இலங்கை யைச் சேர்ந்தவரும் கனடாவில் வசிப்பவரும் பல கின்னஸ் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான சுரேஷ் ஜோகிம் கின்னஸ் சாதனைக்காக 12 நாளில் எடுத்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் மறுக்கப்பட்டது.
58 கின்னஸ் சாதனை படைத்துள்ள சுரேஷ் ஜோகிம், தனது அடுத்த சாதனையாக 12 நாளில் தமிழ் படம் எடுத்து முடித்து திரையிடும் பணியில் ஈடுபட்டார். “சிவப்பு மழை’ என்ற அப்படத்தில் சுரேஷ் ஜோகிம், மீரா ஜாஸ்மின், சுமன், விவேக் உள்ளிட்டோர் நடித்தனர். வி. கிருஷ்ணமூர்த்தி டைரக்ஷன். விஸ்வநாதன், இந்திரஜித், ஜமாலுதீன் ஒளிப்பதிவு. தேவா இசை. கடந்த மாதம் 23 ஆம் திகதி தொடங்கி 12 நாளில் படத்தை முடித்தனர். தணிக்கைக்காக புதன்கிழமை படம் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த அதிகாரிகள், படத்தில் இடம்பெறும் இலங்கை தமிழர் பிரச்சினை காட்சிக்கு ஆட்சேபம் தெரிவித்ததுடன் சான்றிதழ் தர மறுத்தனர்.
இதுகுறித்து டைரக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி படத்தில் காட்சி இடம்பெற்றுள்ளது. அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, மறுதணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்படுகிறது. அப்போது, இலங்கை பிரச்சினை பற்றிய காட்சிக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. பிறகு சான்றிதழ் வழங்குவது குறித்து அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள்’ என்றார்.
பார்த்திபன்
இவர் இதுவரை 58 கின்னஸ் சாதனை செய்தவர் என்பதே மிக மோசமான மோசடி. இவர் 2006 இலும் ஒரு சாதனை முயற்சி சுவிசில் செய்யவதற்காக வந்திருந்தார். அப்போது அவரை ஒரு நம்மவர் கடையில் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. அப்போ கடையில் நின்றவர்களுக்கு தான் இன்ன இன்ன ஆண்டு இத்தனை சாதனைகள் செய்திருருக்கின்றேன் என்று தான் வைத்திருந்த விபரக் கொத்தைக் காட்டினார். இது நடந்து கொண்டிருக்கும் போது கடைக்கு அருகாமையில் இருப்பவர் ஒருவர் தன்னிடமிருந்த 2003, 2004, 2005 ஆண்டுகளுக்குரிய கின்னஸ் சாதனைப் புத்தகங்களைக் கொணண்டு வந்து, நீங்கள் குறிப்பிடும் சாதனைகள் இந்தப் புத்தகங்களில் இல்லையே என்று அப்பாவியாகக் கேட்டார். அதற்கு இவர் “தனது கின்னஸ் சாதனைகள் இந்தப் புத்தகத்திலில்லை வேறு புத்தகத்தில் தான் வந்தது” என்று போட்டாருங்கோ ஒரு போடு. எப்படியெல்லாம் கிளப்புறாங்கப்பா!!!!
rohan
எல்லா சாதனைகளும் எல்லாப் புத்த்கங்களிலும் வருவதில்லை என்பது உண்மையே.
சரியோ பிழையோ – சாதனைகளின் பெறுமதி பெரிதோ சிறிதோ – அவர் சாதனைப் புத்தகங்களில் பெயர் பதித்துக் கொண்டது உண்மையே.
சும்மா நையாண்ன்டி செய்வதைத் ட்கவிர்த்துக் கொள்ளல் நலம்.
http://www.prnewswire.com/cgi-bin/stories.pl?ACCT=104&STORY=/www/story/08-02-2007/0004638400&EDATE=
The week will kick off with Hall of Famer Suresh Joachim of Toronto,
Canada who will take a shot at setting the record for Longest Karaoke
Marathon (current record: 25 hours, 45 minutes) in “Live’s” very own studio
lobby. Joachim, who already has broken an unbelievable 35 Guinness World
Records, appeared on “Live” back in 2005 when he broke the record for
Longest TV Watching Marathon in an astounding 69 hours, 48 minutes.
திருமணத்தின் போது 47 மாப்பிள்ளைத் தோழர் வைத்திருந்ததும் ஒரு சாட்கனை!
http://www.sureshjoachim.org/ListofRecords.htm
சாந்தன்
பார்த்திபன்,
இந்த ‘கின்னஸ் சாதனை’ களைப்போல் ஜோக்குகள் இல்லை. இந்த சாதனைப்பட்டியல் ஒரு ‘பம்மாத்து’ வியாபார தந்த்ிரம். தமது பியர் (கினஸ்) விற்பனையைக் கூட்ட செய்யப்பட்ட உத்தி என்பதனை கினஸ் கூட ஒத்துக்கொண்டுள்ளது. ஆனால் எங்கள் சனம் ஏதோ பெரிய விடயம் போல (ஐ.நா, மனித உரிமை, விசாரணை போன்ற பமாத்துகள்போல) எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.
எனினும் இங்கே முக்கிய விடயம் இலங்கைப்பிரச்சினை இடம் பெற்றால் தணிக்கைச் சன்றிதழ் இல்லையா என்பது தான். என்ன நியாயம் இது? இலங்கைப்பிரச்சினை என்று ஒன்றில்லையா? அல்லது அவ்வாறு மக்களுக்கு சொல்லி ‘பம்மாத்து’ காட்ட இந்தியா நினைக்கிறதா? அவுஸ்திரேலியாவில் இந்திய மானவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை அவுஸ்திரேலியாவில் பத்திரிகைச் செய்தியாகவோ அன்றி திரைப்படமாகவொ எடுத்தால் தடை என்றால் நீங்கள் தயாரிப்பாளரின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுக்க மாட்டீர்கள் தானே?
இது அனேகமாக தமிழ்நாடு தணிக்கை சபையில் இருக்கும் ‘கை’ கோஷ்டி தமது ‘அன்னை’ க்கு எடுக்கும் காவடி சேட்டிபிக்கேற் ஆக இருக்கும்!
பார்த்திபன்
//எல்லா சாதனைகளும் எல்லாப் புத்த்கங்களிலும் வருவதில்லை என்பது உண்மையே.- rohan//
கின்னஸ் சாதனை என்பது அவர்களால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் அந்தந்த ஆண்டுகளுக்குரிய சாதனைகள் அந்தந்த ஆண்டுகளுக்குரிய புத்தகங்களில் வெளிவரும். இப்படிச் சாதனைகளை வெளியிட வெவ்வேறு நிறுவனங்களும் உண்டு. அவர்களிடம் பதிந்து சாதனை செய்தால் அவர்கள் தமது உத்தியோகபூர்வ வெளியீடுகளில் அதனை வெளியிடுவார்கள். ஆனால் இங்கே நான் குறிப்பிட்டது கின்னஸ் சாதனை பற்றித் தான். சுரேஷ் ஜோகிமும் தான் கின்னஸ் சாதனை செய்ததாகத் தான் குறிப்பிட்டிருந்தார். அவரின் சில சாதனைகள் மட்டுமே கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. மிகுதி அவர் போலியாக விடும் பீலா என்பதே ஆணித்தரமான உண்மை. உதாரணமாக சுவிசில் அவர் மேற்கொண்ட தொடர்ந்து டிரம் அடித்துச் சாதனை செய்வதும் தோல்வியில் தான் முடிந்தது. ஆனால் அதைக் கூட அவர் தனது சாதனைப்பட்டியலில் சேர்த்திருப்பதாக பின்பு அறிந்து கொண்டேன்.
பார்த்திபன்
//எனினும் இங்கே முக்கிய விடயம் இலங்கைப்பிரச்சினை இடம் பெற்றால் தணிக்கைச் சன்றிதழ் இல்லையா என்பது தான். என்ன நியாயம் இது? இலங்கைப்பிரச்சினை என்று ஒன்றில்லையா? – சாந்தன் //
பொதுவாகவே இந்த சுரேஷ் ஜோகிம் என்பவர் தன்னைப் பற்றி எப்போதும் பரபரப்பான செய்திகள் வர வேண்டுமென்று விரும்புகின்றவர். அதனால் இலங்கைப் பிரைச்சினை என்று இவர் எப்படியான காட்சிகளைச் சேர்த்தார் என்பது தெரியாமல் கருத்துக் கூறுவது கடினம். இவரது படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதற்காக இந்தியாவை விமர்சிக்கவும் முடியாது. எப்படியான காட்சியமைப்பு இருந்தது என்பது தெரியாமல் இது விடயத்தில் நீங்களோ நானோ கருத்துக் கூற முடியுமா??