இனங் களுக்கிடையே ஐக்கியத்தை ஏற்படுத்தும் வகை யில் ஊடகங்கள் செய்திகளை வெளியிடவேண்டுமென்றும் பகைமையையும், குரோதத்தையும் வளர்க்கும் விதத்தில் செயற்பட கூடாதெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.
அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதம ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
சமூகத்தில் தேவையற்ற பிளவுகளைத் தோற்றுவிக்கும் வகையில் எதனையும் எழுதவோ, ஒலிபரப்பவோ வேண்டாமென்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.
சிறிய ஒரு சம்பவம் கூட ஆத்திரத்தைத் தூண்டும் வகையில் வெளிப்படுத்தப்பட்டால் அதனால் பாரதூர விளைவுகள் ஏற்படும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதனால் நிதானமாக செய்திகளை வெளியிட வேண்டு மென்று கேட்டுக்கொண்டார்.
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி கிராம ங்களுக்கு நேரடியாகச் சென்று நிலைமைகளைத் தெரிந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார். அதே நேரம், மீள்குடியேற்றப் பணிகளைத் துரிதப்படுத்தவென 180 நாள் வேலைத் திட்டமொன்றை அரசாங்கம் நடை முறைப்படுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.
Thirumalai Vasan
உள்ளுர் ஊடகவியலாளர்கள் தடைமுகாம்களுக்குச் செல்லப்பொகிறார்கள். அவர்கள் அங்கு காணப்போகும் கொடுரங்களை வெளியுலகிற்குத் தெரிவிக்காதிருக்க வாய்ப்பூட்டு போடப்படும் செய்தியே இது. அதற்கு அப்பால் இந்த மாண்புமிகு மஹிந்தவின் வேண்டுகோள் (எச்சரிக்கை) எதையும் சொல்லவில்லை. இனி ஊடகவியலாளர்கள் தமது பரப்புரையை எவ்வளவு துணிச்சலுடன் மேற்கொள்வார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
பார்த்திபன்
மகிந்த அவர்களே தாங்கள் வெற்றிக் கொண்டாட்டங்களை தொடர்ந்து பலவழிகளிலும் நடத்தி வருவது கூட இனப்பகைமைகளை வளர்க்கும் என்பதைத் தாங்கள் புரிந்து கொள்ளவில்லையா?? எனிமேலாவது இப்படியான கொண்டாட்டங்களை தவிர்த்து விட்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் செயல்களை செயற்படுத்துங்கள்.
rohan
மகிந்தவும் இந்த பின்னூட்டங்களை வாசிக்கிறாரா? அய்யோ – சொல்லவே இல்லையே!
சாந்தன்
பார்த்திபன்,
வெற்றிவிழாக் கொண்டாட்டங்கள் ‘இனப்பகையை’ வளர்க்குமா? என்ன ஆச்சர்யம்! ..புலி வீழ்ந்தது இனப்பகை அற்றுப்போனது பாட்டாளி மக்கள் (தமிழர், சிங்களவர், முஸ்லிம் இல்லாமல் ஒரே நாடு ஒரே இனம் என்பதால்) கைகோர்த்து வீதியெங்கும் களிப்புடன் கொண்டாடுவது இனப்பகையை வளர்க்குமா? என்னே ஆச்சரியம்! ஒருவேளை இக்கொண்டாட்டங்களை சிலர்… திசை திருப்ப முயல்கிறார்களோ தெரியவில்லை.
இனப்படுகொலையை ஏன் விசாரிக்கவில்லை என கேட்டால் பான்கிமூனும் கொண்டாட்டங்கள் வேண்டாம் என இதையே சொல்கிறார்!
பார்த்திபன்
சாந்தன்
எந்த விடயமும் அளவிற்கு மிஞ்சினால் அது விசமாகும் என்பார்கள். அது போலவே வெற்றிவிழாக் கொண்டாட்டங்களை அரசு நடத்தவதில் தவறில்லை. ஆனால் அதையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பதுவே இனப்பகைமையை வளர்க்கும் என்பதையே நான் சுட்டிக் காட்டியிருந்தேன். இதே கருத்தின் அடிப்படையிலேயே பான்கிமூனும் சிந்தித்திருப்பார் என நம்புகின்றேன். ஆனால் இதில் நீங்கள் ஆச்சரியப்படுவதின் காரணமும் எனக்குப் புரியாமலில்லை. கல்மடுக்குளத்தை புலிகள் உடைத்து விட்டதால் 5000 இராணுவத்தினர் பலியென்று புரளியை நம்பி, வெற்றிவிழாக் கொண்டாடியவர்களுக்கு இப்படியான செயல்கள் ஆச்சரியமளிக்கத்தான் செய்யும்.
பார்த்திபன்
//மகிந்தவும் இந்த பின்னூட்டங்களை வாசிக்கிறாரா? அய்யோ – சொல்லவே இல்லையே!- rohan //
தாங்கள் இந்திய மத்திய அரசை விமர்சித்து எழுதியபோது டெல்லியுள்ளவர்கள் வாசிப்பார்கள் என்றா எழுதினீர்கள். ஒபாமா பற்றி எழுதியபோது வெள்ளைமாளிகையில் எல்லோரும் தேசம்நெற் தான் பார்க்கின்றார்கள் என்றா எழுதினீர்கள். அட அதைக் கூட நீங்கள் சொல்லவில்லையே??
anton
ஓரு விஷயத்தை மரந்து விட கூடாது, எல்லா தூதரங்கலூம் எல்லா செய்திகழை கூர்ந்து கவனிக்க ஒருநபரை நியமிதுல்லனர்.