வெற்றி டமாகியுள்ள மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் இடங்களுக்கு புதிய எம்.பிக்கள் 3 பேர் நியமிக்கப்படவுள்ளதோடு எதிர்வரும் 9ஆம் திகதி பாராளுமன்றம் மீண்டும் கூடும்போது இவர்கள் மூவரும் சத்தியப்பிரமாணம் செய்வார்கள் என ஆளும் கட்சி பிரதம கொரடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
காலஞ்சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொட, ஐ.தே.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் அலிக் அலுவிஹார மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் கே. பத்மநாதன் ஆகியோரின் இடங்களுக்கே இவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் அமரசிறி தொடங்கொடவின் இடத்துக்கு ஐ.ம.சு.முன்னணி காலி மாவட்ட பட்டியலில் அடுத்ததாகவுள்ள சமிந்த வீரக்கொடி நியமிக்கப்படவுள்ளதோடு அலிக் அலுவிஹாரவின் இடத்துக்கு மாத்தளை மாவட்ட ஐ.தே.க. பட்டியலில் அடுத்ததாகவுள்ள நந்தமித்ர ஏக்கநாயக்க நியமிக்கப்படவுள்ளார். இதேவேளை, இலங்கை தமிழரசுக் கட்சி எம்.பி.யான கே. பத்மநாதனின் இடத்துக்கு இதுவரை எவரும் தெரிவு செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.