இலங்கை வட பகுதியிலிருந்து ராணுவம் விரைவில் வெளியேற நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அரசுக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆதரவு கட்சி என்று கருதப்படும் தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் 4 எம்.பி.க்கள் தில்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு அரசின் அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக இந்தியா அளிக்கும் நிதி முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிப்பதற்கு குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழுவில் தமிழ் தேசியக் கட்சி பிரதிநிதி ஒருவர் இடம் பெற வேண்டும் என்று எம்.பி.க்கள் கோரினர்.
தமிழர்களை மீண்டும் அவர்களது வசிப்பிடங்களில் குடியமர்த்த இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை தமிழ் எம்.பி.க்கள் குழு தலைவர் சம்பந்தன் பாராட்டினார்.
அமைச்சர் கிருஷ்ணாவைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு தமிழ் எம்.பி.க்கள் பேட்டியளித்தனர். இலங்கையின் வடக்கு பகுதியில் தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கு முன்பாக அங்கிருந்து ராணுவம் முழுவதுமாக வெளியேற்றப்பட வேண்டும். இதற்கு இந்தியா இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தோம் என்றனர். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் ராணுவம் முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும். ராணுவ முகாம்கள் முற்றிலுமாக அப்புறப்படுத்தப் பட வேண்டும். ராணுவம் தொடர்ந்து இருந்தால் மக்கள் அமைதியாக, நிம்மதியாக வாழ முடியாது என்று தமிழ் எம்.பி. மாவை சேனாதிராஜா கூறினார்.
வட பகுதியில் தமிழர்கள் மீண்டும் தங்கள் இருப்பிடங்களுக்குச் செல்லவும் மறுவாழ்வு பணிகளுக்கும் இந்தியா இன்னும் அதிக நிதி ஒதுக்க தயாராக உள்ளது என்று அமைச்சர் கிருஷ்ணா தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.மறுவாழ்வுப் பணிகளுக்கு இந்தியா அளித்து வரும் உதவிகள் திருப்தியளிப்பதாக உள்ளது என்று சேனாதிராஜா கூறினார்.வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனையும் தமிழ் எம்.பி.க்கள் சந்தித்துப் பேசினர்.
ராபின் மெய்யன்
வடக்கிலிருந்தது இராணுவம் வெளியேறிவிட்டால் மட்டும் தமிழ் மக்களது பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து அவர்கள் வாழ்வில் சுபிட்சம் மலர்ந்துவிடுமா? தொலைநோக்கற்ற பார்வையும், பிரச்சனையின் உண்மையான தாற்பரியத்தை புரிந்துகொள்ளக் கூடிய சிந்தனைத் தெளிவும் இல்லாத நிலையிலேயே தமிழ் அரசியல்வாதிகள் இன்னமும் இருக்கிறார்கள் என்பதற்கு இவர்களுடைய அற்பக் கோரிக்க்கைகளே சான்று. இவ்வளவு மக்கள் அவலத்தின் பின்னரும் கூட தாம் சார்ந்திருக்கும் மக்களுடைய உடனடித் தேவை என்ன என்பது பற்றியோ அல்லது இந்தியா வகிக்கக் கூடிய பங்களிப்பு பற்றியோ இவர்களால் தெளிவாகச் சிந்திக்க முடியவில்லை என்பதும், மேலும்மேலும் தமது அற்ப பதவி சுகத்திற்காக இவர்கள் தொடர்ந்தும் இதே பாணியிலேயே செயற்படுவர் என்பதும் நமது மக்களின் தலைவிதியே…
SUDA
அறிக்கை பொலிரிக்ஸிலிருந்து கோரிக்கை பொலிரிக்சுக்கு வந்திருக்கு இந்நதக் கூத்தமைப்பு
மாயா
இது போன்ற அறிவுக் களஞ்சியங்களால்தான் தமிழர் பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. டிலான் பெரேரா போன்ற சிங்களவருக்கு தமிழர் மேல் உள்ள அக்கறை கூட இந்த மாங்கா மடையர்களுக்கு இல்லை. புலிகளோடு இருந்த இந்த எலிகளும் அழிந்தால் மட்டுமே இலங்கை தமிழருக்கு விடிவு கிடைக்கும்.
palli.
ஜயா தயவு செய்து இந்த கூதமைப்பைவிட்டு கூட்டமைப்பாக செயல்படகூடாதா? இப்போதும் அப்போது போல் நடக்காத நடக்கமுடியாத விடயத்துக்கு தம் கட்டி கத்துவது நியாயமா?? ஏதாவது தமிழருக்கு பிரயோசனமாய் பேசுங்கள் செய்யுங்கள்; அல்லது எங்காவது கேளுங்கள் அகதி விண்ணப்பத்தை; அது சரி எங்கே உங்க சிறுத்தை சிவாஜிலிங்கம்; கண்டால் பல்லி சுகம் கேட்டதாய் சொல்லுங்கோ;
vanthiyadevan
சிறுத்தை சிவாஜிலிங்கம் hiding in the juncle (with his family enjoying the victory of sl troops)
chandran.raja
ஈழத்தமிழ் மக்கள் கணவன் மணைவி பிள்ளைகள் சகோதரங்கள் சுற்றத்தார் நண்பன் அரசியல் உணர்வுள்ளவனுக்கு என்றுமே வணகத்கத்திற்கு உரியவர்களாக கணிக்கப்படும் “தோழன்” எல்லோரும் அழிக்கப்பட்டு எஞ்சிப்போனவர்கள் மிகுதி வாழ்கையை மீண்டும் தொடர நிர்பந்திக்கப் பட்டிருக்கிறார்கள். இந்த இடத்தில் அடிபட்போன பொருளாதார ரீதியில் நலிவடைந்திருக்கும் மக்களை எப்படி தூக்கி நிறுத்த முடியும்?.
இதைப்பற்றி சிந்திப்பதே அறிவுஜிவீகளின் செயல்பாடாகவும் இருக்கமுடியும். தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு என்றுமே ஒரு அரசியல் கொள்கை இருந்தது கிடையாது பயம் பீதி அடிபணிவுத் தன்மை தங்கள் சுகபோகவாழ்வுக்காக எல்லாவற்றையும் துறந்துவிடும் “ஞானம்” பெற்றவர்கள் தான் இந்த கூட்டமைப்பினர்-ஆயுதம் ஏந்தாத புலிகள்.
கடந்த காலவரலாற்றில் செப்புகாசுக்கு உதவாதவர்களாகவே இந்த கூட்டமைபினர்கள் கூத்துப் போட்டிருக்கிறார்கள் இனிஎன்றுமே தமிழ்மக்களுக்கு உதவப்போவதில்லை ஆனந்தசங்கரி அவர்கள் சொன்னது போல இவர்கள் தாமே இராஜினமா கடிதத்தை பாராளமன்றத்தில் சமர்ப்பிப்பதே உசிதமானது.
தமிழ்மக்களின் சுவாசத்தில் துப்பாக்கிகுண்டுகளின் புகைகள் அவர்கள் சுவாசத்தில் ஏறாது போகும் போது இராணுவமும் முளத்திற்கு முளம்இருக்கும் இருக்கும் சோதனை சாவடிகளும் தமதுபாட்டிற்கே அகன்றுவிடும்.
BC
//இந்த கூட்டமைப்பினர்-ஆயுதம் ஏந்தாத புலிகள்.
இவர்கள் தாமே இராஜினமா கடிதத்தை பாராளமன்றத்தில் சமர்ப்பிப்பதே உசிதமானது.//
100% உண்மை.
rony
வடபகுதியில் இராணுவம் உள்ள பகுதிகளில் தமிழர்கள் எவரும் குடியிருக்கவில்லையா. அல்லது தெற்கில் இராணுவமுள்ள பகுதிகளில் தமிழ் மக்கள் இல்லையா? இதென்ன பம்மாத்து. மக்களை குடியேற்றுவதற்காக இராணுவத்தை வெளியேற்றுவதை விட இந்த கூத்தாடிகளை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றிவிட்டாலே போதும் மக்கள் நிம்மதியாக சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டு விடுவார்கள். அதன்பின்பு இக்கூத்தாடிகளை கச்சதீவில் குடியேற்றலாம், அதுவே இவர்களுக்கு மிகச்சரியானதொரு முடிவாகும்.
ihaala
sri lanka is alone country so the srilankan force must stay their by any means so you tamils are still willing to opening the trapped hand of india?