உலக டென்னிஸ் வீரர் வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கடந்த வாரம் 98 வது இடத்தில் இருந்த இந்திய வீராங்கனை சானியா மிர்சா 20 இடங்கள் முன்னேறி 78 வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். பர்மிங்காமில் நடந்த டென்னிஸ் போட்டியில் அரை இறுதிக்கு தகுதி பெற்றதன் மூலம் சானியா தர வரிசையில் இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார். ரஷிய வீராங்கனை தினரா சபீனா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார்.
ஆண்கள் ஒற்றையர் தர வரிசையில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். இந்திய வீரர் சோம்தேவ் வர்மன் 132 வது இடத்திலும், பிரகாஷ் அமிர்தராஜ் 154 வது இடத்திலும் உள்ளனர். இரட்டையர் பிரிவில் சமீபத்தில் பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்ற லியாண்டர் பெயஸ் 5 வது இடத்தில் உள்ளார்.