இங்கி லாந்தில் நடக்கும் டுவென்டி 20 உலக கோப்பை கிரிக்கெட் சூப்பர் 8 போட்டியின் 2வது ஆட்டத்தில் ’இ’ பிரிவில் நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து மேற்கிந்திய அணிகள் மோதியன.
டாஸ் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 6விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்கள் எடுத்தது. பின்னர் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 9 ஓவராக குறைக்கப்பட்டு 80 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றி இலக்கு 80 ஓட்டங்கள் என்ற நிலையில் களமிறங்கிய மேற்கிந்திய அணி 8.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 82 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. சர்வான் சந்திரபால் ஜோடி அற்புதமாக ரன் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். சர்வானுக்கு (19*) ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.