இலங் கையில் சுமார் 37 ஆயிரம் வெளிநாட்டவர்கள் சட்டவிரோதமாக தங்கியுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்கள கட்டுப்பாட்டாளர் பி.பி. அபேகோன் நேற்று தெரிவித்தார். ஒரு மாதகால வீஸாவில் இலங்கைக்கு வருகை தரும் இவர்கள் வீஸாக்காலம் முடிவடைந்த பின்னரும் சட்டவிரோதமாக இலங்கையில் தங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் சட்டவிரோத மாக தங்கியுள்ள இவர்களில் பலர் இங்கு தொழில் புரிவதாகவும் அறிவிக்கப்படுகிறது. இவர்களை கைது செய்ய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதோடு அவ்வாறு சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய உதவுமாறு திணைக்களம் பொதுமக்களையும் கோரியுள்ளது. ஒரு மாத வீஸா மூலம் இலங்கைக்கு இலகுவாக வர வாய்ப்பு உள்ளதாகவும் இவர்களில் பலர் ஆசிய நாட்டவர்கள் எனவும் அறிவிக்கப்படுகிறது.
rohan
அப்படியா?
கொரியாவிலிருந்தும் தாய்லாந்திலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் வந்திருக்கும் அவர்களை எப்படிப் பிடிப்பீர்கள்? பலம் மிக்க மனிட்கர்கள் அல்லவா அவர்களுக்கு ஆதரவு தருகிறார்கள்.