சண்டே லீடர் பத்திரிகையின் பிரதமர் ஆசிரியரான லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பவம் குறித்த அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மிரிஹான மற்றும் கல்கிஸை காவல்துறையினரால் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் செல்லிடத் தொலைபேசியைத் திருடிய சந்தேக நபரைத் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்தப் படுகொலை சம்பவம் குறித்த விசாரணைகளை இரகசிய காவல்துறையினரோ அல்லது உயர் காவல்துறை அதிகாரிகளோ மேற்கொள்ள பணிக்குமாறு அமரர் லசந்த விக்ரமதுங்கவின் குடும்பம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார். எவ்வாறெனினும், சட்டத்தின் பிரகாரம் அவ்வாறான உத்தரவுகளைப் பிறப்பிக்கும் அதிகாரம் தமக்கு இல்லை என கல்கிஸை நீதவான் தெரிவித்துள்ளார்.