தமிழ கத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் வசிக்கும் ஈழத்தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு கல்வி கற்க நிதியுதவி வழங்க முடிவு செய்திருப்பதாக நடிகர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகுமார், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 30 ஆண்டுகளாக பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பரிசு வழங்கி வருகிறார். இந்தமுறை 30வது ஆண்டாக பரிசளிக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார், அவர்களது மகன்களான நடிகர் சூர்யா, நடிகர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிவகுமார், நான் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். ஒரு வேளை மட்டுமே நல்ல சாப்பாடு கிடைக்கும். கஷ்டப்பட்டு படித்ததால், ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியை செய்து வருகிறேன். மாணவர்கள், தங்களுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மதிக்க வேண்டும். அதுபோல தாய்நாடு மற்றும் தாய்மொழி மீது பற்றுக்கொண்டிருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும்.
இலங்கையில் போர் முடிந்த பிறகாவது நிம்மதி ஏற்படும் என்று பார்த்தால், அங்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காத நிலை இருக்கிறது. இலங்கையில் வாழ்க்கையை தொலைத்துவிட்டு, தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் துன்பப்படுகிற ஈழத் தமிழர்கள் பிள்ளைகளில் சிலருக்கு இந்த ஆண்டு முதல் உதவி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றார்.
rony
நல்ல விடயம்தான். பாராட்டப்படக்கூடியதே. ஆனால் இதுவும் அரசியலுக்கானதொரு படிக்கல்லாக அமைந்து விடக்கூடாது. ஏனெனில் ஈழத்தமிழர் விவகாரம் அப்படியாக்கப்பட்டு விட்டதே. எந்த புற்றுக்குள் என்ன பாம்போ யாரறிவார் இத்தமிழ்நாட்டில்?
பார்த்திபன்
எதையும் சந்தேகக் கண்ணோடே பார்த்துப் பழக்கப்பட்டதால் இதையும் சந்தேகத்தோடு பார்க்கின்றீர்கள் போலுள்ளது. சிவகுமார் குடும்பத்தினர் பல வருடங்களாக சந்தடியில்லாமல் பலருக்கு பல உதவி செய்து வருகின்றார். தற்போது இவ்வுதவிகளில் அவரது இரு பிள்ளைகளும் இணைந்திருப்பதால் உதவித் தொகையும் அதிகரித்துள்ளது. அதனால் இன்று எம்முறவுகளுக்கும் உதவிகள் வழங்க முன்வந்துள்ளார்கள். முன்பு இப்படித்தான் விசு அவர்கள் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகள் நடத்த வந்தபோது அவரை நிகழ்ச்சிகள் நடத்த முடியாதவாறு புலிப்பினாமிகள் அவமதித்து அனுப்பினர். ஆனால் அதன் பின்பும் விசு அவர்கள் தமிழகத்திலுள்ள எமது பள்ளிச் சிறுவர்களுக்கு படிப்பதற்கு உதவிய போது, எமக்கே செருப்பால் அடித்தது போல் இருந்தது. புலிகளும், புலிப்பினாமிகளும் எம்மக்களுக்கு நண்பர்களை உருவாக்கியதை விட, எதிரிகளை உருவாக்கியதே அதிகம். அதே தவறை நாமும் செய்ய வேண்டாம் என்பதே எனது தலையாய கருத்தும்.
சாந்தன்
பார்திபன் கூறியதுபோல நடிகர் சிவகுமார் சந்தடியில்லாமல் பலருக்கும் உதவி செய்பவர். 1977 இல நடந்த இனக்கலவர்த்தின் போது கூட உதவிவழங்கியவர். பின்னர் இயக்கங்கள் தமிழ்நாட்டில் இருந்தபோது உதவி கேட்டு செல்லும்போது இன்றைய சுப்பர் ஸ்ரார்கள் கேற்றைப்பூட்டிய சம்பவங்கள் நடந்தன. ஆனால் சிவகுமார் இன்முகத்துடன் உடவி செய்பவர் என பல இயக்கத்தினர் சொல்லிக்கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால் இங்கே விசு பற்றி பார்த்திபன் சொல்லி இருப்பது மிக மிக தவறு.
விசுவின் அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கு என்ன நடந்தது என்பது யாவரும் அறிந்த்டிருந்தும் பார்த்திபன் அறியாமல் இருப்பது வேதனை. விசு என்பவர் ஈழத்தமிழர்கலை ‘களவாணிப் பசங்க’ என சொல்லி இருந்தார். அத்துடன் ராஜிவ் கொலைக்குற்றத்தில் 26 பேருக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டபோது இதை மேன்முறையீடு செய்ய விசுவிடம் கையெளுத்து கேட்ட போது இவர் இனி என்ன இருக்கு தூக்கு லிவரை இழுப்பது தான் வேலை எனவும் எள்ளலுடன் கேட்டார். ஆனால் அந்த 26 பேரில் 4 பேர் தவிர்த்து மற்றையோர் தூக்கில் இருந்தும் பலர் தண்டனையில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர் என்பதே உண்மை. உதவி செய்யாமல் இருக்கலாம் ஆனால் குற்ரமற்றவர் என நீதிமன்றினால் விடுவிக்கப்பட முடிந்த ஒருவரை கழுவேற்ற நினைத்த இவரை என்ன சொல்லி அழைக்கலாம். இவருக்கு அரங்கங்கள் அரட்டைக்காக இருக்கலாம் ஆனால் தூக்கு விதைக்கப்பட்டவனுக்கு அல்ல!
இவர் திரும்பி இந்தியா சென்றதும் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில்ல் அந்நிகழ்வைப்பற்றி பேசப்போவதில்லை என கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடு செய்ய பட்ட கஸ்டங்களும் அந்நேரத்தில் விசு பண்ணிய அட்டகாசங்களும் பற்றி ஏற்பாட்டாளரின் நண்பன் சொன்ன வார்த்தைகள் இங்கே பதிவிட முடியாதன.
Thanga. Mukunthan
சாந்தனுக்கு கொலைசெய்ய யாரோ அனுமதி கொடுத்திருப்பதுபோல கதையளக்கிறார். பாவம் சில நீதி சம்பந்தமான தமிழ்ப் புத்தகங்களை வாசிக்க வேண்டும்.
பார்த்திபன்
சாந்தன்,
இந்திய சினிமாக்காரர்களை புலிகள் எந்தளவு தமக்கு சாதக, பாதகமாகப் பாவித்தார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். விசு நிச்சயமாக இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் குறிப்பிட்டு ‘களவாணிப் பசங்க’ என நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார். சிலவேளை குறிப்பிட்டவர்களைச் சொல்லியிருக்கலாம். அதுபோல் தனது நாட்டுத் தலைவரொருவரை கொலை செய்தவர்களை மன்னிக்கும் மனப்பாண்மை அவருக்கு இல்லாமல் இருக்கலாம். அது தவறல்ல. ஆனால் புலிகள் விசுவின் அரட்டை அரங்கத்தை புறக்கணிக்க வேண்டுமென சொன்னதற்கான காரணம் நீங்கள் கூறிய எதுவுமில்லை. அவர்கள் கூறியது விசு தமது போராட்டத்திற்கு உதவுவதில்லை. இதுபோல் பின்பு ரஜனியின் நிகழ்ச்சியையும் இதேபோல் புலிகள் குளப்பியடித்தனர். அது என்ன காரணத்திற்காக குளப்பியடிக்கப்பட்டது என்பதற்கும் புதிசாக ஒரு காரணம் எழுத முற்பட வேண்டாம். சுவிசில் தங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் கேட்டுப் பாருங்கள் புரியும். அந்நிகழ்ச்சியை நடத்த ஒழுங்கு செய்தவருடன், இன்னொருவர் தானும் கூட்டுச் சேர்ந்து அந்த நிகழ்ச்சியை நடத்த விரும்பினார்.ஆனால் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர் அதற்கு மறுத்ததால், ஏமாந்தவர் அப்போது புலிகளின் பொறுப்பாளராக சுவிசிலிருந்த முரளிக்கு காசைக் கொடுத்து நிகழ்ச்சியைக் குளப்பியடித்தார். இது சுவிசில் எல்லோருக்கும் தெரிந்த விடயம். ஆனால் ரஜனியின் நிகழ்ச்சியைப் புலிகள் குளப்பிய போதும் விசுவிற்கு கூறிய அதே காரணமான தமது போராட்டத்திற்கு உதவுவதில்லை என்பதையே இங்கும் கூறினார்கள். ஆனால் ரஜனியின் படங்கள் வரும்போதெல்லாம் அதைப் பினாமிகளை வைத்துப் பணம் பார்த்தவர்களும் இதே புலிகள் தான்.
palli.
சாந்தன் பார்த்திபன் சொல்லுவது மிகஉன்மை காரைகுடி அரட்டை அரங்கத்தில் ஒரு ஈழதமிழர் பேசினார்: அதில் அவர் விசுவுடன் சிலவிவாதங்கள் கூட செய்தார்; அதில் விசு சொன்னதில் எனக்கு உடன்பாடுதான் அதை விபரமாக பின்பு பார்ப்போம்: அதே அரட்டை அரங்கில் மண்டப முகாமில் படிக்கும் பத்துக்கு மேல்பட்ட மானவர்களுக்கு( ஈழ) தலா 3000 படி உதவி தொகை கொடுத்து மேலும் பலருக்கு தனது நிர்வாகம் உதவி செய்யும் என்பதுக்கு உறுதி மொழி கொடுத்தார்; அந்த நிகழ்வு எப்போது என்ன தேதியில் என்பதையும் பின்பு தருகிறேன்; எமக்கு உதவும் யாராக இருந்தாலும் பாராட்ட அல்லது நன்றி சொல்லவே எமக்கு இப்போது தகுதி; காரனம் உதவி எமக்கல்ல; அங்கே அவதிபடும் அகதிகளுக்கு என்பதை யாரும் மறக்க வேண்டாம்:
சட்டம் பிள்ளை
//எமக்கு உதவும் யாராக இருந்தாலும் பாராட்ட அல்லது நன்றி சொல்லவே எமக்கு இப்போது தகுதி; காரனம் உதவி எமக்கல்ல; அங்கே அவதிபடும் அகதிகளுக்கு என்பதை யாரும் மறக்க வேண்டாம்//
பல்லியின் இக் கூற்றை ஒவ்வொருவரும் ஆழமாக சிந்திக்க வேண்டும்
நண்பன்
புலிகளும் , புலிகள் சார்ந்தவர்களுக்கும் புலிகளூடாக ஏதாவது செய்தால் அது தேசியம். அல்லது தேசிக்காய்தான்.(புளிக்கும்). சுவிஸில் ரஜனியின் நிகழ்வை செய்த SK Treding நாதன் புலி ஆதரவாளர். முன்னர் சுவிஸில் தமிழ்பட விநியோக வழி ரஜனின் நட்பை பெற்றவர். ரஜனியின் நிகழ்ச்சியை நாதன் ஒழுங்கு செய்வதை அறிந்த புலிகள் அதை தமக்கு தருமாறு ரஜனியிடம் கேட்க ” நான் ஏற்கனவே நாதன் உடன் ஒப்பந்தம் போட்டு விட்டேன். அதை மாற்ற முடியாது ” என ரஜனி சொன்னதால் அந்த நிகழ்வை நடத்த விடாமல் பண்ணினார்கள். அதுவும் விழா நடக்கும் அரங்க வாயிலில் கமராக்களை வைத்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு போகிறவர்களை ஒளிப்பதிவு செய்தவாறு உங்கள் குடும்பங்களை தாயகத்தில் கவனித்துக் கொள்கிறோம் என்று அச்சமடைய வைத்தார்கள். மக்கள் அச்சத்தில் திரும்பிச் சென்றனர். அதனால் அன்றைய பேர்ண் நிகழ்ச்சி 50 – 60 பேரோடு நடந்தது. சூரிச் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
இக் காலத்தில்தான் புலிகளின் முரளி பாரீசிலிருந்து ஆட்களை கொண்டு வந்து சுவிஸில் சண்டித்தனம் புரிந்த காலமாக இருந்தது. காசு கொடுக்காத அல்லது எதிர்த்த மக்களது வீடுகளுக்குள் நுழைந்து அடித்த காலம் இது. ஜெர்மன் மொழி தெரியாத மக்கள் அன்று புலிகளை சுவிஸ் அரசு அங்கீகரித்து உள்ளதாக கதைவிட்டிருந்த காலம். உண்மை அதுவல்ல என்பது முரளி கைதான பின்னர் சுவிஸ் தமிழர் உணர்ந்தனர். இவர் … – புலிகளின் காசை கொள்ளை அடித்தார் என புலிகளில் இருந்து துரத்தப்பட்டு தற்போது புலிகளைக் காட்டிக் கொடுப்பவராக கனடாவின் டொரோன்டோவில் வாழ்கிறார். இப்படிப் பாதிக்கப்பட்ட ரஜனி அண்மையில் புலிகளை உண்ணாவிரத மேடையில் புகழ்ந்து பேசினார். இதுதான் புலிகளுக்கும் நல்லவர்களுக்குமுள்ள வித்தியாசம்.
எந்தக் கள்ளனும் புலிகளோடு இருந்தால் அவன் உத்தமன். எந்த நல்லவனும் தனித்து நல்லது செய்தாலும் அவன் கள்ளன். அன்றைய விசுவின் நிலை இன்று சரியாக உணரப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் தலைவரைக் கொன்றவனைக் காப்பாற்ற உதவுவது மற்றொரு தலைவனைக் கொல்ல உதவ ஊக்குவிப்பதாகும். கொலையாளியை தூக்கு என்றவன் தவறானவன். அப்பாவிகளை தற்கொலைத் தாக்குதலுக்கு அனுப்பியவன் தேசியத்தலைவன்? என்ன தேங்காய் மடையர்கள்?
சிவக்குமார் விளம்பரமே இல்லாது உதவி செய்பவர். அதன் ஒரு படியே இது. அவருக்கு நன்றியாவது சொல்லுவோம். புலிகளால் அந்த மக்களுக்கு ஏதாவது செய்ய முடிந்ததா? நல்லதாக…..கெடுதல்கள் செய்வீர்கள் என்பது தெரியும்தானே?
சாந்தன்
//எமக்கு உதவும் யாராக இருந்தாலும் பாராட்ட அல்லது நன்றி சொல்லவே எமக்கு இப்போது தகுதி; காரனம் உதவி எமக்கல்ல; அங்கே அவதிபடும் அகதிகளுக்கு என்பதை யாரும் மறக்க வேண்டாம்//
மிக நல்ல கருத்து. இதையே புலத்தில் செய்யும் போதும் ‘புலி’ காய்ச்சல் சூட்டுடன் அணுகாமல் இருப்பதும் நல்லது
நண்பன்
ஓம்..சாந்தன், புலி அழிந்தது என்று நினைத்தேன். இப்போதுதான் உணர்ந்தேன் புலிகளுக்கு காச்சல் என்று……அங்குள்ள புலிகள் சூடுபட்டு இறந்து போனார்கள். இங்க உள்ள புலிகள் சூட்டோடு சூடா கொள்ளையடிக்கப் பார்க்கிறார்கள். அதுக்கு சிலர் ஜால்ராவும் அடிக்கினம்.
புலிகளின் புதிய போராட்டம் 2 வருடத்துக்கு இணையத்திலயாம். இந்தியர்களையும் இளைஞர்களையும் வலையமைப்புகளூடாக கவர தொடர் பரப்புரை நடத்த திட்டமாம். இணையம் மூலம் தனிஈழம் பிடிக்க புலிகள் இறங்கியிருக்கிறார்கள். அசந்தால் தலை பறக்கும்.