உயிழிழந்த பொதுமக்கள் 20 000
காயமடைந்த பொதுமக்கள் 60 000
உயிரிழந்த சிறுவர்கள் 3600 (மார்ச் வரை)
காயமடைந்த சிறுவர்கள் 7650 (மார்ச் வரை)
உயிரிழந்த இராணுவத்தினர் 6200
காயமடைந்த இராணுவத்தினர் 30 000
உயிரிழந்த வி புலிகள் ?
காயமடைந்த வி பு ?
புனர்வாழ்வு முகாம்களிலுள்ளோர் 7500
இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ளோர் 275000
‘300 000 வன்னி மக்களுக்கும் மரணத்துள் வாழ்வு’ என்ற தலைப்பில் பெப்ரவரி 11ல் வெளியான லண்டன் குரலில் முன் பக்கச் செய்தியை வெளியிட்டு 10 000 வரையான பொது மக்கள் கொல்லப்படலாம் என்றும் அச்சம் வெளியிட்டு இருந்தோம். அந்த அச்சம் நிஜமானது மட்டுமல்ல கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 000க்கும் அதிகம் என ஐநா செய்மதிப் புகைப்படங்களை ஆராய்ந்தும் ஏனைய தகவல்களின் மூலமும் யுகே ரைம்ஸ் பத்திரிகை ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.
பெப்ரவரி முற்பகுதியிலேயே விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாததைச் சுட்டிக்காட்டியதுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதைச் சுட்டிக்காட்டி இலங்கை இராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் வன்னி மக்களை மரணத்தின் விளிம்புக்கு தள்ளி உள்ளது என்பதையும் எச்சரித்து இருந்தோம். யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரும் பொதுமக்கள் பற்றி எவ்வித அக்கறையையும் கொண்டிருக்கவில்லை.
பெப்ரவரி முற்பகுதியிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை சர்வதேச சமூகத்திடம் ஒப்படைத்து அரசியல் தீர்வுக்கு முன்வர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்தி இருந்தோம். ஆனால் இவைபற்றி கருத்தில் எடுக்காமல் இந்தியத் தேர்தல் முடிவுக்காக காத்திருந்து அனைத்தும் முடிவுக்கு வந்தபின் சரணடைந்து தங்கள் உயிர்களை இழந்துள்ளனர் புலிகளின் தலைமை. இவர்களின் முட்டாள்தனமான அரசியல் முடிவுகளுக்கு 20 000 பொதுமக்கள் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர். அதனைப் போன்று பல மடங்கினர் காயத்திற்குள்ளாகி உள்ளனர். ஒட்டுமொத்த வன்னி மக்களும் 275 000 பேர் அகதிகளாக்கப்பட்டு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணை மூடிக்கொண்டு பாழ்ங் கிணற்றில் வீழ்தது மட்டுமல்ல அதற்கு முன் வன்னி மக்களை அப்பாழ்ங்கிணற்றில் தள்ளிவிட்டுள்ளனர். புலிகள் மட்டுமல்ல புலம்பெயர்ந்த புலி ஆதரவுக் குழுக்களும் குறிப்பாக புலி ஆதரவு ஊடகங்கள் இந்த அழிவுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்.
யுத்தப் பிரதேசத்தின் யதார்த்த நிலையை விளங்கிக் கொள்ளாமல் புலிகளின் தலைமைக்கு எதுவெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்குமோ அவற்றை மட்டுமே தொலைக்காட்சியில் காட்டியும் வானொலியில் முழங்கியும் பத்திரிகையிலும் இணையங்களிலும் எழுதியும் வந்தனர். ‘வன்னி மக்கள் பெரும் அவலத்திற்குள் தள்ளப்படுகின்றனர். அவர்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்தக் கூடாது. இலங்கை அரச படைகளின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மக்கள் கொல்லப்படுவார்கள். அதனைத் தடுத்து நிறுத்த வேண்டும்.’ என்ற எண்ணம் இந்த ஊடகங்களிடம் இருக்கவில்லை. மாறாக கொல்லப்பட்டவுடன் அதனைப் பிரச்சாரப்படுத்தி அரசியல் செய்யவே முற்பட்டனர்.
இந்த மக்களின் குருதியில் அரசியல் பிரச்சாரம் செய்த ஜி ரிவி தீபம், ஐபிசி, ஒரு பேப்பர் மற்றும் புலிகளின் ஊது குழல்களான ஊடகங்கள் மக்களின் உயிரிழப்புகளும் அவலமும் தவிர்க்க முடியாதது என்ற வகையிலும் அவ்வாறான அழிவுகளே தமிழீழ உருவாக்கத்திற்கு வழியேற்படுத்தும் என்றும் பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டன.
வன்னி மக்கள் எதிர்நோக்கிய மரண வாழ்வுக்கும் அவலத்திற்கும் இலங்கை இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சம பொறுப்புடையவர்கள் என்பதே சுயாதீன அமைப்புகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. ஆனால் இதனை முற்றாக மறைத்து வன்னி மண் பூர்வீக மண். அந்த மக்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது என்று ஐரோப்பிய மற்றும் மேற்குநாடுகளில் உள்ள இந்த ஊடகங்கள் வன்னி மக்களை மரண வாழ்வுக்குள் இருக்க நிர்ப்பந்தித்தனர். இந்த மக்களின் அவலத்தில் புலிகளுக்கும் சம பொறுப்பு இருப்பதை தட்டிக் கேட்காமல் புலிக் கொடிகளையும் எங்கள் தலைவர் பிரபாகரன் என்று பிரபாகரனின் படத்தையும் தாங்கி நடத்தப்படும் ஊர்வலங்களுக்கு வக்காலத்து வாங்கினர்.
இலங்கை இராணுவம் மூர்க்கத்தனமான செல் தாக்குதலை நடத்த அதிலிருந்து தப்பி ஓடும் மக்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றனர். இங்குள்ள ஊடகங்கள் இதனைக் கண்டு கொள்ளவேயில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளைத் திருப்திப்படுத்த இவர்கள் செய்த ஆய்வுகளும் விமர்சனங்களும் கானல் நீர் போலாக இன்று புலிகளின் தலைமை முற்றாக அழிக்கப்பட்டு வன்னி மக்களும் அவலத்திற்குள் தள்ளி விடப்பட்டுள்ளனர்.
புலிகளின் தலைமை அழிப்பதற்கு இருபத்திநான்கு மணிநேரத்திற்கு முன்னரும் தமிழீழத்தை அடைவதற்கு நெருங்கிவிட்டோம் என்று ஆய்வுகளும் விமர்சனங்களும் செய்த இந்த ஊடகங்களால் விடுதலைப் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டது என்பதைக் கூடச் சொல்ல முடியவில்லை.
புலிகளை தட்டிக்கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைத்து இருந்தால் புலிகளின் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும் வன்னி மக்களும் இந்த அவலத்திற்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்.
ஆனால் காட் விற்பனையையும் விளம்பரத்தையும் மட்டும் நோக்காகக் கொண்டு சிற்றின்பத்திற்காக ஜி ரிவி தீபம் ஐபிசி ஒரு பேப்பர் போன்ற ஊடகங்கள் புலிகளுடன் செய்த கூட்டுக்கலவியே புலிகளுக்கு உயிராபத்தான நோயை ஏற்படுத்தியது. இறுதியில் சடுதியான அழிவையும் ஏற்படுத்தியது.
இந்நோய் புலிகளின் மூளையின் நரம்புத் தொகுதியைத் தாக்கி அவர்களின் சிந்தனைத் திறனை அழித்து கற்பனையுலகில் உலாவிட்டது.
இந்நோய்குரிய அறிகுறிகள் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஜனனி ஜனநாயகத்திலும் தென்படுகிறது. ஊடகங்களுடனான இந்தக் கூட்டுக் கலவியில் இருந்து விலத்தி யதார்த்தை புரிந்துகொண்டு செயற்படுவது ஜனனியின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்.
Udumpu
What Jeyabalan says in simple language is Ms Janani has to turn towards thesamnet for her political future. LTTE lacks a leader and if she listen to Jeyabalan she really has a chance.
It is strategically very significant proposal. I don’t know whether LTTE and Ms Janani would understand the positive consequences for the future of LTTE.
Jeyabalan offers his media skills and specially the very good relationship with India to rehabilate the LTTE.
There are voices within the LTTE insists the need of reestablishing a working relationship with India. Since the main suspects of the murder of Rajiv Ghandhi is no more living such development is posible. However the “Tamil Net” is consequently promote a pro USA line.
The question is whether the LTTE divided badly in finding a political direction would understand and accept this offer.
மாயா
// இந்நோய்குரிய அறிகுறிகள் ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் நிற்கும் வேட்பாளர் ஜனனி ஜனநாயகத்திலும் தென்படுகிறது. ஊடகங்களுடனான இந்தக் கூட்டுக் கலவியில் இருந்து விலத்தி யதார்த்தை புரிந்துகொண்டு செயற்படுவது ஜனனியின் அரசியல் எதிர்காலத்திற்கு நன்மை பயக்கும்//
இது காலம் கடந்த ஞானம். புலிகளில் முக்கிய பிரமுகர்களாக இருந்தவர்களை மாற்று கருத்துக் கொண்டோர் உள்வாங்கும் முயற்சி மிக ஆபத்தானது. இவர்ககளை உள்வாங்கும் அமைப்புகள் அழியவே வாய்ப்புகளுள்ளது. அதிலும் குறிப்பாக புலி எழுச்சியை தமக்கு சாதகமாக்கி தம்மை வளர்த்துக் கொள்ள முயன்றவர்கள் முக்கிய புலி உறுப்பினர்களை விட ஆபத்தானவர்கள்.
தவிரவும் புலி என்ற பெயரால் சிறீலங்காவில் எதுவுமே செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. புலிகளை மாற்று சிந்தனையாளர்கள் ஏற்றுக் கொள்வது அல்லது உள்வாங்கும் முயற்சி கூட அவர்களும் புலிகள்தான் என்ற ஆபத்தை உருவாக்குவதோடு அவர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலைக்குத் தள்ளிவிடும். இதை புலத்து புலிகளே உருவாக்கும் சதியை செய்யும், ஊடுருவும் சாத்தியமுண்டு. இங்கே மாற்று இயங்களில் இருந்து புலிகளுடன் இணைந்து பச்சோந்தி வாழ்வு நடந்தி வாழ்ந்தோரும் மிக மிக அவதானமாக கவனிக்க வேண்டியவர்கள். புலிகளை விட இவர்களே ஆபத்தானவர்கள்.
புலி ஆதரவு பொது மக்கள் குறித்து கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் திறந்த கடையில் பொருள் வாங்கியவர்களுக்கு ஒப்பானவர்கள். மாற்றுக் கருத்தாளர்கள் கடை திறந்தாலும் அங்கு வந்து பொருள்களை வாங்குவார்கள். அவை தரமானதாக இருந்தால்.
மாற்று சிந்தனையாளர்களிடம் புலிகளை விட பலமும் அறிவும் சார்ந்தவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள். அதனாலேயே அவர்களால் இன்றளவும் தாக்குப் பிடிக்க முடிந்திருக்கிறது. அவை 30 வருடங்களுக்கு மேலாக புலிகளால் எழுந்திருக்கவே முடியாமல் தடுக்கப்பட்டே வந்தது. இது அவர்கள் மெதுவாக எழுந்து இயங்க வேண்டிய தருணம். புலிகளுக்குள் புத்திஜீவிகள் குறைவு. மாற்று கருத்தாளர்களிடம் புத்திஜீவிகள் அதிகம். அதனால் புலிகளிடம் கருத்து மோதல்கள் இருப்பதில்லை. தலைமை சொல்வதை முட்டாள்தனமாக ஏற்றுக் கொள்பவர்கள் புலிகள். மாற்றுக் கருத்தாளரிடம் ஆயிரம் மாறுபட்ட கருத்துகள் வருவதுண்டு. அவையே ஒற்றுமைக்குள் முரண்பாடாகவும் எழுவதுண்டு. இவையே விவாதங்களாகி பிரிவதற்கான தன்மையை கடந்த காலங்களில் உருவாக்கியது. இவை சற்று புரிந்துணர்வுடன் செயலாக்கம் பெற்றால் மாபெரும் மாற்றங்கள் உருவாகும்.
மாற்று இயக்கத்தவர்கள் அரசோடு இணைவு ஒன்றுக்குள்ளும் ஏதோ கருத்தியல் ரீதியாக தமது கொள்கைகளில் மாறாத் தன்மை கொண்டவர்கள். புலிகளில் இருந்து பிரிந்து வந்தவர்கள் அரசின் அடிமைகளாகி புலிகளின் அழிவுக்கு முன்னணியில் இருந்து உழைப்பவர்கள். அடிமைகள் எங்குமே சிந்தித்ததில்லை. அவர்கள் எப்போதுமே தன்னை அடிமைப்படுத்துபவன் காலால் இடும் கட்டளையை தலையால் செய்பவன். எனவே மாற்று சிந்தனையாளர்கள் அவதானமாக செயல்படும் நேரம் இது. இல்லாவிடில் தன் தலையிலேயே மண் கொட்டிக் கொண்டதற்கு சமமாகிவிடும்.
babu
ஜபிசி செய்திகள் மற்றும் தாயகத்தை நோக்கி என்ற நிகழ்ச்சிகளில் ராஜன் மிகவும் முக்கியமாக ஜெகன் போன்ரோரது வார்த்ததைப் பிரயோகங்கள் எப்படி எல்லாம் இருந்தது எப்படி மக்களை பிரித்து நடத்தினர் எப்படி தமது பொருளாதார ஈட்டுக்காக செயற்ப்பட்டனர்.
மாற்று இயக்கத்தவர்களை இன்று வரை காட்டிக் கொடுப்பவர்கள் துரோகிகள் என்று பேசிக் கொண்டிரக்கின்றனர். இன்று புலிகளும் புலிகளில் இருந்தவர்களே இன்று அரசுக்கு துணை போகின்றனர் இது ஜபிசிக்கு தெரியாது (கருணா -சங்கீதா- பிள்ளையான் இவர்கள் வரிசையில் யோகியும் வரவுள்ளதாக தெரிகிறது) புலிகள் சொன்ன துரோகிகள் இன்றும் அரசக்கு எதிராக செயற்றப்படுகின்றனர்.
இன்று புலிகளும் புலிகளின் தலைவர் பிரபாவும் துரோகியாகியுள்ளனர். 2 நாட்களுக்கு முன்பும் சயளைனட்டையும் குண்டையும் கொடுத்து அனுப்பி குழந்தைகளை கொலை செய்த பிரபாகரன் 2 நாள் கழித்து தானம் தனது பிள்ளைகளடன் உயிர்ப்பிச்சை கேட்டு சரணடைந்தார் ஜபிசிக்கு தெரியுமா?
பிரபாகரனுக்கு அஞசலி செய்யாதது ஒன்று தான் ஜபிசி செய்த சரியானவிடயமாக இருக்கும்.
ஜபிசியின் பல ஒலிபரப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் பலவற்றுக்கு ஒருநாள் பலர் பதில் சொல்லவேண்டி வரும் -சரணடைய அனுமதிக்கப்பட மாட்டாது.
பார்த்திபன்
இன்னும் இந்த துரோக ஊடகங்களை நம்பிக் கொண்டு தொடர்ந்தும் போராடுவோமென குரல் கொடுத்து வரும் நேயர்களின்(குறிப்பபாக பல பெண் நேயர்கள்) நோய் எப்போது குணமாகும்??
desblack
தெசம்நெற் டிபன்ஸ்.எல்கே இன் தமிழ் பிரிவு போல் இருக்கிறதே?
msri
ஊடக்துறையால்> தறகாலிகமாக் எல்லா உண்மைகளையும் பொய்யாக்கலாம்! நம்பவும் வைக்கலாம்! இதையே மக்கள் விரோத மகிந்தாவும் கூட்டாளி இந்தியாவும் ஒருபுறமும்> புலிகளும் செயதனர்! செய்தும் வருகின்றனர்! பிபாகரன் கருணா அம்மான் முன்னிலையிலேயே சித்திரவதை செய்யப்பட்டார் பினனால் கொல்லப்பட்டார! என செய்திகள் வநதவண்ணம் உள்ளன! எப்படியோ இறந்தே விட்டார்! ஆனால் புலமபெயர் புலி ஊடகங்கள் ஓர் சாதாரண மனிதனுக்கு கூட செய்யும் அஞசலியைக்கூட தங்கள தலைவனுக்கு செய்யவே இல்லை! இப்போதும் உரிய நேரத்தில் வரவார் என்கின்றனர்!
babu
//டிபன்ஸ்.எல்கே இன் தமிழ் பிரிவு போல் இருக்கிறதே?//
ஜபிசியின் அறிவிப்பாளர் ஒருவர் பெயரில் புலிகளின் பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளதாயும் அதனாலேயே இவர்கள் இப்படியாக இந்த முதலீடுகள் இனிமேல் தமக்கே என்ற தூர நோக்குடன் செயற்ப்பட்டு புலிகளை இவ்வளவு விரைவில் களத்திலிருந்து வெளியேற்றினர் எனப் பேசப்படுகிறது.
அலைகள் ஓய்வதில்லை புலிகளின் அழிவில் இப்படியானவர்களின் சம்பந்தம் நிறையவே உண்டு இனிமேல் பல உளவுப் பண்டங்கள் வரும் விடியும்வரை காத்திருங்கள்.
தூரத்து இடிமுழக்கங்களையும் கேட்க தவற வேண்டாம்.
babu
புலம்பெயர் புலி ஊடகங்கள் ஓர் சாதாரண மனிதனுக்கு கூட செய்யும் அஞசலியைக்கூட தங்கள தலைவனுக்கு செய்யவே இல்லை! இப்போதும் உரிய நேரத்தில் வரவார் என்கின்றனர்//எம்சிறி
தம்வசம் உள்ள புலிகளின் பணத்தை தமதாக்கிக் கொள்ளும் யுக்தியைவிட இவர்களிடம் வேறு எதுவுமில்லை இவையாவும் வெளிப்படுத்தப்படும்.
Natives
SL has 3 classes of people, class 1) People who live in the North who not know the emotions and struggle of the Sinhalese. class 2) People who live in the middle of SL a mixture of variety of ethnicity and class 3) the people who live in the South who do not know the emotions and struggle of the Tamils. Most of the posters in this thread seem to fall into class 2, where they have lived among Sinhalese and Tamils. The people in class 2 have for generations have enjoyed and tolerated each others company. The class 2 have lots of educated elites (speaks more than 1 language). Some of the Class 2 people, for their own personal advancement instigated and poisoned the minds of people from Class 1 and 3. Class 1 and Class 3 took up arms and fought while class 2 comfortably migrated to other countries and remote controlled the war efforts. The current SL government is mostly comprises of class 3 people while previous SL governments were mixture of people from class 2 and 3, but the core ruling team came from class 2.
For the good or bad the conventional war has come to end at the expense of huge human cost. There are lots and lots of horror stories. For all practical purpose the class 3 won the war and now class 3 has the responsibility to provide a respectable and honorable solution to class 1 to win the peace. This will take time and effort. Class 3 will provide a solution that is agreeable to all the Sangas( or peedas or peedam) and will keep the solution carrot hanging for a while to maximize the foreign aid.
The current SL government is set to rule the country for a long time, the opposition is in shambles. MR and brothers will rule SL like the old dynasties (ex. Gandhi’s, Bandaranaike…) for a long time in SL. I know lot of SL people living inside outside don’t like them( including me), but those are the ground realties!!
DEMOCRACY
/ஆனால் காட் விற்பனையையும் விளம்பரத்தையும் மட்டும் நோக்காகக் கொண்டு சிற்றின்பத்திற்காக ஜி ரிவி தீபம் ஐபிசி ஒரு பேப்பர் போன்ற ஊடகங்கள் புலிகளுடன் செய்த கூட்டுக்கலவியே புலிகளுக்கு உயிராபத்தான நோயை ஏற்படுத்தியது. இறுதியில் சடுதியான அழிவையும் ஏற்படுத்தியது./–
நான் இதை நெடுங்காலமாக அறிவுறுத்தி வந்துள்ளேன்!. சிங்களவர்களின் “மகாவம்ச” ஊற்றுக் கருத்தியல் போல் அல்லாமல், தமிழ் ஊடகங்கள்(இந்தியா உட்பட), “சமூகக் கருத்துக்களை”, ஊடகங்களின் “முதலாளிகளின்” வாழ்க்கை வரலாற்று அச்சிலிருந்தே பரப்புகின்றன.உலகப் பொருளாதார “நீரோட்டத்தில்” இவர்கள் சுருட்டிச்சேர்த்த பொருள்களே இவர்களின் தகுதியாக, சமுக தொடர்ச்சியை, வரலாற்றை மறுத்தளிக்கிறார்கள். இந்த நோய் இன்னும் பல கொடிய விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது.