வவுனியா நிவாரணக் கிராமங்களில் தாய் தந்தை இருவரையும் இழந்த சுமார் 350 சிறுவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளதாகவும் அவர்களை எதிர்வரும் இரு வாரங்களுக்குள் நீதிமன்ற உத்தரவுடன் பொறுப்பேற்க உள்ளதாக சிறுவர் நன்னடத்தை மற்றும் பாதுகாப்புத் திணைக்கள ஆணையாளர் சரத் அபேகுணவர்தன தெரிவித்தார்.
இடம்பெயர்ந்த மக்களிடையே அண்மையில் கணிப்பீடொன்று மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அங்கு 52 ஆயிரம் சிறுவர்கள் உள்ளதாகவும் அதில் 1034 பேர் அநாதைகள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களிடையே சுமார் 350 சிறுவர்கள் தாய் தந்தை இருவரையும் இழந்தவர்களெனவும் ஆணையாளர் கூறினார்.
இவர்களில் சிலர் தமது உறவினர்களுடன் இருப்பதாகவும் அவர்களை சட்டபூர்வமாக பாதுகாவலர்களிடம் கையளிக்க உள்ளதாகவும் கூறினார். ஏனைய சிறுவர்களை நீதிமன்ற உத்தரவுடன் பொறுப்பேற்று சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் கீழுள்ள சிறுவர் நிலையங்களினூடாக பராமரிக்க உள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டார். இவர்களுக்கு கல்வி வசதி, மனநல அபிவிருத்தி என்பன வழங்கப்பட உள்ளன. 18 வயதுவரை இவர்கள் சிறுவர் நிலையங்களினூடாக பராமரிக்கப்பட்ட பின் சுதந்திரமாக செல்ல அனுமதிக்கப்படுவர்.
palli.
தேசமும் இந்த குழந்தைகள் விடயத்தில் கவனம் எடுக்கலாமே; இந்த குழந்தகைள் பற்றிய விபரங்கள்; இவர்களுக்கு தனியாக எப்படி உதவமுடியும்; இவர்களை நாம் தத்து எடுக்க முடியுமா? இப்படி அவர்கள் பற்றிய விடயத்தை விவாதித்தால் நல்லமனம் உள்ள சிலராவது விளம்பரம் இன்றி உதவலாம்;