”பத்மநாதன் அண்ணரின் கரங்களைப் பலப்படுத்துவோம்.” – தயா மோகன் விடுதலைப் புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

lttelogo.jpgஅன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே! மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன்.

இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகளோடு தலைநிமிர்ந்து நின்றது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது விடுதலைப்போராட்டம் பல சாதனைகளை செய்தது. சரித்திரங்களையும் படைத்தது. இதற்கு நமது தேசியத்தலைவர் முதன்மைக்காரணியாக இருந்தார். அவரது உறுதி தளராத கொள்கைக்கும் அயராத உழைப்பிற்கும் சர்வதேசமெங்கிலும் இருந்து எம்மக்கள் பலம் சேர்;த்தார்கள்.

ஆனால் இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம் சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து தாங்க முடியாத வேதனையில் நாம் இன்று நிற்கின்றோம். சரித்திர நாயகர்களை இழந்தும் ஆயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களை இழந்த நிலையிலும் தான் சர்வதேசத்தின் பார்வை நமது பக்கம் திரும்பியுள்ளது. ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.

வரலாற்றில் இப்படியான ஒரு நெருக்கடியை நாம் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் பேசப்படுகின்றது. விமர்சனங்கள் பல எழுகின்றன. வரலாறு நமக்கு வழங்காத சில சாதகமான நிலைமைகள் நமக்குள் ஏற்பட்ட துரோகத்தனங்கள் எனப்பலவற்றை நாம் கூறிக்கொண்டு போகலாம். இவகைளைப்பற்றி இவ்வேளையிலே நாம் ஆராய்வதனை விடுத்து நமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் அதனை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பதே நம் முன் இன்று எழுந்துள்ள பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.

நமது வீர மறவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும். எம்மக்களுக்கான உரிமையை நாம் எம் தலைமையின் விருப்பப்படி பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான ஏதுவான சில வழிமுறைகள் சிலவற்றை இன்று காணமுடிகின்றது. அதற்கு ஆயுதப்போர் மட்டும் தான் ஒரே வழி என்ற கருத்தினை நாம் மீண்டும் ஒருதடவை மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் இருகின்றோம். அதாவது எம்மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதவழி ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பதோடு அதனை விடவேகமாக ராஜதந்நிதர ரீதியிலான நகர்வுகள் அமையவேண்டும். இன்றுள்ள உலக நிலைமைகளையும் ஒருதடவை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பு நமக்கு சாதகமாக இல்லை தான். இதில் வெற்றிதோல்வி என்பதனை விடுத்து நமது பிரச்சினை ஜ.நா. வரைக்கும் வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமல்ல சிறிலங்கா அரசுக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் நாம் பார்க்கவேண்டும்.

உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும். இன்றுள்ள நிலையில் இவைதான் நமக்கு சாதகமான நிலை. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சிங்களம் மார்தட்டி வெற்றிக்கழிப்பில் இருக்கி;ன்ற நிலையில் சிங்கள தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையே இன்று சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது. சிங்களம் எம் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை முன்வைக்காது என்பது நம்க்குத்தெரியாத ஒன்றல்ல. ஆனால் அது சர்வதேசத்திற்கு தெரியும் காலம் வரும் வரையில் நாம் உறுதி தளராத மனவுறுதியுடன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க அதற்கு முன்னதாக நாம் சிங்களத்தின் சிறைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் எம் மக்களைப்பற்றியும் எம் போராளிகள் பற்றியும் உடனடியாக கரிசனை செய்யவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். போதிய உணவு இன்றியும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி மக்களும் போராளிகளும் சிங்களத்தின் சிறையில் அகப்பட்டு கிடக்கின்றார்கள். விடுதலைத்தாகத்தோடு களமாடிய நம் உறவுகள் இன்று சிங்களப்படையினரின் கூட்டிற்குள் அகப்பட்டு தினம் தோறும் அவலப்படுகின்றார்கள். காயப்பட்டிருந்த அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றி சரணடைந்த போராளிகள் பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் நாம் வெட்டிப்பேச்சு பேசி காலத்தை கடத்துவதனைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்படுகளை இன்னும் காலம் தாழ்த்தாது செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப்பணிகளில் தளத்திலுள்ள எங்களைவிட புலத்திலுள்ள உங்களால் செய்யப்படவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. இவ்வேளையில் நாம் நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையும் விமர்சனங்களையும் புறந்தள்ளி ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அப்போதுதான் சாவின் விளிம்பிலுள்ள நம் உறவுகளை காப்பாற்றமுடியும். இதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப்பெறக்கூடிய வழிகளை ஆராய்ந்து செயற்படவேண்டும்.

இங்கு படையினருடன் போராடி அவர்களுக்கு உயிர் இழப்புக்களை ஏற்படுத்துவது பெரியகாரியமல்ல. அதனால் எதுவுமே இப்போதைக்கு நடக்காது. கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?

இன்றுள்ள நிலையில் முதலில் பாதிக்கப்பட்டுள்ள நாம் உறவுகளை பாதுகாக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் பத்மநாதன் அண்ணர் சில முக்கியமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். தற்போதுள்ள நிலையில் அவரின் கரங்களைப் பலப்படுத்துவோம். வெளியுறவுத்துறைக்கு பொறுப்பாக தேசியத்தலைவர் அவர்கள் பத்மநாதன் அண்ணர் அவர்களை நியமித்து அவர் செயற்பட்டு வந்தநிலையில் தொடர்ந்தும் அவரது பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பது தவறல்ல. எனவே அவரின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு பின்னர் முதலில் என்ன செய்யவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம். அதனால் நாம் தலைவரின் பாதையிலிருந்து விலகிவிட்டதாக நீங்கள் நினைக்காதீர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணிக்க என்றும் நாம் தயாராகவே உள்ளோம். எந்த மக்களுக்காக நாம் களமாடினோமோ அந்த மக்கள் இன்று நம்மீது சிலவிடயங்களில் வெறுப்புணர்வுகளையும் காட்ட முற்படுகின்றார்கள். காரணமறிந்து செயற்பட நாம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது நாங்களும் எங்கள் முடிவுகளை மாற்றி ஒன்று சேர்ந்து புலத்திலுள்ள உங்களுக்கு களமாடி பலம் சேர்ப்போம் என்பதனை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன். அத்தோடு களத்திலுள்ள மக்களின் தியாகங்களினால்த்தான் புலத்திலுள்ள மக்களை ஒன்றுசேர்க்கமுடியும் எழுச்சி கொள்ளச் செய்யமுடியுமென்றால் அதற்கு எம்மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.

என்றும் அன்புடன்…
தயா மோகன்
விடுதலைப்புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

21 Comments

  • Natives
    Natives

    பிச்சை வேண்டம் நாயை பிடி

    Reply
  • suganthy
    suganthy

    கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?
    so why follow the ” leader again?

    Reply
  • மதி
    மதி

    “இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம் சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து…”

    அது சதி அல்ல மதி வென்றது …உங்களிடம் இருக்கா மதி.. ?

    மதி உள்ள ஒருவரை தலைவர் ஆக்குங்கள்.

    We need a leader like JR.

    Reply
  • chandran.raja
    chandran.raja

    கடைசிநேரத்திலாவது உங்கள் தலைவருக்கு மண்டை திறந்து ஆயுதத்தை மெளனிக்கப் பண்ணுகிறோம் என்றார். முப்பது வருடகாலமாக “இழவுவீடு” கொண்டாடியது போதுமானதாக உங்களுக்கு தெரியவில்லை? ஈழத்தமிழ்மக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள். அவர்களை அவர்கள் பாட்டுக்கே விட்டுவிடுங்கள் நன்றியுடையவர்களாக இருப்பார்கள். மக்களின் அடிப்படை வாழ்கையை கெடுப்பது என்றுமே அரசியல் ஆகாது. உங்கள் தலைவர் உருப்படியாக செய்த காரியம் ஒன்று உண்டென்றால் அது உலகம் முழுக்க பல கோடீஸ்வரர்களை உருவாக்கி விட்டிருக்கிறார். அவர்கள் தொடர்ந்தும் கோடீஸ்வரராக இருக்கவேண்டுமென்றால் தொடர்ந்தும் ஈழத்தில் “இழவுவீடு” களை நடத்துவது அவசியம். இதை தாங்கள் புத்திசாலித்தனமாக புரிந்து கொண்டு புலம்பெயர் கோடீஸ்வரர்களுடன் தொடர்புகொண்டு சொந்தமண்ணிலேயே அகதிகளாகப்பட்ட எமது ஏதிலிகளும் பயனடைய கூடிய பொருளாதார உதவிகளை செய்யுங்கள் இதுவே உயிர்ருடன் இருக்கும்போது நன்மைசெய்ததிற்கு அடையாளமாகும். மற்றும்படி அரசியல் வேலைகளுக்கு நிறையவே மனிதத்தன்மை கொண்டவர்கள் இருக்கிறார்கள். அதுபற்றிய கவலைகளை விட்டொழியுங்கள் அதுவே தமிழ்மக்களுக்கு நன்மைபயிற்கும்.

    Reply
  • thurai
    thurai

    தலைமை காட்டிய வழிகள்.
    ஒருவனே தலவன் அவனே எம் கடவுள்.- புலிகளே ஒரு இயக்கம் அவர்களே எமது தனிப்பிரதிநிதிகள்.- உலகில் எங்காவ்து புலிகளை விட வேறுயாராவ்து ஈழத்தமிழரைப்பற்றிய கருத்துக்களைப் பேசப்படாது.- புலிகளின் பெயரால் பணம் கேட்பவ்ர்களிற்கு மறுக்காமலும் ஏன என்ற கேள்விகள் கேட்காமலும் கொடுக்கப்பட வேண்டும்.- வீட்டையும் வேலைகளையும், பாடசாலைகளையும் விட்டு விட்டு வீதிக்கு வாருங்கள் என்றால் வரவேண்டும்.- நடுத்தெருவிலும், ரயில் ஓடும் தண்ட வாளங்களிலும் படுங்கள் என்றால் படுக்கவேண்டும், இதற்காக வரும் குற்ரப்ணங்களையும் நீங்களே கட்டவேண்டும்.

    புலிகள் கூறுவதும் செய்வதும் எதுவானாலும் எல்லாம் ஈழத்தமிழர்களிற்காகவே என்பதை என்றும் மனதில் பதித்துக் கொள்ளவேண்டும்.

    புலிகளைப் பற்ரி யராவது மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தால் அவர்கள் உங்கள் குடும்பத்தில் யாராக இருந்தாலும் துரோகிகள் என பட்டம் சூட்டவேண்டும்.

    இவ்வளவு தமிழரிற்கான உருமைகளை சிங்களவர்களிடமிருந்து ஒருபோதும் த்மிழர்கள் பெற்ரதுமில்லை இனிமேல் பெறப்போவதுமில்லை.

    துரை

    Reply
  • சாமி
    சாமி

    அட….ஆளை வுடுப்பா. இருக்கிறவங்களையும் போட்டுத் தள்ளுறதுக்கு கத்தி தீட்டுறிறீங்கள்? …புத்தியை தீட்டுங்கள்? இல்லே… அந்த மக்களை நிம்மதியா இருக்குவிடுங்கள். கோடி புண்யம் சாமி

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    தயாமோகன் என்பவர் இருக்கின்றாரோ அல்லது இதுவும் கற்பனையோ தெரியாது. ஆனால் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கும் படத்தில் சற்று ஆறுதலுக்காக இடைக்கிடை நகைச்சுவைக் காட்சிகளை சேர்ப்பது போலுள்ளது இப்படியான அறிக்கைகள். அறிக்கைகள் விடும் ஒவ்வொருவரும் தம்மை ஏதோ வடிவேலுக் கணக்காக சிந்திக்கினமோ என்னவோ?? பேசாமல் எனி இப்படியான அறிக்கைகளையும் மெளனித்து விடுங்கள். ஏனெனில் உங்கள் அறிக்கைகளை எனி யாரும் கணக்கில் எடுக்கப் போவதில்லை.

    Reply
  • மாயா
    மாயா

    பார்த்திபன், இது போன்ற கொசுறு அறிக்கைகள் புதிதாக அசைலம் அடித்தவர்களுக்கு விட்டமின் .

    Reply
  • palli.
    palli.

    தம்பி தயா மோகன் நீங்களே உங்கள் வாயால் சனியை வில்லங்கத்துக்கு வீட்டுக்கு விருந்துக்கு கூப்பிட்ட மாதிரி தலமையின் இழப்பை சொல்லி புலம் பெயர் புலிகளின் கனவில் வில்லங்கத்தை ஏற்படுத்தி விட்டு உதவுங்க என்றால் எப்படி?? அதுசரி தாங்கள் எந்த அணி?
    உங்கள் தலைவர் யார்(உயிருடன்)??
    உங்களது அமைப்பு வடகிழக்கு இனைத்ததா??
    அதை உங்கள் பளய தளபதி(கருனா) ஏற்பாரா??
    அவரை மீறி ஒரு அமைப்பை உருவக்க????
    இந்த புதிய அத்தியாயம் பற்றி அங்கு அவதிபடும் மக்களுக்கு தெரியுமா??
    மீண்டும் அவர்களை பகடை காயாகதான்???
    ஆயுதம் தாங்குவது சாத்தியபடுமா? அதுதகுமா?
    ஏன் புலம் பெயர் தமிழரை வேண்டி இந்த வேண்டுகோளை வைக்கிறீர்கள்??
    தலையின் பாதையில் செல்வோம் என ஒரு வேதவாக்கு அதின் அர்த்தம் என்ன??
    கொலை கொள்ளை அடங்காபிடாரிதனம் தானே??
    மீண்டும் மரத்தில் தாவநினைக்கும் தாங்கள் உங்கள் சின்ன(புலி)பிள்ளைதனத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் உறவின்றீ, உறுப்பின்றி, வாழவழி இன்றி இருக்க இடம் இன்றி அவதிப்படுவதை பற்றி சிந்தித்தீர்களா??
    அவர்கள் எதிர் காலத்துக்கு என்ன தீர்வு(வாழ) வைத்துள்ளீர்கள்??
    அதை அவர்களுக்கு ஏதாவது ஒரு வழியில் அறிவித்தீர்களா??
    முரன்பாடு என ஒரு வாக்கியம் சொல்லியுள்ளீர்கள் அது யாருடன்..??
    சரித்திரம் படைத்ததாக வேறு கதை விட்டுள்ளீர்கள் சரித்திரமா அல்லது தரித்திரமா என சரி பார்த்தீர்களா??
    மிகுதியை நண்பர்களுக்கு விட்டு கேள்வியை முடிக்கிறேன்; இத்தனை கேள்வியையும் மல்லாக்கபடுத்து நிலாவை பார்த்து (அங்குதானே உங்க தலைவர் இருப்பதாக சொன்னீர்கள்;) சிந்தியுங்கள் ஏதாவது ஒரு கேள்விக்காவது உங்க சேமிப்பில் இருப்பு (பதில்) இருக்கா என பார்த்துவிட்டு ஓடுவதா அல்லது ஆடுவதா என முடிசூடுங்கள். தயா மோகன் நீங்கள் வாழவோ அல்லது பிழைக்கவோ கண்டிப்பாக அந்த அப்பாவி தமிழர் வேண்டும்; ஆனால் சத்தியமாக சொல்லுகிறேன் அவர்கள் வாழவோ அல்லது பிழைக்கவோ நீங்கள்(புலி) தேவையில்லை என்பதை விட நீங்கள்(அமைப்புகள்) இருக்கும் வரை முடியாது என்பது பல்லியின் கருத்து;
    தொடரும் பல்லி…..

    Reply
  • palli.
    palli.

    //கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம்//
    உன்மைதான் ஆனால் ஒரு பொருளை ஜம்பது ரூபாவுக்கு வாங்கி அதை நாப்பது ரூபாவுக்கு விற்றால் ஒரு கடைகாரனுக்கு என்ன லாபம் வருமோ அதே லாபம்தான் உங்கழுக்கு மட்டுமல்ல தமிழருக்கும், போட்டமுதல் ஜம்பது வீதம் (மாவீரர்+ தமிழர்; எடுத்த லாபம் நாப்பது வீதம்)ராணுவம்+ அரசியல் தலைவர்கள்; இதில் எந்த கணக்கிலும் இல்லாமல் போனது சக போராளிகள் கணக்கு என்பது வேதனை உங்களுக்கல்ல எங்களுக்கு.

    Reply
  • BC
    BC

    பல்லி சொன்னது சரி.புலி வாழ்வதற்க்கும் பிழைப்பதற்க்கும் அப்பாவி தமிழர்கள் தேவை.மக்களின் அழிவில் தான் புலி வாழமுடியும்.

    Reply
  • rohan
    rohan

    சும்மா மென்ற வாய்களுக்கு அவல் கிடைத்திருக்கிறது!

    Reply
  • Kusumbo
    Kusumbo

    இக்கட்டுரையில் மீண்டும் மீண்டும் புலிகளின் முழுவாடை அடிக்கிறது. படையினருக்க அழிவை ஏற்படுத்தினோம் படையினருக்கு அழிவை ஏற்படுத்தினோம் வரிக்கு வரி கூறுகிறார். படையினருக்கு அழிவு ஏற்படுவதால் மக்கள் விடுதலை அடைந்து விடுவார்களா? அடகடவுளே! இன்னும் இப்புலிப்புண்ணாக்குகள் திருந்தவில்லையென்றால். இவர்களை வேரோடு அழிப்பதைத்தவிர வேறு வழியில்லை

    Reply
  • நண்பன்
    நண்பன்

    இதையெல்லாம் படிக்கும் போது நானும் ஒரு அமைப்பு தொடங்கலாம் என்று எண்ணம் உருவாகிவிட்டது. ஜனாதிபதிக்கு விசுவாசமாகவும் , தமிழ் மக்களுக்கு விமோசனமாகவும் , உதிர்ந்தவர்களுக்கு அடைக்கலமாகவும் நிச்சயம் இருக்கும். வெங்காயம் உரிக்கக் கூட கத்தி எடுக்கக் கூடாது. இது ஒரு பக்க காயத்தையும் மறு பக்கம் கண்ணீரையும் வர வழைக்கும். யாராவது இணைய விரும்பினால் கருத்து தெரிவிக்கவும். புலியில்லாத அம்பாறையில் இருந்து தயா மோகன் எழுதும் போது ஐநாவுள்ள ஜெனீவாவிலிருந்து என்னால் அறை கூவல் விடுக்க முடியாதா?

    “ஐநாவே வழி சொல் அல்லது வழி விடு. எமது தலைவிதி எமது கைகளிலேயே.” இதுதான் இப்போதைய கோஸம். வாருங்கள் விவேகமானவர்களே?

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    நண்பன்
    நல்லவிடயம் தான் அமைப்புத் தொடங்குவது. ஆனால் கோஸத்தை “அன்பே எமது வழி, அகிம்சையே எமது கொள்கை” என்று மாற்றி விடுங்கள்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    //பார்த்திபன் on June 15, 2009 4:12 pm நண்பன்
    நல்லவிடயம் தான் அமைப்புத் தொடங்குவது. ஆனால் கோஸத்தை “அன்பே எமது வழி, அகிம்சையே எமது கொள்கை” என்று மாற்றி விடுங்கள்.//

    உங்கள் கருத்தை வரவேற்கிறேன் பார்த்தீபன். ஆனால் ஒரு பெரிய பிரச்சனை ? எங்களுடையவர்கள் ” யாராவது சாக வேணும் அல்லது சாகடிக்கப்பட வேணும்” எனும் நிலையிலான மனநோயாளிகளாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த அகிம்சை ஏற இன்னும் 20 வருடம் ஆகும்.

    அதுவரை கூட்டத்தைக் கூட்டி ஐநா முன்னால் கத்தலாம். அது பலரது மன அழுத்தங்களைக் குறைக்கும். ஜப்பானில் கோபமடைவோர் போய்க் கத்துவதெற்கு என்றே சில இடங்கள் உண்டு. அங்கு போய் கத்துவார்கள். தனிமையில் சண்டை பிடிப்பார்கள். இது ஒரு தெரபி. அதுபோல நம் மக்கள் புலிகளின் தோல்வி அழுத்தத்தை கொடுத்துள்ளது. தினமும் நெட்டில் எங்காவது வெடிக்குதா என பார்க்கிறார்கள். ஊகும்…… இவர்களுக்கு மறு வாழ்வு வழங்க எமது அமைப்பு.

    புலத்தில் நடந்த வீதி , ஐநா முற்றத்து போராட்டம் எல்லாம் …… பல ஆயிரம் பேரை பேக்காட்டினதுதான் மிச்சம்.

    “ஐநாவே வழி சொல் அல்லது வழி விடு. எமது தலைவிதி எமது கைகளிலேயே.” நல்லா உற்று பாருங்க. ஐநாவுக்கு பிரச்சனையேயில்லை. எமது தலைவிதி எமது கைகளிலேயேதான்.

    Reply
  • palli.
    palli.

    நண்பா பல்லிக்கும் ஒரு பதவி உங்கள் அமைப்பில் தாங்கோ; அது நிதி துறையானாலும் பல்லி ஏற்றுகொள்ளும்; அது கடினமாயின் உளவுதுறையை ஒதுக்குங்க, எல்லாமே சிரிப்பெனில்என்னிடம் ஊடகதுறையைதந்து விடுங்கள்; உங்கள் பலன் பார்த்து பக்கத்து வீட்டு பரமசிவத்திடம் சாதகத்தை கொடுத்து(கெடுத்து) அனுப்புகிறேன். எதிர்கால ஏதோ ஒரு கடுப்பாளர் பல்லி;

    Reply
  • palli.
    palli.

    இந்த கோஸம் என்னும் போது பல்லிக்கு ஒருநினைவு வருகிறது பல வருடங்களுக்கு முன்பு கோஸத்துக்கு நாயகன் வண்ணைதான், அவரிடம் ஒருமுறை கேட்டேன் ஏன் அண்ணா பனைமரத்தில் வவ்வாலா? தமிழருக்கே சவாலா என எல்லா மேடையிலும் ஏசுகிறீர்கள் என; அதுக்கு அவர் சொன்னார் மொக்கா (என்னைதான்) அது தெரிந்தால் ஏன்றா நான் அரசியலுக்கு வருகிறேன்: ஏதாவது படித்து நல்லாய் வந்து இருக்க மாட்டேனா என; அதை மெய்யாக்கும் வண்ணம் இந்த தறுதலைகள் விடுதலை போரை தொடங்கிய கையுடன் வண்ணை எஸ்கேப் ஜேர்மனுக்கு; ஆக கோஸம் என்பது எப்படி உருவாகுவது என சிந்தியுங்கள்;

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பல்லி , உண்மையிலேயே சுவிஸில் அனைத்து இன மக்களுடன் கூடிய அரசியல் அபிலாசைகளற்ற ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது. எதிர்கால சந்ததியினராவது மகிழ்வாக ஒற்றுமையாக வாழ்வதே இவ் அமைப்பின் குறிக்கோளாகும்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    //சுவிஸில் அனைத்து இன மக்களுடன் கூடிய அரசியல் அபிலாசைகளற்ற ஒரு அமைப்பு ஆரம்பிக்கப்பட உள்ளது.- நண்பன் //

    உண்மையில் தேவையான விடயம். இதற்கு என்னால் முடிந்த ஒத்துழைப்பை வழங்க நானும் தயார்.

    Reply
  • நண்பன்
    நண்பன்

    பார்த்தீபன்
    vanithamil@ymail.com
    அஞ்சலிடுங்கள் பேசலாம்.

    Reply