இங்கி லாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் சற்றுமுன் நடைபெற்று முடிந்த ‘டுவென்டி 20’ உலககோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 8’ சுற்றுப் போட்டியில், குரூப் ‘எப்’ பிரிவில் இடம் பெற்ற பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது
டாஸ் வென்ற இலங்கை அணி 20 வது ஓவரில் 7விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய பாகிஸ்தான் அணி 20 வது ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து இலங்கை 19 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.