஜன்நாதன்;
    அறிவாலே திருட்செல்வம்;
    சிரிப்பாலே தமிழ்செல்வன்;
    நரிதனத்தால் நடேசர் புலி தேவன்;
    ஏனப்பா தியாகியானான் திலீபன்;
    எதுக்காக அன்னை பூபதி;
    இப்படி இதுவரை தமது அமைப்பாலும் ஆடம்பரத்தாலும் அடக்கு முறயாலும் அழிந்த பல மனிதர்களை நாம் பின்னோக்கி பார்க்க வேண்டும் என்றுதானே எல்லோரும் ஒருக்கா திரும்பி பார்க்க சொல்லுறியள்: பல்லி சொன்னது ஒரு வீதம்தான் 99வீதம் நிலுவையில் உங்கள் கணக்கில் சேமிப்பில் உள்ளது நேரம் வரும் போது எடுத்து உங்களுக்கு பதிலாகவோ அல்லது விமர்சனமாகவோ யாராவது தருவோம்:

    Reply
  • மாயா
    மாயா

    //சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய்நகர்த்தல்களின் பின்புலத்திலேயே தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா நடத்தியது.- கேபீ//

    உங்களால் சிங்களவன் புதிசாலியாகிட்டான் என்று சொல்றியள். சேர்ந்த நாடுகள் சிதறாது. புலி அரசியல் கட்சியின் தலைவராகி உங்களை காப்பற்றும் முயற்சிதான் இதுவே தவிர , மக்கள் நலனில்லை.

    இன்டர்போல் தேடுற கொள்ளைக்காரன் பின்னால போறதுக்கு நாங்க கிரிமினலே? தமிழன் எப்பவும் சண்டியரோட – கொள்ளைக்காரரோடதான் சேர்ந்து நாடு பிடிக்கிறதா இருக்குதுகள்?

    அது சரி. உங்களையும் துரோகி எண்டில்ல சொல்லுறாங்கள்.

    Reply
  • Sabes
    Sabes

    நீஙகள் சொல்வதில் பிழை ஒன்ரும் இல்லை.

    இப்பொளுது உஙளுக்கு ஒரு நம்பிக்கை வெளி (credibility gap) இருக்கிரது. இதணை முதலில் களைய வேண்டும். இதட்கு முதலில்:

    1 பிரபாகரன், அமிர்தலிஙம், ராஜினி, ரவிராஜ், பொது மக்கள், போராளிகள் உட்பட இறந்த எல்லாருக்கும் ஒரு அங்ஜலி செலுத்த வேனும்.

    2 ஈதனை சமத்துவமாக எல்லொருடனும் சேர்ந்துநடத்த வேணும்.

    3 மக்களின் வேதணை தாங்க முடியாது கணக்கிரது. மனம் ஆற அழுதாழ் தான் நாம் இனி சிந்திக்க்கலாம்.

    4 உண்களால் இதணை செய்ய முடியாவிட்டால் மற்றவர்களை செய்ய தடுக்காதீர்கள்

    போராளிகள்

    Reply
  • palli.
    palli.

    மற்றவர்களை ஒதுங்க சொல்லி சொல்லியே மழைக்கு கூட தமிழர் ஒதுங்க முடியாத நிலைக்கு வந்து விட்டொம்; அவர்களை ஒதுங்க சொல்லுவதை விட்டு அவர்கள் கருத்தில் இருக்கும் தவறை சுட்டிகாட்டி விமர்ச்சித்து விவாதித்து செயல்படலாமே; அதை விட்டு இது என்ன ஒதுங்கு ஓரம் கட்டு;;;

    Reply
  • நண்பன்
    நண்பன்

    ஐயோ, சிறீலங்காவில புளி வாங்கக் கூட கடைக்கு போக பயமாயிருக்கு. அதனால கொறுக்காதான் வாங்கிறோம்.இல்லையெண்டால் சியம்பளா (புளி) எண்டு கேக்கிறம். எல்லாம் ஒரு சேப்டிக்குதான் பாருங்கோ? புலி பத்திக் கதைச்சாலும் பிரபாகரனுக்கு நடந்ததுதான் நடக்கும் என்று ஒரு அமைச்சர் சொன்னவர். அண்டையில இருந்து இந்த சேன்ஞ் ஐசே… இனி புலி சகவாசம் பாதாள பைரவியிலதான் முடியும்.

    Reply
  • accu
    accu

    நண்பன் புளி எனக் கேட்டால்தானே பிரச்சனை கொட்டையெடுத்த புளி எனக் கேளுங்கள் தப்பிக்கலாம்!

    Reply
  • வெள்ளைவாகனன்
    வெள்ளைவாகனன்

    புலிகளை யாரும் வெல்ல முடியாது! புலிகள் தரைப்படை, கடற்படை, வான்படை என முப்படைகளையும் கொண்டிருக்கிறார்கள்! காற்றுப் போக முடியாத இடங்களுக்குள் கூட புலிகளின் உளவுப்படை புகுந்து எதிரியின் தகவல்களை எடுத்து விடும்.! புலிகள் இலங்கையின் தேவேந்திர முனையிலிருந்து இமயத்தின் அடிவரை யாரையும் மனிதக் குண்டால் வெடித்துக் கொல்லும் வல்லமை கொண்டவர்கள்!

    புலிகள் தீர்மானித்தால் சங்கானை தொடக்கம் சென்னைவரை, வல்லை தொடக்கம் டெல்லி வரை, பலாலி தொடக்கம் பாரிஸ் வரை, அரியாலை தொடக்கம் அயர்லாந்து வரை, தொண்டமானாறு தொடக்கம் ரொறன்ரோ வரை, பூநகரி தொடக்கம் பெர்லின் வரை யாரையும் அவர்கள் கொல்லுவார்கள். அவாகள் யார் காலையும் கையையும் அடித்து முறிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.!

    உலகின் நான்காவது பெரும் படையையே தோற்கடித்தவர்கள் புலிகள்.! உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் ஒவ்வொருவரையும் புலிகளின் துப்பாக்கிகளுக்குப் பயந்து நடுங்கி பிடரி குளிரும் நிலையில் ஒவ்வொரு கண நேரமும் வைத்திருந்தவர்கள்! ஹிட்லரே அறிந்திடாத வகையான சித்திரவதை முகாம்களை கண்டுபிடித்து நிறுவுவதல் புலிகள் மிகத்தேர்ந்த படுகொலை விற்பன்னர்கள்! அவர்கள் தமிழீழம் எடுக்காமல் விடவேமாட்டார்கள்.!

    புலிகளிடமிருந்து ஓரடி மண்ணைக் கூட சிங்களப் படைகளால் கைப்பற்ற முடியாது! ஒரு புலியைக் கூட சிங்கள இராணுவத்தால் கைது செய்ய முடியாது ஏனென்றால் புலிகள் ஒன்றில் போராடிச்சாவார்கள் அல்லது தம்மைத்தாமே வெடித்துச் சாவார்கள் அல்லது கழுத்தில் தூங்கும் சைனட்டைக் கடித்துச் சாவார்கள்!

    உலகில் எந்த சக்தியாலும் புலிகளின் ஓர் அணுவைக் கூட அசைக்க முடியாது……. பிரபாகரனின் நிழலைக் கூட நெருங்க முடியாது!
    வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன்

    Reply