”கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம்.”
தமது இருப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பல இடங்களில் தங்கி சகல உடமைகளையும் இழந்து ஆனால் உயிர்தப்பி தற்போது முகாமில் இருக்கும் ஒரு இளம்குடும்பத்தினருடன் தொலைபேசி மூலம் உரையாடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நேரடி உரையாடலில் அவர்கள் பகிர்ந்துகொண்ட, அவர்கள் அனுபவித்த துன்பங்கள் மனக்கசப்புகள் எதிர்பார்ப்புகளின் தொகுப்பே இக்கட்டுரையாகும்.
”கிளிநொச்சியில் ஏ9 அருகாமையில் அமைந்த எங்கள் வீடு, வசதிகளுடன் கூடிய பெரியவீடு. இவ்வீட்டை தம்மிடம் தரும்படி பலதடவைகள் புலிகள் எங்களிடம் கேட்டனர். ஜந்துபேரைக் கொண்ட எமது குடும்பத்திற்கு அறைகளற்ற குடிசை வீடுகளை பதிலாகக் காட்டினார்கள். உறுதியை எழுதி அவ்வீட்டை எம்மிடமிருந்து எடுப்பதும் அவர்கள் நோக்கமாக இருந்தது. எப்படியும் எமதுவீடு பறிபோய்விடும் என்ற பயம் எமக்கிருந்தது. எனவே இதை வெளிநாட்டு அரசசார்பற்ற நிறுவனத்தினருக்கு வாடகைக்குக் கொடுத்துவிட்டு டிசம்பர் 2008 நடுப்பகுதியில் நாம் அக்கராயன் நோக்கி இடம்பெயர்ந்தோம்.
தொழில் – கம வசதிக்காகவும் அக்கராயன் போனோம். அங்கு எமக்குக் கிடைக்கும் மாத வருமானத்தைவிட அதிகமான பணத்தை புலிகள் அறவிடுவார்கள். என்றுமே புலிகளுக்கு இதைச் சொல்லிக்கொள்ள முடிவதில்லை. அதற்கான சந்தர்ப்பத்தை அவர்கள் தரவுமில்லை. தாம் நினைத்ததை வாங்கிக்கொண்டு போய்விடுவார்கள். இதன் காரணமாகவே தொழில்துறைகள் நஷ்டப்பட்டு அழிந்து போனது பலருடைய அனுபவங்கள். ஏ9 பாதையை அண்மித்த வியாபாரத் தளங்களின் வியாபாரிகள் இதற்கு நல்ல உதாரணம். எமது தொழில்துறைகளை அழித்தது மட்டுமல்ல கிளிநொச்சிக்கு இராணுவம் வருகின்றதென எவ்வித ஆயத்தங்களோ முன்னறிவிப்போ இன்றி உடனடியாக எம்மை வற்புறுத்தி வெளியேற்றியமை மிகவும் கொடுமையானது.
கிளிநொச்சியைவிட்டு வெளியேற மறுத்தவர்கள் பட்ட அவஸ்தை இன்னமும் மனதில் நிலைத்துள்ளது. பச்சை மட்டையடி கொடுப்பது என்பதுதான் வெளிப்படையானது. வெளியேற மறுத்தவர்களின் கைகள் கயிற்றால் கட்டப்பட்டு புலிகளின் வாகனங்களுடன் கட்டப்படும். இந்நிலையில் வாகனங்கள் நகரும். இப்படியான மனிதாபிமானமற்ற செயலின் பின்னால் – இவ்வழிநடத்தலில் நாம் கிளிநொச்சியைவிட்டு வெளியேறினோம். வெளியேறிய நாட்களிலிருந்து பல இடங்களில் தங்கினோம். எம்மிடமிருந்த உடமைகள் உடுப்புகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு இடத்திலும் தொலைத்தோம். குண்டுச் சத்தம் அருகாக கேட்கையில் பயத்தில் பிள்ளைகளையும் தூக்கிக்கொண்டு ஓடுவோம். திரும்பி வந்து பார்க்கையில் எமது பொருட்கள் களவாடப்பட்டிருக்கும். எமது அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் இழந்தோம். இவையாவும் எமது மக்களுக்கான எமது தமிழ் இனத்திற்கான விடிவைத் தேடித்தரும் என்று நம்பினோமோ? இல்லையோ? இந்த வழியால் போய்த்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயநிலை எமக்கு.
இலங்கை அரசும் இராணுவமும் எமது எதிரியா? அல்லது நண்பனா? நாம் என்றுமே பரீட்சித்துப் பார்க்கவில்லை. ஆனால் எம்மீது விழும் குண்டுகள் எமது எதிரிகளே. இது யாரிடமிருந்து வருகிறது என்றும் எமக்கு தெரியாது? ஆனால் இலங்கை இராணுவத்தின் கொடுமை என்ற பேச்சிலிருந்து நாம் விலகுவதில்லை. குண்டு வரும் திசை பார்க்க எமக்கு தெரியாது. எல்லா திசைகளுமே ஒரே திசையாகவே தெரிந்தது.
இடம்விட்டு இடம்மாறுவது கூட யாரோ சொல்வார்கள், மக்கள் அசைவார்கள் நாமும் போவோம். ஏன் மாறுகின்றோம்? காரணம் எப்போதும் ஒன்றாகவே இருந்தது. அது இலங்கை இராணுவம் முன்னேறுகின்றது என்பதே. நாம் எங்கே போகிறோம் என்று யாரும் கேட்பதில்லை. விலகிப்போகிறோம். செல்விழுந்தால் ஓடுவோம். யார்மீது விழுந்தது? அவரது நிலை என்ன? திரும்ப வந்து பார்த்தது கிடையாது. விலத்திப் போகிறோம். புதிய மண், புதிய கிராமம், புதிய குறிச்சி நோக்கி போகிறோம். ஒவ்வொரு புதிய இடங்களிலும் ஒவ்வோரு புதிய பிரச்சினைகள் வரும். தண்ணீர் கிடையாது. தண்ணீர் கிடைத்தால் மரநிழல் கிடையாது. இருந்த பிறகு தான் தெரியும் நாம் கடியெறும்பின்மேல் இருந்து விட்டோம் என்று. ஒழுங்கான நித்திரை கிடையாது. நித்திரையானால் மீண்டும் கண்விழிப்பமோ தெரியாது என்ற மனப்பயம் எப்போதுமிருக்கும். எவ்வளவு கேவலமாகவெல்லாம் நாம் நடத்தப்பட்டோம்.
பாரதிபுரம் ரெட்பார்னா விஸ்வமடு உடையார்கட்டு குரவயல் இருட்டுமடு அம்பலவன்பொக்கணை மாத்தளன் ஆகிய கிராமங்களைத் தாண்டி நந்திக்கடல் அருகே வந்தோம்.
நாம் கிளிநொச்சியை விட்டு வெளியேறும் போது ஒரு உழவுயந்திரம் ஒரு லொறி சமையற்பாத்திரங்கள் மாற்று உடைகள் நகைகள் பணம் எம்மிடம் இருந்தன. இன்று எம்மிடம் எந்த உடமைகளோ பொருட்களோ இல்லை. உடுத்த உடுப்பும் கையில் உள்மாற்று உடுப்புகளும் மட்டுமே மிஞ்சியிருந்தது.
நாம் இத்தனைகளையும் ஏன் இழந்தோம்? எமக்கு தெரியவில்லை? இத்தனை கஸ்டங்களை அனுபவித்தோம் – எதற்காக என்றும் தெரியவில்லை. இது எதிர்காலத்தில் எதை தரப்போகின்றது? என்பதுவும் எமக்கு தெரியவில்லை. பசி களைப்பு. சாப்பாடு தண்ணி எங்கு கிடைக்கும் என்பதைத்தவிர வேறெந்த சிந்தனையும் எம்மிடம் இருக்கவில்லை.
கடந்த 3 ,4 மாதங்களாக நடந்த இந்த மக்கள் யாத்திரையில் எத்தனை நாட்கள் உணவு கிடைத்தது என்று எம்மால் கூற முடியும். எந்த இடங்களில் எந்த மரங்கள் காபய்க்கவில்லை. கனிகள் இல்லை என்பதுவும் எமக்கு தெரியும். எமக்கு உணவுதர யாரும் இல்லை! பாதை சொல்ல யாரும் இல்லை! நடைபயணம் மட்டும் வெற்றிகரமாக முன்னேறியிருந்தது.
குழந்தைகளும் நாமும் படும் அவலங்கண்டு மாத்தளன் பகுதியிலுள்ள ஒரு பெரியவர் நாம் தப்பி ஓடுவதற்கு உதவி புரிந்தார். இவரது வீட்டில் புலிகளுக்குத் தெரியாமல் ஒளித்திருந்து பலர் இந்த வழியாக நந்திக்கடலில் நீந்தி இராணுவம் உள்ள பக்கத்திற்கு போயிருந்தனர். புலிகளின் சென்றி பொயின்ற்றுக்கு பக்கத்தில் உள்ள வீடுகளில் மக்கள் ஒளித்திருந்து புலிகளின் சென்றி பொயின்ரில் அவர்கள் இல்லாத வேளைகளில் நந்திக்கடலினூடாக தப்பியோடுவார்கள். சிலசமயங்களில் புலிகள் வேறு இடத்தில் இராணுவத்தினரை மறிப்பதற்காக ஓடும்போதும் மக்கள் அலை அலையாக நந்திக்கடலில் இறங்கி ஓடுவது வழக்கமானது. பொதுவாக இரவு வேளைகளிலேயே தப்பியோடுவர்.
நந்திக்கடல் அருகே புலிகளின் நடமாட்டங்களை மற்றவர்கள் போல் நாமும் அவதானித்துக் கொண்டிருந்தோம். தப்பி ஓடுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தோம். தற்போது எமக்கு இலங்கை இராணுவத்தின் திசை திட்டவட்டமாக தெரியும். அதை நோக்கி போக வேண்டும் என்பது மட்டுமே எமது இலக்காக இருந்தது.
இராணுவப் பகுதிக்குச் சென்றபின்னர் என்ன நடக்கும் என்றும் எமக்குத் தெரியாது. இலங்கை இராணுவம் உள்ள பக்கம் நோக்கிச் சென்றால் அங்கு எமக்கு தெரிந்த சிலராவது எமக்கு உதவுவார்கள் என நம்பினோம்.
எல்லோரையும் போலவே நாமும் புலிகளின் நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தோம் சிலநாட்களுக்கு முன்பு போல் அல்லாது தற்போது புலிகளின் நடமாட்டம் குறைவடைந்தது. பசியால் கதறும் குழந்தைகளையும் கொண்டு நந்திக்கடலை கடப்பதைவிட வேறு வழியில்லை என புரிந்து கொண்டோம். எனது சகோதரத்தையும் சேர்ந்து வரக் கேட்டேன். அவர்கள் எமக்கு இருப்பதோ ஒரு குழந்தை அந்தப் பிள்ளையை நந்திக்கடலுக்கு பலிகொடுப்பதைவிட இங்கேயே இருப்போம் என்றார். அவரது நியாயம் எனக்கு விளங்கியது. நாம் எமது குழந்தைகளுடன் நந்திக்கடலில் இறங்கினோம். இரவு 06மணி 45 நிமிடம். இரவு கவிழ ஆரம்பித்த நேரம். நாம் வாழ்வா சாவா என்ற தாயக்கட்டையில் இருந்த அந்தகணப்பொழுது இன்றும் நினைவுவரின் பயப்பிடுகிறோம்.
தப்பிஓட முயன்ற பலர் நந்திக்கடலில் இறங்கும்போது இவர்களால் நந்திக்கடல் சிவந்தது. உடல்கள் மிதந்தது. சிலர் தப்பி ஓடினர். எமது குடும்பத்தினருக்கும் எதுவும் நடக்கலாம். என்னவும் நடக்கட்டும் என்று இறங்கினோம். எமக்கு வேறு மாற்றுவழி எதுவுமே இருக்கவில்லை எம்பின்னால் இருந்து துப்பாக்கி ரவைகள் எம்மீது பாய்ந்தது. ஒவ்வொரு சத்தத்துக்கும் குழந்தைகளும் நாமும் தண்ணீருக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து தலைகள் மட்டும் தண்ணீருக்கு மேல் தெரிய மிருகங்கள் போல் புலிகளிடமிருந்து தப்பித்து ஓடினோம். கடலில் மிதந்த சடலங்கள் இந்தக் கடலை நிரப்பியிருந்ததை நாமும் குழந்தைகளும் பார்த்துக்கொண்டே நகர்ந்தோம். இடையிடையே ஆழமான பள்ளங்களுள் ஆள்மாறி ஆள்மாறி விழுந்தெழும்பினோம். அருகேவந்த மற்றவர்களின் முதுகில் புலிகளின் துப்பாக்கி வேட்டுக்கள் பட்டு அலறும் சத்தம் கேட்கையில் எமக்கும் உயிர்போகும். குழந்தைகள் பல தடவைகள் செத்துப் பிழைத்தனர. இந்தப்பயணம் முன்னைய பயணங்கள் போல் அல்லாத பசிதீர்க்கும் பயணமாகவே இருந்தது. குடிதண்ணீர் கிடைக்கக் கூடிய பயணமாகவே இருந்தது. பல மணிநேர போராட்டத்தின் பின் நள்ளிரவில் புலிகளின் பிடியிலிருந்து தப்பி கரையேறினோம். நந்திக்கடலின் இறுதிக்கட்டத்தில் அடைமழை எம்மை மிகவும் வருத்திவிட்டது.
புலிகளின் பார்வையிலிருந்து தப்பி கரையேறும்போது இரவு 11மணி 30 நிமிடம் நாம் வரும்திசைகளை மிகதிட்டவட்டமாக அரச இராணுவம் அவதானித்திருந்தது. இந்த இருட்டினுள் இராணுவம் அடிக்கும் பரா லைட் வெளிச்சத்தில் எமது பயணம் தொடர்ந்தது. சிலர் வழிதவறிப் போய் நிலக்கண்ணி வெடியில் அகப்பட்டு உயிரிழந்தார்கள். அங்கங்களை இழந்தவர்களின் அலறும் குரல்களும் இருட்டினுள் அப்பா அம்மா என்று அலறும் குரல்களும் எம்மை மரணத்தின் விளிம்புக்கு எடுத்துப் போய்வந்தது. இவ்வளவு பரிதாபங்களையும் பராலைட் வெளிச்சத்தில் பார்த்துக்கொண்டு இருட்டில் அசையும் போது நாம் அனுபவித்த மனவேதனையை நினைத்துப் பார்க்கும் போது இப்போதும் அழுகைவருகிறது.
அந்த நள்ளிரவில் எமது கண்ணீரை கழுவிப் போன அடை மழையையும் நாம் மறக்கவில்லை. எமக்கு தப்பியோட உதவிய முதியவரையும் நாம் இன்றும் நன்றியுடன் நினைக்கிறோம்.
இராணுவத்தின் பரா லைட் எமக்கு பாதுகாப்பாகவும் வழிகாட்டியாகவும் புலிகளுக்கு எம்மை காட்டிக் கொடுக்கும் எமனாகவும் அதே நேரத்தில் இருந்தது. ஆனாலும் நாம் இராணுவத்திடம் போய் சேர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். எம்மை மரணத்திலிருந்து பாதுகாக்க வேண்டிய புலிகள் எம்மை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்ததை நாம் என்றும் மன்னிக்க மாட்டோம். இது எத்தனை சந்ததிக்கும் நினைவிருக்கும்.
மீண்டும் பசிப்போராட்டம். சாப்பிட ஏதும் இல்லை. இப்போது நாம் புலிகளின் பயறிங் றேஞ்சில் இல்லை (firing range) களைத்துப்போய் கரையில் பல மணிநேரம் இளைப்பாறினோம். குழைந்தைகளின் பசிக்களையை கண்டு கூட இருந்தவர் தான் கொண்டுவந்த ரொட்டியில் இரண்டை எமக்குத் தந்தார். அதை எனது மூன்று குழந்தைகளுக்கும் பிரித்துக் கொடுத்தேன். தூரத்தே இலங்கை இராணுவம் தெரிந்தது. அவர்களை நோக்கி நடந்தோம். கற்களும் முட்களும் நிறைந்தபாதை எமக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.
மாத்தளனில் புலிகளின் துப்பாக்கிகள் அவர்களின் கைகளில் எம்மை நோக்கியபடியே இருந்தன. தற்போது இலங்கை இராணுவத்தினரின் துப்பாக்கிகள். ஆனால் அவை அவர்களின் தோளில் இருந்தன. அவர்கள் கைகளில் பிஸ்கட் பைக்கட்டுக்ளுனும் தண்ணீர்ப் போத்தல்களுடனும் எம்மை அணுகினர். சாப்பிட்டோம் தண்ணீர் குடித்தோம். எமது குடும்பம் தப்பித்துக் கொண்டது என்ற நிம்மதியில் மரத்தடியில் அடுத்த 7 மணித்தியாலங்கள் உறங்கிவிட்டோம்.
பின்னர் இராணுவம் எம்மை அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தது. 7 நாட்களின் பின்னர் மாற்று உடுப்பு கிடைத்தது. கிளிநொச்சியில் ஆரம்பித்த பயணம் பல மாதத்தின் பின்னர் வவுனியா அகதி முகாமில் முடிவடைந்துள்ளது இனி என்ன? எமது எதிர்காலம் என்ன? எல்லாம் கேள்வியாகவே உள்ளது. யாரிடமும் பதில் இல்லை!
தற்போது சைவப்பிரகாச நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ளோம். 3600 பேர் இங்குள்ளனர். ஒருசிறு கட்டிடத்தில் 55 பேர்கள் ஒரு வகுப்பறையில் படுத்திருக்கிறோம். இரவில் ஒருவரின் தலையில் ஒருவரின் கால்படுவது சாதாரணமானது எனினும் நித்திரைக்குப் போகிறோம். நித்திரை உண்மையிலேயே நித்திரைதான. நித்திரை விட்டு நிச்சயமாக எழுவோம். என்ற நம்பிக்கையுண்டு.
முகாமில் சாப்பாடு ஒருதரம் என்றாலும் நிச்சயம் கிடைக்கும். சாப்பாட்டின் தரம் என்பதைவிட சாப்பாடு கிடைக்கின்றது. குடிதண்ணீர் கிடைக்கின்றது. குழந்தைகள் ஓடி விளையாடுகிறார்கள்.
முகாமில் மக்கள் தொகை அதிகமாதலால் பலவிதமான அசௌகரியங்களை சந்திக்கிறோம். மலசலகூடமும் அதன் சீர்கேடுகளும் துர்நாற்றங்களும் சகிக்க முடியாது. குளிப்பதற்கு நீண்ட வரிசை காத்திருக்கும். நான் இரவு 12 மணியளவிலேயேதான் குளித்துள்ளேன்.
எமது மருத்துவப் பிரச்சினைகளுக்கு வவுனியா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்கள். எமது குழந்தை ஒன்றின் இருதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு விசேட மருத்துவர் ஒழுங்கு செய்யப்பட்டும் தரப்பட்டுள்ளது.
எனது சகோதரர் குடும்பம் இறுதியாக வெளியேறிவர்களுடன் வெளியேறி வேறு முகாமில் உள்ளதாக அறிந்தேன்.
நாம் எப்போது எமது வீட்டுக்குத் திரும்பிப்போவோம் என்ற எதிர்பார்ப்புடன் முகாம்களில் காத்திருக்கின்றோம். எமது முகாமிற்கு டக்ளஸ் பல தடவைகள் வந்துள்ளார் எல்லோருடனும் தனித்தனியே கதைப்பார். நானும் கதைத்துள்ளேன். எமது தேவைகள் பற்றி சொல்லியுள்ளேன் பலர் கடிதங்களாக எழுதிக் கொடுப்பார்கள். நாம் எமது வாழ்விடங்களுக்கு திரும்பிப்போக வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கின்றோம். தற்போது நாம் இருக்கும் இந்தப் பள்ளிக் கூட அகதி முகாம் மிக விரைவில் உழுக்குளம் 6வது நிவாரணக் கிராமத்திற்கு மாற்றப்பட உள்ளதாக அறிகிறோம். பிரிந்த குடும்பங்களை ஒன்றாகச் சேர்க்கின்றார்கள். அதே வேளை தத்தமது வசிப்பிடங்களுக்கு போக விரும்புவர்களது பெயர்விபரங்களும் சேகரிக்கப்படுகின்றது.”
இவ்வாறு இந்த இளம்தாய் தனது நீண்ட கொடுமையான பயணத்தை விளங்கப்படுத்தினார். மிகவும் மனம் பாதிக்கப்பட்ட நிலையிலும் வெறுப்புடனும் உள்ள இவர்கள் மனஆறுதலுக்கு யாருடனாவது கதைப்பதற்கு ஏங்குவதை என்னால் உணரக் கூடியதாக இருந்தது. அவர்கள் இழந்தது சொத்து சுகமல்ல. அவர்களது வாழ்க்கை. தாம் வெளியேறிய பின்னர் நடந்த விடயங்கள் பற்றி கேட்டறிந்தனர். அவர்களுக்கு போர் முடிந்ததை தவிர எவ்வாறு முடிந்தது என்ற விபரம் தெரியாதுள்ளனர். தமது வாழ்வு வளம் தமது எதிர்காலம் எல்லாமே புலிகளால் அழிக்கப்பட்டுள்ளதாக குறைப்படும் இவர்களுக்கு தமது எதிர்காலத்தை எவ்வாறு ஆரம்பிக்கப் போகின்றோம் என்ற அச்சஉணர்வும் உள்ளது.
வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் நிதிஉதவி அளித்துத்தானே புலிகளை இந்த யுத்தத்தை செய்விக்கத் தூண்டினீர்கள். நாம் இன்று இந்த நிலைமைக்கு வர நீங்களும்தானே காரணம். நாம் எமது வாழ்விடங்களுக்கு போய் வாழ நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள்? எனக் கேட்கிறார்கள். அவர்களிடம் கேள்விகள் மட்டுமே நிறையவே உண்டு.
BC
புலிகளின் கொடுமை பற்றி அறிந்திருந்தோம்.இந்த இளம்தாயின் அனுபவத்தை படிக்கும் போது நடுக்கமே ஏற்படுகிறது.இதை வெளியிட்ட தேசத்திற்கும் குமாரிக்கும் நன்றி.வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் புலிகளை ஆதரித்து அந்த மக்களை இந்த நிலைக்கு கொண்டுவந்தது மட்டுமல்ல புலிகளின் பாதுகாப்புக்காக அந்த மக்களை பலி கொடுக்கவும் விரும்பினார்கள்.
பார்த்திபன்
இந்தத் தாயின் வாக்குமூலத்தை வாசிக்க நெஞ்சு கனக்கின்றது. யாரை இந்த மக்கள் நம்பினார்களோ அவர்களே இந்த மக்களின் அழிவிற்கும் காரணமாயிருந்துள்ளார்கள். முன்பும் தப்பி வந்தவர் ஒருவரின் வாக்குமூலமொன்றில், புலிகளே பல மக்களைப் போட்டுத் தள்ளிவிட்டு அவர்களை இராணுவம் கொன்றதாக படம் பிடித்து அனுப்பிக் கொண்டிருந்தார்களாம். சுற்றி நின்ற மக்களுக்கு புலிகள் சொன்ன வேதவாக்கு “இப்படி மக்களின் அழிவுகளை ஏற்படுத்தினாலத் தான் வெளிநாடுகள் எமது விடயத்தில் உடனடியாகத் தலையிடும்” என்பதே.
vaasan
தமிழனுக்கு இந்த நிலை வர காரணம் ஒன்றை பத்தாகி எழுதிறது தான்… உங்களை மாதிரி புலி இல்லை. நீங்கள் எப்படித்தான் எழுதினாலும் புலிக்கு இருக்கிற அங்கீகாரம் தமிழ் மக்களிடம் இருக்கு… வெளிநாடுகளுக்கு உங்களை பற்றியும் தெரியும். புலியபற்றியும் தெரியும். ராஜபக்ச பற்றீயும் தெரியும்… மக்கள் மடையர் இல்லை குமாரி
suban
புலிகளைக் காப்பாற்றக் கொடிபிடித்தவர்கள் தாம் அறியமையால் செய்த தவறுகளுக்கு மீண்டும் தெருஇறக்கி கொடிஇறக்கி பாவமன்னிப்பு கோரவேண்டும். தீபம் ஐபிசி ஜிரிவி மன்னிப்பு கோரவேண்டும் .
nada
தப்பிஓட முயற்ச்சிக்கும் அத்தனை தமிழர்களையும் புலிகள் அனுமதித்திருக்க வேண்டும் அப்படி வெளியேறவிடாமல் தடுத்தது மட்டுமல்ல இந்த மக்களை பலி கொடுத்தே தனது தலைமையை காப்பாற்ற புலிகளின் தலைவரும் புலம் பெயர் புண்ணாக்குகளின் புத்திமதியில் செயற்ப்பட்டனர்
புலம்பெயர் புலிப்பினாமிகளின் பலர் இங்கு பேசப்பட்ட விடயம் இப்படி தப்பிவருபவர்கள் தமிழினத் துரோகிகள் தலைவரை விட்டுவிட்டு ஓடிவரும் துரோகிகள் என்றெல்லாம் துரோகிப்பட்டம் சூட்டினர்
புலிகள் பின்னால் நின்று மக்களை சுட்டுக் கொன்றது எந்த மக்களுக்காக ஆயுதம் ஏந்தினரோ அந்த மக்களையே சுட்டுக் கொன்றனர் புலிகள் இதனால் புலிகள் துரோகிகள் ஆயினர்.
புலம் பெயர் நாட்டில் இந்த மக்களை பலிகொடுத்து தலைவரை காப்பாற்றும் கோழைத்தனமான முயற்ச்சி எடுத்தவர்களும் துரோகிகளே. இன்று இந்த புலம் பெயர் புலிகள் மக்களுக்காக சேர்த்த பணத்தை தமதாக்கிக் கொண்டுவிட்டனர். அதுமட்டுமல்ல புலிகளுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்றும் சொல்லத் தொடங்கி விட்டனர்.
இந்த தாயும் இது போன்ற பல ஆயிரக்கணக்கான தாய்மார்களுக்கும் புலிகளின் 5பில்லியன்கள் பெறுமதியான வெளிநாடுகளில் உள்ள சொத்துக்கள் போய்ச் சேர வேண்டும் அதற்காக செயற்ப்படவேண்டும்.
புலிகள் முதுகில் குத்திய விடயம் பலர் சாட்சியங்கள் உண்டு அரசு மட்டும் தமிழர்களை கொல்லவில்லை புலிகளும் கொன்று குவித்துள்ளனர்.
xavier
we as tamil have to be greatful to mahinda for wipe ltte out more and more stories like this will come outthesamnet need to bring more like this there are more question about thier tatics
Thanga. Mukunthan
உண்மைகளைச் சொன்னால் சிலருக்கு அது பொய்யாகவே தெரியும் அல்லது விளங்கும். அவ்வளவு மூளைச் சலவை நடந்திருக்கிறது – இது இங்கே தான் – அங்குள்ள மக்களோ பாவம் வாய் மூடி மெனியானவர்கள் இப்போது பசியால் நலிவடைந்துள்ளார்கள். கொஞ்ச நாள் போன பின்பு பாருங்கள் மாற்றத்தை! அதுவரை wait please
Poopalarajah
Bravo, Kumarie,
Good job. Good job.
மாயா
புலிகள் செய்தவை வெளிவரும். இது ஒன்றுதான்….. இன்னும் மக்கள் அச்சத்தோடு இருக்கிறார்கள். புலத்தில் உள்ள மக்களிடம் உள்ள அச்சத்தை புலத்தில் உள்ளவர்கள் உணர்வாரானால் வன்னி மக்களின் அச்சத்தை புலத்தில் உள்ளவர்கள் உணரலாம்.
Kusumbo
போர்குற்றம் போர்குற்றம் என்று கொடிபிடித்துக் கோசம் போட்டு புலிப்புண்ணாக்குகளே! இதை எந்தப்போர் குற்றவியல் நீதிமன்றில் ஏற்றபபோகிறீர்கள். மக்களைக் கேடயமாகப் பாவித்த இனத்துரோகிகள் புலிகளே. இந்த விபரணத்தில் எந்தவித பொய்யும் இல்லை. இப்படி மட்டுமல்ல புலிகளின் கேவலங்கெட்ட கொடூரமான மனிதவதைகளை நான்நேரடியாகக் கேட்டறிந்தேன். பின்நோட்டத்தில் பார்த்திபன் கூறியது முற்றிலும் உண்மை. வெளிநாடு தலையிவேண்டும் என்பதற்காக புலிகளே முழுஅநியாயங்களைச் செய்து விட்டு இராணுவத்தின் தலையில் போட்டகதைகள் பல உண்டு. புலிகளின் ஊதுகுழல்களா உள்ள இணையத்தளங்களில் இராணுவம் நச்சுவாயு அடித்து மக்கள் இறக்கிறார்கள் என்று ஒரு கருகிய உடலைப் பிரசன்னமாக்கினார்கள். அப்படத்தைப் உன்னிப்பாகப்பார்த்தால் தெரியும் புலிகளே பெற்றோலை ஊற்றிக் கொழுத்தியிருக்கிறார்கள் என்று. பொசுங்கிக்கிடந்த உடலையும் படுக்கையையும் சுற்றி திராவகம் ஊறியிருந்தது. புலிகள் நினைப்பது போல் வெளிநாடுகளை முட்டாளாக்க முயற்சிக்க வேண்டாம். வெளிநாடுகள் புலிகளை வெள்ளைக் கொடியுடன் அனுப்பி புலிகள் முழுமுட்டாள்கள் என்பதைக் காட்டியது போதாதா.
Kusumbo
நான் கீழே எழுதும் விடயத்தை தேசம் தடைசெய்யாது என்ற எண்ணத்துடன் என்மனக்கிடக்கையை சமர்பிக்கிறேன். புலிகள் மட்டுமல்ல பிரபாகன் எனும்…………சித்திரவதைப்பட்டு இறந்திருந்தால்……………. மக்களை நேசிக்காத எவனும் துரோகியே. மனிதவினத்துரோகியே. கிட்லர் – முசோலின என வந்து மிலோசவிச் ஊடாக இறுதியாய் உலகம் கண்ட மனிதவதை புரிந்தவர்கள் பிரபாகரனும் புலிகளுமே. பிரபாகரன் அல்ல உதவாகரன். ஒருமனிதனின் இறப்பை நான் என்றும் கொண்டாடியதில்லை. நரகாசுரன் கூட மனம் திருந்தி தான் இறந்தநாளிலாவது மக்கள் சந்தோசமாக இருக்கவேண்டும் என்று வாக்குறுதி கேட்டான். இந்தப்பிரபாகரன் ………… அதைக் கூடச் செய்யவில்லை. இறக்கும் போது கூட கொலைவெறியனாக ………………………….அல்லவா செத்தார்…………….. புலம்பெயர்ந்த புண்யாக்குகளே குமாரி எழுதிய உண்மை நிகழ்வுபோல் எக்கச்சக்கமான கதைகள் உண்டு. தமிழ்மக்களே! உண்மையாக நீங்களும் மனித இனத்தை நேசிப்பீர்களாயின் ………………………………. தேசம் உண்மைக்கத் துரோகம் செய்யாது என்ற நம்பிக்கையிலேயே இதை எழுதுகிறேன். தொடர்ந்தும் வாய் மூடி மெளனியாகி இருக்க இயலாது. பிரசுரியுங்கள்.
Velu
Dear Comrade, I am very grateful to your documentation of the Mafia LTTE and its anti people activities in their last moment.It is well known fact from the start that this Criminal and Mafia movement is an anti -people and anti humanitarian.But the socalled tamil diaspora and its finamies are cheated the world and humanity in their favour for a long time. We expect more documentation has to be done in this matter as early as possible.It is the duty of the people who are dedicated their life for the well-being of the people.
Natives
“vaasan on June 14, 2009 11:37 am தமிழனுக்கு இந்த நிலை வர காரணம் ஒன்றை பத்தாகி எழுதிறது தான்…”
No it is people like you …
புலிகளை தட்டிக்கொடுக்கும் இடத்தில் தட்டிக்கொடுத்து இடித்துரைக்க வேண்டிய இடத்தில் இடித்துரைத்து இருந்தால் புலிகளின் தலைமையும் காப்பாற்றப்பட்டு இருக்கும் வன்னி மக்களும் இந்த அவலத்திற்கு உட்பட்டிருக்க மாட்டார்கள்
We plead with the LTTE not to enforce a boycott and enable a racist regime to emerge?The shameless LTTE got just 180 million rupees from Basil.This is the price of betrayal. So who is responsible So if you are in the blame game start with Prabakharan and do so under your own name. You people thought the Thalaiver was going to let the army in and whack them. Now you run around like headless chickens.
You can start support again another bunch of smugglers. If the Tamil people are to extricate themselves from this morass they must first recongnize and acknowledge that Prabhakaran has brought them to disaster. That will be the beginning of redemption and renaissance. Instead if they persist in supporting this man OR his Ideology who has done the greatest damage to the Tamil people I can see no way out. The comic scenes of waving tiger flags and shouts of our leader with Praba’s portrait makes me think that we have no future at all.
thevi
புலிகளுக்கு எப்போதும் சப்பாத்துக்கு அளவாக காலை வெட்டித்தான் பழக்கமே ஒழிய காலுக்கு அளவாக சப்பாத்து செய்ய தெரியாது. எந்தவிதமான அரசியல் அறிவுமற்றவர்கள் வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் மக்களை மயக்கி வைத்திருந்து பொங்கு தமிழ் செய்வதும், ஐம்பது பானையில் பொங்கல் செய்து பிறந்த நாள் கொண்டாடுவதும், இறந்தவர்களை காட்சிப் பொருளாக்கி பிரச்சாரம் செய்வதும் தான் அவர்களின் அரசியலாக இருந்தது. இவர்கள் இப்படித்தான், இவர்கள் மக்களையும் போராட்டத்தையும் அழித்து முடிப்பார்கள் என சொன்னவர்கள் துரோகிகளாக்கப்பட்டனர். இன்னமும் பிரிட்டிஸ் தமிழ்போறம் உட்பட உண்மைகளை புலி சார்ந்தவர்கள் ஏற்க தயாராக இல்லை. உண்மைகளை ஏற்றால் அவர்கள் இதுவரை கட்டி வைத்துள்ள இளையோர் அமைப்பு ,தமிழ் ஆலயம் ,மாவீரர் கொண்டாட்டம், கவனயீர்ப்பு ,கொத்து ரொட்டிக் கடை என இன்னோரன்ன கடதாசி கட்டுமானங்கள் பொல பொலவென உதிர்ந்து விடும். எவ்வாறாயினும் புலியின் இருப்பு மகிந்த தமிழ் மக்களுக்கு என்ன செய்யப் போகின்றார் என்hதிலும் தங்கியுள்ளது.
watch
தொலைபேசி மூலம் உரையாடும் சந்தர்ப்பம் இவ்வளவு நேரம் உரையாட கிடைத்ததோ? குமாரியின் கற்பனை நல்லா வேலை செய்கிறது.
நண்பன்
காசு கொடுத்து முகாமுக்குள் உள்ளவர்களை வெளியே எடுத்து , வெளிநாடுகள் வரை அனுப்ப சில அரசியல் முகவர்களால் முடிந்திருக்கிறது. இவற்றை செய்பவர்கள் மாற்று தமிழ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். இவர்களும் நனைஞ்ச முயலுக்கு பொல்லடி கொடுப்பவர்கள். நீங்களும் திருந்த பாருங்கோ?
இந்நிலையில் தொலைபேசியில் உரையாடுவது ஒன்றும் பெரிய விடயமல்ல watch.
குமாரி
Watch
முகாம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நாம் பல உண்மைகளை சேகரித்துள்ளோம். யுத்த காலங்களில் தமிழர்களை கொல்லுவதில் இருதரப்பினருமே ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஒருதரப்பினர் தாம் ஏவும் செல்கள் எங்கே போய் விழுவது என்று தெரியாமலும் மற்ற தரப்பினர் தாம் தமது தமிழர்களையே கொல்லுகின்றோம் என்று தெரிந்தும் கொன்றுள்ளனர். இவற்றுக்கான பல தொகையான வாக்கு மூலங்கள் உள்ளன. இதில் சம்பந்தப்பட்ட பலருடைய பெயர்விபரங்களும் உள்ளன.
முகாம்களில் உள்ளவர்கள் பலர் தமக்கு நடந்த பல கொடுமைகளை இன்னும் வெளிப்படையாக பேசும் மனநிலையில் இல்லை. அவ்வளவு வெறுப்புடன் உள்ளனர் முகாம்களில் உள்ளவர்கள் தற்போதுதான் தேறி வருகிறார்கள் இன்னும் சிலகாலம் பொறுத்திருக்கவும் பல உண்மைகள் வெளிவரும்.
அதைவிட வாச் ஒருவிடயத்தை புரிந்து கொள்ளவும். எந்நேரத்தில் உங்களுடன் கதைப்பது வசதியானது எனக் கேட்கையில் நாங்கள் இங்கே சாப்பிடுவதும் நித்திரை கொள்வதும் தானே: நீங்கள் எந்தநேரமும் போன் எடுங்கோ என்று பதில் தரப்படுகிறது.
முகாம்களுக்குள் தேசம்நெற் தனிப்பட பலருக்கு உதவிகள் செய்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு செய்த உதவிகளாலும் முகாம்களில் உள்ளவர்கள் தேசம்நெற்றுடன் தொடர்ச்சியாக தொடர்புடனும் உள்ளனர் முகாம்களில் நடைபெறும் பல விடயங்கள் அடுத்த நிமிடமே எமக்கு தெரியவருதையும் வாச் புரிந்து கொள்ள வேண்டும்.
சில முகாம்களில் இணையத்தள வசதிகளும் அதில் skypeம் உள்ளதை மறந்து விடாதீர்கள்.
(skype to skype free communication)
viji
முகாம்களில் இருந்து முக்கிய புலி உறுப்பினர்களும் புலிகளோடு தொடர்புடையவர்களும் பெருமளவு பணத்தை செலுத்தி தப்பி வருகிறார்கள். ஒரு புலி உறுப்பினர் வெளிநாட்டு பிரஜை) அங்கிருந்து தப்பி தனது நாட்டிற்கு செல்ல 21 லட்சங்கள் வரை கொடுத்துள்ளார். அதே போல் முன்னாள் புலி உறுப்பினர் முகாமிற்குள் வந்து ஒரு வாரத்திற்குள் கொழும்பு வந்து இந்தியா சென்றுள்ளார். பணத்தைக் கட்டி வெளியேறும் எவரும் இலங்கையில் இல்லை. இதில் அரசின் உளவுப் படைகளே சம்மந்தப்பட்டுள்ளன. விசாரணைக்கென அழைத்துச் செல்வதாக கூறி வெளியே கொண்டு வந்து விடப்படுகிறார்கள். அவ்வாறு வருபவர்களின் பதிவுகள் எதுவும் முகாங்களில் இல்லாமல் அழிக்கப்படடு விடும்.
watch
Used skype to skype free communication, why don’t you tape the conversation and publish that one as well, So I would trust you!
குரங்கு
/ Used skype to skype free communication, why don’t you tape the conversation and publish that one as well, So I would trust you!//
அப்புறம், உங்க ஆளைவிட்டே பேசச் சொல்லியிருப்பீங்கன்னு சொன்னாலும் சொல்வீங்க!
புலிகளின் சாயம் வெளுக்கும் நாள் வெகுதூரத்தில் இல்லை வாட்ச்… யூ வெயிட் அண்ட் வாட்ச்..!
மாயா
watch இங்கே உங்கள் பதிவுகளை உங்கள் சொந்த பெயரில் முகவரி தொலைபேசி இலக்கங்களுடன் எழுதுவீர்களா?
எழுத மாட்டீர்கள் என்பது எனது நம்பிக்கை. சுதந்திரமாக வாழும் நீங்களே watch என வருவது ஏதோ ஒரு அச்சத்தில்தான். அங்குள்ள முகாம்களில் வாழ்வோரை பலிக்கடாவாக்கி பெயர் வாங்க யாரும் எழுத வேண்டியதேயில்லை. அப்படியானவர்கள் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பொங்கு தமிழில் குத்தாட்டம் போட்டவர்கள் பின்னர் அடையாளப்படுத்தப்பட்டு யாழ்பாணத்தில் கொல்லப்பட்டனர். இப்படியான முட்டாள்தனங்களை புலிகள் பயமில்லாமல் செய்வார்கள்.
watch
மாயா, முதலில் உங்கள் பதிவுகளை உங்கள் சொந்த பெயரில் முகவரி தொலைபேசி இலக்கங்களுடன் எழுதுவீர்களா?