தென்னா பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்காக அமைக்கப்பட்ட புதிய கால்பந்தாட்ட விளையாட்டரங்கு நேற்று முன்தினம் திறந்து வைக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியை முன்னிட்டு ஐந்து புதிய கால்பந்தாட்ட விளையாட்டு அரங்குகள் பயன்படுத்தப்படவுள்ளன. இதன் அடிப்படையில் அமைக்கப்பட்ட புதிய கால்பந்து அரங்கு போர்ட் எலிஸபத்தில் நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. “நெல்ஸன் மண்டெலா பே” என பெயரிடப்பட்டுள்ள இந்த அரங்கு 48,000 ஆசனங்களை கொண்டுள்ளது.
இங்கு 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தின் காலிறுதி மற்றும் மூன்று, நான்காம் இடங்களுக்கான அணிகளைத் தேர்வு செய்யும் போட்டிகள் உட்பட 8 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. எனினும் இங்கு முதல் விளையாட்டாக பிரித்தானிய அயர்லாந்து லயன்ஸ் அணிகள் மோதும் ரக்பி போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது