இன நல்லுறவுடன் வன்னி முகாம்களில் உள்ள மாணவர்களுக்கான கல்வித் திட்டம் : த ஜெயபாலன்

mr-wais.jpgவன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு இலங்கை மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன் வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் முகாம்களில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் 5 பயிற்சி நூல்கள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக 2009 ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெயர்ந்த தரம் 05இல் கல்விபயிலும் 1057 மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் இணைந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது.

2009.06.01ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் உள்ள இடம் பெயர்ந்த தரம் 5 மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, வவுனியா நலன்புரி நிலையங்களில் செயற்படும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி மேலதிகமான 3815 மாணவர்களுக்கும் மேற்படி உதவியினை வழங்க தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் முடிவெடுத்தது. அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் சில அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 2, 777,040 ரூபாவாகும். இச்செலவில் முன்றிலொரு பங்கினை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாம் கட்டமாக 3815 மாணவர்களுக்கு வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை நாணயப்படி 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் நேற்று சிந்தனைவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர் ஜனாப் ஏ.எம். வைஸ் அவர்கள் சிந்தனைவட்ட பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்களிடம் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியாக காசோலையை கையளித்தார்.

மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளரும் சட்டத்தரணியும், தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட அதிகாரியும், சத்திய பிரமாண ஆணையாளரும், சமாதான நீதவானும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினதும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தினதும் கண்டி மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் அவர்கள் “தேசம்நெற்”க்கு வழங்கிய விசேட நேர்காணல் எதிர்வரும் தினங்களில் இடம்பெறும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • vanthiyadevan
    vanthiyadevan

    there are more than 850 children without parents in idp camps
    thaesamnet have to do something for this children through littleaid or????
    i am prepaired in anyway but need some organaisation support will thaesamnet????

    Reply
  • S Murugaiah
    S Murugaiah

    தேசம் நெற்றும் அதனுடன் இணைந்து சில நிறுவனங்களும் முன்னெடுத்த இக் காலத்தின் தேவை கருதிய பணியை பாராட்டுவதுடன் உண்மையான நோக்கத்துடன் அரசியல் கலப்பற்று செய்யும் இப்பணிக்கு தமிழர் என்பராகில் இக்காலகட்டத்தில் நன்றியும் பங்களிப்பும் நல்குவது மிக்க நன்று. முஸ்லீம் பட்டதாரிகள் சங்கத்திற்கு இப்பணியில் பங்கெடுத்ததிற்காக ஒவ்வொரு தமிழரும் கடமைப்பட்டுள்ளோம்.

    1990 ல் பல்கலைக்கழகத்தில்எங்களுடன் கூடிப்படித்த முஸ்லீம் மாணவ மாணவிகளை வடக்கிலிருந்து துரத்தியபோது தம் படிப்பை தொடர முடியாமல் அவர்கள் கஷ்டப்பட்டபோது புத்தளம் >>மாவனல்லை >நீர்கொழும்பு>சிலாபம் பகுதிகளில் அல்லலுற்ற எம் முஸ்லீம் நண்பர்கள் சிலருக்கு எங்கள் சக்திக்கு உட்பட்ட வரையில் உதவி செய்ய முடிந்ததே தவிர ஓர் நிறுவன மயமானதான உதவிகளை எம்மால் செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம்என்னுள் இன்றும் அரித்துக் கொண்டிருக்கும் விடயமாகும்.
    நன்றி மீண்டும் அவர்களுக்கு
    ச முருகையா

    Reply
  • மாயா
    மாயா

    பாராட்டுதலுக்குரிய விடயம். நல்லதை மெதுவாக செய்தலும் நல்லதே.

    Reply