இரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் எதிர்பாராத அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டு வாக்களிக்க வந்திருந்ததால், அங்கு வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டது.
இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபர் மஹ்மூட் அஹ்மடி நிஜாத் முன்னாள் பிரதமர் மீர் ஹொசைன் மூஸவி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இரானில் மொபைல் தொலைபேசி மூலமாக செய்திகளை பரிமாறிக் கொள்ளும் சேவைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், தம்மால் வாக்குச் சாவடிக்குக்கு இடையேயான மேற்பார்வையை ஒருங்கிணைப்பு செய்ய முடியாத நிலை உள்ளதாக முசவி அவர்களின் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாக தொலைத் தொடர்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த இரு வேட்பாளர்களை தவிர மெஹ்டி கரௌபி மற்றும் மொஷென் ரெசாய் ஆகிய இரு வேட்பாளர்களும் போட்டியில் இருக்கிறார்கள்.