கே: இதற்கு முன்னர் ஒரு நேர்காணலில் பயங்கரவாதம் முற்றாக அழித்தொழிக்கப்படும் என்றும் எல். ரீ. ரீ. ஈ.க்கு கசப்பான ஒரு பாடம் புகட்டப்படும் என்றும் நீங்கள் உறுதியளித்திருந்தீர்கள். இப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களது உணர்வுகள் எவ்வாறு உள்ளன?
பதில்: பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தெறியப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இது ஒரு பாரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்திழப்பு என்பனவற்றை எண்ணிப் பார்க்கின்ற போது, உண்மையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.
கே: இதற்கு முன்னர் தீட்டப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களில் அரசியல் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுண்டு. முன்னாள் ஜனாதிபதிகள் இந்தத் தலையீடுகளைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது. நீங்கள் அவ்வாறான ஒரு தலையீட்டுக்கு முகம் கொடுத்தீர்களா? அல்லது ஜனாதிபதி உங்கள் சகோதரர் என்பதால் உங்களுக்கு அவ்வாறான தலையீடுகள் இருக்கவில்லையா?
பதில்: பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் மேல் மட்டத்தில் இருந்தும், கீழ் மட்டத்தில் இருந்தும் வரும் பிரச்சினைகளையும், அழுத்தங்களையும் சமாளித்து சரியான முடிவுகளை என்னால் எடுக்கக் கூடியதாக இருந்தது. சரியான தகவல்களை வழங்கியதன் மூலம் நான் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். இது வெல்லக்கூடிய ஒரு யுத்தம் என்ற நம்பிக்கையை நான் அவர்களுக்கு ஏற்படுத்தினேன். அதற்கு அவர்கள் எல்லோருமே தமது பூரண ஆதரவை வழங்கினர்.
கே: ஆரம்பம் முதல் இறுதிவரை சர்வதேச அழுத்தங்கள் எவ்வாறு அமைந்திருந்தன? நீங்களும், அரசாங்கமும் அவர்களை எப்படி சமாளித்தீர்கள், அவர்களுக்கு சரியான பதிலைக் கொடுத்து இந்த சவாலுக்கு எப்படி முகம் கொடுத்தீர்கள்?
பதில்: இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சர்வதேச சமூகம் என்பது என்ன என்பதை முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு சில நாடுகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனைய நாடுகளையும், குறிப்பாக எம்முடன் நட்பாக உள்ள நாடுகளையும் நாம் சரியாக இனம் கண்டுகொண்டோம். இந்த நட்பு நாடுகள் வரிசையில் இந்தியா முன்னணியில் இருந்தது.
இந்தியாவின் செல்வாக்கு எம்மைப் பொறுத்தமட்டில் முக்கியமானது. ஜனாதிபதி பதவியேற்றவுடன் இந்தியாவுக்குப் பயணமானார். அங்கு அவர் பயங்கரவாதம் பற்றிய தெளிவான மதிப்பீடொன்றை வழங்கினார். இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அண்மையில் இங்கு விஜயம் செய்தபோது, நான் அது குறித்து அவருக்கு நினைவூட்டினேன்.
அவர் திடுக்கிடும் ஒரு விடயத்தை எனக்குச் சொன்னார். ஒரு சிறிய ராஜதந்திர தவறானது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதுதான் அவர் சொன்ன விடயம். 1987ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் கைது செய்யப்பட்ட போது, அப்போதைய இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையைக் கையாண்டிருந்தால், பயங்கரவாதம் இந்தளவுக்கு மோசமான நிலைக்கு வந்திருக்காது என்று அவர் சொன்னார்.
வெள்ளைத் தோல் உள்ள வெளிநாட்டவர் ஒருவர் இங்குவந்து தன்னைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள முனைகின்றார் என்பதற்காக நாம் அலட்டிக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவ்வாறு பெரிதாகக் கூச்சலிடுபவர்களால் எமக்கு எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. சர்வதேச சமூகத்துடனான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்காக நாம் மலேஷியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுடனான உறவுகளை மேலும் நெருக்கமாக்கிக் கொண்டோம்.
இந்த நாடுகளின் மூலம் புலிகள் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவதை நாம் நன்கு அறிவோம். இந்த நாடுகளில் உள்ள பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரோடு நாம் மிக நெருக்கமாகப் பணிபுரிந்து புலிகளின் ஆயுதக் கடத்ததல்களை முறியடிப்பதில் முழுமையாக ஈடுபட்டோம்.
சீனா, ரஷ்யா என்பனவற்றையும் நாம் முக்கியமாகக் கருதினோம். அதேவேளை பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களையும் கொள்வனவு செய்தோம். இந்த நாடுகளுக்கு ஜனாதிபதி மூன்று தடவைகள் விஜயம் மேற்கொண்டார். இது தவிர பல சந்தர்ப்பங்களில் அந்த நாடுகளின் தலைவர்களோடு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டார்.
ஆரம்பத்தில் புலிகளை வெறுத்த பல நாடுகள் கடைசிக் கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றன. இதுதான் உண்மை. இது எமக்கு நன்றாகத் தெரியும்.
வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் நெருக்குதல்கள் காரணமாகவா, அல்லது எல். ரீ. ரீ. ஈ. உடன் உள்ள நீண்ட கால உறவுகள் காரணமாகவா எம்போன்ற சிறிய அபிவிருத்தி நாடுகள் பற்றி அவர்கள் தீட்டியிருக்கும் பாரிய திட்டங்கள் காரணமாகவா இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை நாம் மதிப்பீடு செய்ய முயல வேண்டும்.
அவர்கள் எமக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றங்களை சோடித்தார்கள். நாம் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம்மீது நெருக்குதல் பிரயோகிக்க ஆரம்பித்தார்கள்.
கேள்வி: இந்த இரட்டை வேடம் காரணமாக உங்களதும், ஜனாதிபதியினதும் உயிர்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து இருக்கும் என்று கருதுகின்aர்களா?
பதில்: அதற்கான சாத்தியம் உள்ளது. பயங்கரவாதத்தின் தோல்வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றவரை எமக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதும் எமக்குத் தெரியும்.
கே: புலிகளின் தலைவரை ஏன் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது?
பதில்: ஒரு மோதல் சூழ்நிலையின் கீழ் கடைசி சிவிலியனும் மீட்கப்பட்ட பின்னர் புலிகளின் தலைவர்கள் ஒரு சிறிய பிரதேசத்தில் நிர்க்கதி நிலைக்குள்ளானார்கள். அவர்கள் விரும்பும் பட்சத்தில் சரணடைவதற்கு போதிய கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.
தயா மாஸ்டர் போன்றவர்கள் காப்பாற்றப்பட்ட மக்களோடு மக்களாக வந்து சரணடைந்தார்கள். இதற்கு மேலதிகமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களும் சரணடைந்தார்கள். ஆனால் முன்னணித் தலைவர்கள் சரணடைய முன்வரவில்லை. சர்வதேச சமூகம் தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.
கே: குமரன் பத்மநாதன் என்பவர் பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றதே
பதில்: கடந்த பல வருடங்களாக புலிகளுக்கு பிரதான ஆயுதங்களை கொள்வனவு செய்பவரும், விநியோகித்து வருபவரும் இவர் என்றே கருதப்படுகின்றது. இவர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இன்டர்போலினால் தேடப்படுபவர். இவர் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டும் உள்ளது. இவர் நிதி ரீதியாக புலிகளை ஸ்திரப்படுத்தியவர். இவர் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதாக சில இணையத் தளங்கள் குறிப்பிட்டுள்ளன.
சர்வதேச பொலிஸாரால் வேண்டப்படும் ஒரு நபரை சில நாடுகள் ஏன் இன்னும் கைதுசெய்யாமல் இருக்கின்றன என்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.
கே: இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?
பதில்: இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் பங்கேற்றதாக இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் விசாரணைகளும் நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தில் இது சம்பந்தமான அனுபவம் எமக்குள்ளது.
கிழக்கில் உள்ள புனர்வாழ்வு முகாம்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றன. 30 வருடங்களுக்கு மேலாக புலிகளின் செயற்பாடோடு தொடர்புபட்டிருந்தவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது என்பது இலகுவான காரியமல்ல.
கே: புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையிலும், எதிர்காலத்தில் உங்களது உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என்று நீங்கள் கருதுகின்ர்களா?
பதில்: அவ்வாறான அச்சுறுத்தல் எனக்கு இருக்கலாம். ஜனாதிபதி, ஆயுதப் படைகளின் தளபதிகள் ஆகியோருக்கும் இத்தகைய ஆபத்து இருக்கலாம். புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட சகல முன்னணித் தலைவர்களுக்கும் முடிவு கட்டப்பட்ட நிலையிலும் கூட நாம் இந்த ஆபத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.
ஒருவேளை இந்த ஆபத்து சர்வதேச மட்டத்தில் இருந்து வரலாம். ஏனெனில் எமது நாட்டுக்கு அந்தளவுக்கு சர்வதேச நெருக்குதல் பிரயோகிக்கப்பட்டது. எனவே இதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.
கே: பொட்டு அம்மானைத் தவிர மற்ற எல்லா புலிகளின் தலைவர்களினதும் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. பொட்டு அம்மான் பற்றி ஏன் எந்தத் தகவலும் இல்லை?
பதில்: கடைசி சில தினங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது பெருமளவு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். நாம் எமது வளங்களுக்கு ஏற்ப அவற்றை அடையாளம் கண்டு பெயர்களை வெளியிட்டோம். பிரபாகரன், பானு, சூசை ஆகியோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பொட்டு அம்மானும் நிச்சயம் கொல்லப்பட்டிருப்பார். அவர்கள் இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்டிருந்தால் வித்தியாசமான சூழ்நிலையில் கொல்லப்பட்டிருப்பார்கள். அப்போது அடையாளம் காண்பது கூட சாத்தியப்பட்டிருக்காது.
கே: விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குமா?
பதில்: அது நடைபெற நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் சேகரித்த பெருந்தொகையான ஆயுதங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். அவர்களிடம் வேறு ஆயுதங்கள் எஞ்சியிருப்பின் அவற்றையும் தேடிக் கண்டுபிடிக்க நாம் நடவடிக்கை எடுப்போம். எமது படையினரால் சுமார் 20 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். பத்மநாதன் போன்ற ஒரு சிலர்தான் இன்னும் ஈழக் கனவு காண்கின்றனர். எனவேதான் அவர்கள் பொய்ப் பிரசாரங்களும் செய்கின்றனர்.
எம்மீது சர்வதேச சமூகம் கொண்டுவந்த அழுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எல். ரீ. ரீ. ஈ.க்கு ஆயுதங்கள் வழங்குபவர்கள் மீது அவர்கள் ஏன் அழுத்தங்களைப் பிரயோகிப்பதில்லை? சர்வதேசத்தினூடாகத்தான் குமரன் பத்மநாதன் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் சம்பாதிக்க போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.
முழு உலகத்துக்கும் இது தெரியும். எம்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் சர்வதேச அமைப்புக்களுக்கு சர்வதேச மட்டத்தில் சட்டவிரோத செயல் புரியும் இவர் போன்ற நபர்களைக் கைதுசெய்ய அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய கடமையும் உள்ளது. எனவே இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் இந்த அமைப்புக்களை வேண்டிக்கொள்கிறோம்.
கே: புலிகளின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திர நிலையங்கள் பெளத்த ஆலயங்கள் என்பனவற்றைத் தாக்கி உள்ளனர். இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?
பதில்: அரசாங்கம் என்ற வகையில் நாம் எமது தூதுவர்களை அழைத்து, இது தொடர்பாக விழிப்பூட்டியுள்ளோம். சம்பந்தப்பட்ட அரசுகளுக்கும் எமது தூதரகங்கள் ஊடாக அறிவித்துள்ளோம். ஆனால் அந்த அரசுகளால் இதுவரை இது சம்பந்தமாக எவரையும் சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை.
இவற்றுக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். ஆனால் இந்த சம்பவங்களோடு தொடர்புடைய ஒரு நபரைக் கூட அந்த அரசாங்கங்கள் இன்றும் கைது செய்யவில்லை. இவ்வகையான மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிபவர்களை சட்டம் ஒழுங்கு பற்றி வெகுவாகப் பேசும் நாடுகளால் கைதுசெய்ய முடியவில்லை.
ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்துக்கும் இதை நாம் கொண்டு வந்துள்ளோம். இந்த நாடுகள் மீது ஏதாவது ஒரு வகையில் அழுத்தங்களைக் கொண்டுவருமாறும் நாம் அவரைக் கேட்டுள்ளோம்.
கே: சர்வதேச மட்டத்திலான சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடிக்கடி எமது நாட்டுக்கு விஜயம் செய்கின்றனர். இந்த வெளிநாட்டவர்களின் வருகை பற்றிய உங்கள் கருத்து என்ன?
பதில்: கடந்த சில மாதங்களாக இலங்கையில் சட்டங்களும், விதிமுறைகளும் மறக்கப்பட்ட ஒரு நிலைதான் காணப்பட்டது. இந்த வட்டத்துக்கு வெளியே தான் சம்பவங்கள் நடந்தன. இதற்கு முக்கிய காரணம் இங்கு நிலவிய பயங்கரவாதம். ஆனால் இப்போது இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கக் கூடிய ஒருநிலை ஏற்பட்டுள்ளது. சிலர் தாங்கள்தான் இந்த நாட்டை ஆட்சிசெய்வது போலவும் நடந்துகொண்டனர். அவர்கள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றி தலையிட்டனர்.
அரச சார்பற்ற நிறுவனங்களால் எவ்வித தேசிய அல்லது சர்வதேசக் கட்டுப்பாடுகளும் இன்றி இந்தத் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களது முடிவுகள் பொறுப்புக்கூறும் மட்டத்துக்கு அப்பால் சென்றது. நாட்டின் சட்ட விதிகளையும், ஒழுங்கு முறைகளையம் பயங்கரவாதம் பலவீனப்படுத்தியிருந்தமை தான் இதற்கு முக்கிய காரணம். இவற்றைக் கண்டும் காணாமல் இருக்கவேண்டிய நிர்ப்பந்த நிலையில் நாம் இருந்தோம். உண்மையில் எமது நாட்டுக்கே உரிய விதிமுறைகளும், ஒழுங்கமைப்புக்களும் இருக்கின்றன. வெகு விரைவில் நாம் இவற்றை மீள நிலைநாட்ட வேண்டும்.
கே: கொழும்பில் இன்னமும் மறைந்திருப்பதாக நம்பப்படும் புலிச் சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க அல்லது இனம்காண எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன?
பதில்: புலனாய்வுச் சேவைகள் மூலமும், பொலிஸார் மூலமும் எமது விசாரணையாளர்கள் நடத்திய விசாரணைகளின் பலனாக கொழும்பில் புலிகளின் வலையமைப்பை ஏற்கனவே எம்மால் தகர்க்க முடிந்துள்ளது. வன்னிக்குத் தப்பிச் செல்ல முயன்றவர்களையும் கூட நாம் கைது செய்துள்ளோம். இந்தப் பணியை பூரணப்படுத்தும் செயற்பாட்டில் உளவுத் துறையினர் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.
சிவில் வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் வகையில்தான் நாம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். புலிகளின் அச்சுறுத்தல், கப்பம் கோரல் என்பனவற்றால் சாதாரண தமிழ் மக்களும் கூட பாதிக்கப்பட்டனர். இராணு வத்தினதும், பொலிஸாரின தும் உதவியோடு இவற்றைத் தீர்த்துக் கொள்வதிலும் அந்த மக்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இப்போது சகல சமூகங்களும் இணக்கமான சமாதானமான ஒரு சூழலில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.
கே: இந்த முழுச் செயற்பாட்டிலும் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?
பதில்: நாம் ஒருபோதும் ஊடகங்களை ஒடுக்க முயலவில்லை. ஒரு நாட்டில் ஊடகம் என்பது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊடகத்தின் ஒரு பகுதி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது. அதைப் பற்றி மட்டும் தான் நான் பேசுகின்றேன். இவர்கள் உண்மையில் பெரும் தடையாக இருந்தனர்.
மோதல் நிலைமை பற்றி தவறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டால் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இந்த இலக்கை அடையும் விடயத்தில் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க முடியாது. எனவே தவறான அறிக்கைகளும், தகவல்களும் மக்களைச் சென்றடைவதை நாம் தடுக்க வேண்டியிருந்தது. இதனால்தான் சிலவேளைகளில் இவ்வாறானவர்களுக்கு எதிராக நான் பேசவேண்டியிருந்தது.
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், யாரையும் நாம் நெருக்குதலுக்கு உட்படுத்தியதில்லை. பிழையான செய்தி அறிக்கைகளை ஏனையயஊடகங்கள் மூலம் திருத்தும் வேலையை மட்டும்தான் நாம் செய்தோம். நாட்டு மக்களுக்கும், பெருமளவுக்கு உலக மட்டத்திலும் சரியான தகவல்களை வழங்கும் பணியை பாதுகாப்புத் துறை இணையத் தளம் மிகச் சிறப்பாகச் செய்தது. நாம் கடமையைத்தான் செய்தோம். ஒரு போதும் தணிக்கை செய்யவில்லை.
தமிழில் ; எம். நெளஷாட் மொஹிடீன் – நன்றி: தினகரன்
santhanam
புலிகளின் வளர்ச்சி அவர்களது பிடிவாதம்.
புலிகளின் அழிவும் அவர்களது பிடிவாதம்.
palli.
//புலிகளின் வளர்ச்சி அவர்களது பிடிவாதம்.
புலிகளின் அழிவும் அவர்களது பிடிவாதம்…//
சந்தானம் இரண்டுமே முட்டாள் தனம் தானே?
வெள்ளைவாகனன்
1987ம் ஆண்டின் இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டிற்குப் பின்னர் புலிகள் இதுவரை நடாத்திய இந்த யுத்தத்தில்:-•உலகில் எங்கும் இல்லாதவாறு ஒரு லட்சம் கோடி ரூபாக்களுக்கு மேல் செலவழித்திருக்கிறார்கள். இதில் ஐம்பதாயிரம் கோடி ரூபாக்களுக்கு (சுமார் 5000 மில்லியன் டாலர்களுக்கு) மேற்பட்டவை தமிழர்களிடமிருந்து மிரட்டி பறித்த கப்பங்களும் வெருட்டி வசூலித்த கொள்ளை வரிகளும் பொய்சொல்லித் திரட்டிய கொடைகளுமே. மிகுதி போதை மருந்துகள். தங்கங்கள் வைரங்களை சர்வதேச அளவில் கள்ளக்கடத்தியதாலும் சில சர்வதேச நாடுகளின் கொடுப்பனவுகளாலும் திரட்டப்பட்டவை.
•1990க்கும் 2009க்கும் இடையில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ்மக்களை யுத்தத்தில் சாகக் கொடுத்திருக்கிறார்; இவ்வேளை 25000க்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்களை புலிகளென யுத்த களத்திலும் சைனட்டைக்கடித்தும் சாகப் பண்ணியிருக்கிறார்கள்
•10000க்கு மேற்பட்ட ஆற்றல்மிக்க சமூக உணர்வு கொண்ட தமிழர்களை தலைவர்களை சமூகப்பிரதிநிதிகளை துரோகிகள் என படுகொலை செய்திருக்கிறார்கள்.
•வடக்கு கிழக்கு மாகாணத்தமிழர்கள் அனைவரினதும் வீடுவாசல்கள், தொழில் மூலதனங்கள்;, கல்விநிலைங்கள், பொதுக்கட்டிடங்கள் அனைத்தையும் அழியப்பண்ணினார்;கள் (இவற்றின் பெறுமதியும் சுமார் 5000 மில்லியன் டொலர்களென மதிப்பிடப்படுகிறது),
•இந்தக்காலகட்டத்தில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்டோரை மேலைத்தேய நாடுகளுக்கும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரை இந்தியாவுக்கும் அகதிகளாக ஊரைவிட்டு ஓடப்பண்ணியிருக்கிறார்கள்.
•ஒரு லட்சம் முஸ்லிம் மக்களை அவர்கள் பலநூறு ஆண்டுகளாக பல தலைமுறைகளாக வாழ்ந்துவந்த இடங்களிலிருந்து துரத்தினார்கள்.
•ஊருக்குள்ளேயே பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் அகதிகளாகுவதற்கு காரணமானார்கள். அவர்களை சிங்கள இராணுவ வீரர்கள் முன்னால் கையேந்தி பிச்சையெடுக்கும் வாழ்க்கைக்கு உள்ளாக்கினார்கள்.
புலிகள் விதைத்த அழிவுகளையும் இழப்புக்களையும் துன்பங்களையும் இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். இத்தனையும் செய்த இத்தனைக்கும் காரணமான புலிகள் தமிழ் மக்களுக்குப் பெற்றுத் தந்த நன்மையென்று எந்தவொரு துளியுமேயில்லை.
நண்பர்களே! தோழர்களே! ஒவ்வொரு தமிழரையும் கடந்த காலத்தை மீட்டுப் பார்க்கும்படி செய்யுங்கள்
•எமக்கேற்பட்ட எல்லா அவமானங்களையும் புறக்கணித்து எல்லா அவச்சொற்களையும் தாங்கியபடி விடாப்பிடியாக இந்தியாவின் நண்பர்களாக கூடிநின்று அதன் துணையை முறையாக்கி வடக்கு-கிழக்கு மாகாண சபை மூலம் நாம் தேடிவைத்த நன்மைகளை யெல்லாம் புலிகள் பிரேமதாசாவுடன் கூடி நாசம் செய்தார்கள்.
•பிரேமதாசாவினதும் மற்றும் இந்தியாவுக்கு எதிரான சர்வதேச சக்திகளினதும் சதிவலைக்குள் விழுந்த புலிகள் தமிழர்களோடு நின்ற இந்தியாவை தமிழர்களிடமிருந்து தூரம் போகும்படி விலக்கினார்கள்
•சந்திரிகா அவர்கள் தமிழர்களுக்கு அநியாயம் நடந்திருக்கின்றது என்பதை ஒரு இயக்கமாக்கி அதனை தானாகவே சிங்கள மக்கள் மத்தியில் பரப்பினார். ஆகவே தமிழர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டுமென்பதை சிங்கள மக்களுக்கு எடுத்துரைத்தார். அவர் தானாக நாடி வந்து முன்வைத்த அரசியல் தீர்வு நன்மையை புலிகளும் புலிகளின் ஆதரவாளர்களும் யுஎன்பியுடன் கூட்டமைத்துக் கொண்டு நின்று எட்டியுதைத்து தூர ஓட்டினார்கள்,
•ரணிலின் ஆட்சிக் காலத்தில் உலக நாடுகள் ஒருங்கு திரண்டு வழங்குவதற்க முன்வந்த நிறைவான மாநில சுயாட்சி அமைப்பை புலிகள் ஏறெடுத்தும் பார்க்க மறுத்து இறுமாப்புக் காட்டினார்கள். தம்மை அசைக்க முடியாது என்ற அகங்காரத்தில் கடல் வானம் பூமி ஆகியவற்றின் மீது அனைத்து இறைமையும் புலிகளுக்கே என்றார்கள், புலிகளின் சண்டியர் படைகளையும், பொடிசுகள் கொண்ட பொலிஸையும் கங்காரு நீதிமன்றங்களையும் வடக்கு கிழக்கு மக்கள் மீதான கட்டற்ற கட்டுமிராண்டி அதிகாரங்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கொக்கரித்தார்கள். இல்லையென்றால் சிங்கள இராணுவத்தினரின் 40000 சவப்பெட்டிகள் தென்னிலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும், தென்னிலங்கை முழவதுவும் குண்டு மழை பொழியும், சிங்களவர்களின் நாடும் வீடுகளும்; சுடுகாடாகும் என்று புலிகள் மிரட்டினார்கள்.
•ஆட்சிக்கு வந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர்களும் ஆரம்பத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கித்தான் நின்றார்கள். அதனால்த்தான் அவர்கள் ஜெனீவாவில் புலிகளுடன் பேசி சமாதானமாக ஒரு தீர்வைக் கண்டுவிட நோர்வேயின் துணையை நாடினார்;கள். ஆனால் ஜெனீவா சென்ற புலிகளோ சிறிலங்கா அரசினதும் உலக நாடுகளினதும் முயற்சிகளை கிண்டலடிக்கும் வகையில் பேச்சுவாத்தையில் அக்கறை காட்டாமல் ஐரோப்பிய நாடுகளின் உல்லாச பகுதிகளில் சுற்றுலா வந்தார்கள்.. … … அங்குள்ள ஒவ்வொரு நாட்டிலும் தமது ஆதரவாளர்களை உசுப்பேத்திவிட்டு காசு கறப்பதிலேயே கண்ணாக இருந்தார்கள்.
-வெள்ளைக்கொடி வெள்ளைவாகனன் –
santhanam
தலைவரை வைத்து 200க்கு அதிகமான பிரிவுகள் தலைவருக்கு சந்தனம் அரைத்தவை 33வது வருடம்தான் அவர் புரிந்துகொண்டார் கடைசியாக எல்லோரையும் ஒன்றாக வைத்திருந்தும் பார்த்தார் படுமுட்டாள்கள் என்றுஅப்பதான் புரிந்தார்.
பார்த்திபன்
சமாதான காலத்தில் தினசரி கிடைத்த பலகோடி வருமானம் பிரபாகரனை திசைமாற வைத்தது. அத்தனையும் தனது பணம் என்று இறுமாப்புக் கொள்ள வைத்தது, விதம் விதமாக அதனை அனுபவிக்க ஆரம்பித்தார். சுனாமியின் போது உடனடி நிவாரணமாக 30 கோடியை அறிவித்து தன்னை ஏதோ கொடை வள்ளல் போல் ஊரார் வீட்டுப் பணத்தை வைத்து காட்ட முயற்சித்தார். ஆனால் 3 சதம் கூட அந்த மக்களுக்குச் சென்று சேரவில்லை. ஆட்டம் போடும் போது இதன் மறுபக்கத்தையும் ஒரு நாள் அனுபவிக்க வேண்டிவரும் என்பதை முற்றாகவே மறந்திருந்தார். அதன் பலனைத் தான் இறுதியில் அனுபவித்தார், மிகவும் கொடுமையாக.
மாயா
பிரபாகரன், தன் தளபதிகள் தன்னை விட்டு அகல விடாததற்கு காரணம் தளபதிகள் படையினரிடம் தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவார்கள் என இருந்த பயம்.
தளபதிகள், தலைவரை விட்டு அகலாததற்கு காரணம் தலைவரோடு இருந்தால் தங்களுக்கு ஆபத்தில்லை என்ற முட்டாள்தனம்.
எல்லோரும் ஒரேயிடத்தில் இருந்து ஒன்றாக கைலாசம் போனதிலிருந்து எப்படியான மடையரை புலி ஆதரவாளர்கள் சிம்ம சொப்பன வீரர்களாகக் கருதினார்கள் என்பது தெரிகிறது. நல்லவேளை ஒன்றாக இருந்து ஒன்றாக போனது. இல்லாவிட்டால் இன்னும் அவலம் தொடர்ந்திருக்கும். ஆண்டவன் என்றவன் அஸ்தி கூட இல்லாமல் போனது உண்மையாக அஸ்தமனம்தான்.