பிரபாகரனின் இறப்பின் பின் ஓர் உயிர்ப்பு : குலன்

Pirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_TimePirabakaran_in_Time

வைகாசி 17ல் பிரபாகரன் இறந்து பின் பிறந்து வைகாசி 19ல் மீண்டும் இறந்தார் என்பது அரசசெய்தி. பிரபாகரன் இறக்கவில்லை என்பது புலம்பெயர் புலிகளின் செய்தி. இன்றைய பிரச்சினை பிரபாகரன் பிறந்ததோ, இறந்ததோ அல்ல. பிரபாகரனால் என்ன நடந்தது என்பதுதான் பிரச்சனை. சரி அவர் உயிருடன் இருந்தால் வரும் போது வரட்டும். பிரபாகரனின் புலிப்பிறப்பும் நடப்பும் இறப்பும் எமக்கும் எம்சமூகத்திற்கும் சிலபாடங்களைச் சொல்லிச் சென்றிருக்கிறது என்பதை யாரும் மறுக்க இயலாது.

என்றும் இறந்தகாலமே எதிர்காலத்தின் திறவுகோல் என்பதால் இறந்தகாலத்தை திருப்பிப் பார்க்க வேண்டிய அவசியம் எமக்கு உண்டு. ஆனால் பழய பல்லவி பாடிக்கொண்டு இறந்த காலத்திலேயே நின்றுவிடக்கூடாது. எதிர்காலத்தில் இறந்தகாலத்தின் பிழைகளைத் திருத்துவதும், நல்ல அனுபவங்களை எதிர்காலத்துக்கு எடுத்துச்செல்வதுமே மனிதனுடைய வாழ்க்கை மட்டுமல்ல, ஓரினத்தின் வாழ்வையும் மேம்படுத்தும். என்சிற்றறிவுக்கு எட்டியதை எம்மக்களின் போராட்டமும் எதிர்காலமும் பற்றி அக்கறை கொண்டவன் என்ற வகையில் ஒரு கருத்துக்களம் ஒன்றை அமைக்கும் நோக்கிலேயே இக்கட்டுரை வரையப்படுகிறது. புலம்பெயர்ந்த இளையவர்களுக்கு எமது போராட்டவரலாறு முழுமையாகத் தெரியாத காரணத்தினால் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என பிழையான வழியில் போய்விடக் கூடாது என்ற நோக்கத்திலுமே மிக சுருக்கமாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.

புலிகளின் ஆரம்பம் இன்றைய விளைவும் – முற்குறிப்பு
தமிழ்மக்கள் மேல் ஏற்படுத்தப்பட்ட அரச பயங்கரவாதத்தின் விளைவாக பல இளைஞர்கள் தனிநபர் தீவீரவாதிகளானார்கள். தனித்து நின்றி போராடுவதனால் பயனில்லை என உணர்ந்தவர்கள் குழுக்களானார்கள். காட்டிக்கொடுப்போர் என்று துரோகிப்பட்டம் கட்டி பலதமிழர்களே கொல்லப்பட்டனர். இதில் முக்கியமாக கதைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரிகளான இணுவிலைச் சேர்ந்த இரு சண்முகநாதன்கள், பஸ்தியாம்பிள்ளை முக்கிய இடத்தைப் பெறுகின்றனர். பொலிஸ் இலாகாவில் வேலைசெய்பவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு வேலை செய்துதானே ஆகவேண்டும். அது அவர்கள் தொழில்தர்மம். அவர்கள் மாறுவதற்கோ சிந்திப்பதற்கோ சந்தர்ப்பம் கொடுக்கப்படாது கொல்லப்பட்டது எவ்வகையில் நியாயானமது? வாங்கும் சம்பளத்துக்கு மேலாக தமிழ் இளைஞர்களைச் சித்திரவதைக்கு உள்ளாக்கிய பஸ்தியாம்பிள்ளை தண்டிக்கப்பட வேண்டியவர்தான். துரோகிகள் என்று கொன்று குவிக்கப்பட்டவர்களுக்கு போதிய சந்தர்ப்பங்கள் கொடுக்கப்பட்டனவா என்பது கேள்விதான்.

பின் துரோகிகள் என்பது இனத்துக்குரிய பதமாய் இன்றி தனிப்பட்ட முறையில் தமக்குப் பிடிக்காதவர்கள் எல்லோரும் துரோகிகள் ஆக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். அண்ணனுக்குத் தம்பியும் தம்பிக்கு அண்ணனுமாய் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளே ஒருவரை ஒருவர் கொன்ற சரித்திரம் எம்மிடையே பலவுண்டு என்பது வேதனையே. தமிழின அழிப்பு என்பது எதிரிகளால் மட்டுமல்ல தமிழர்களாலேயும் நடத்தப்படத் தொடங்கியதன் விளைவைத்தான் நாமின்று அனுபவிக்கிறோம். இப்படியான கொலைகளுக்கெதிராக ஒரு குரல்கூட வெளிவரவில்லை. அப்படி எழுந்திருந்தால் கொலை செய்யும் இரும்புத் துப்பாக்கி கூட ஒருகணம் சிந்தித்திருக்கும். தமிழ் படுகொலைகள் தமிழ்மக்களால் ஆதரிக்கப்பட்டனவா? ஆதரிக்காவிட்டால் பிழையெனக்கண்ட போது ஏன் தட்டிக்கேட்கவில்லை? சுடப்பட்ட அத்தனைபேரும் துரோகிகளா? யாரை யாரும் கொல்லலாம் துரோகி என்றும் தூக்கலாம். தமக்கு மட்டும் துரோகி என்ற பெயர் கட்டப்பட்டு விடுமே என்ற பயமா? இதை எல்லா இயக்கங்களும் செய்தன. இதில் முக்கியமானவர்கள் புலிகள் இன்று எம்மினத்துக்கே துரோகியாகிப்போய் நிற்கிறார்கள். எம்மியக்கங்கள் எம்மினத்தில்தானே சுட்டுப்பழகியது.

புலிகள் இன்று தமிழினத்தின் துரோகிகளா? தியாகிகளா?
இக்கேள்விகளுக்கு, கேள்விக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? யார் எதை எப்படி செய்தார்கள் என்பது முக்கியமில்லை. முடிவு என்ன? எம்மினத்தின் இன்றைநிலை என்ன என்பதே முக்கியமானது. எம்மினத்தில் 60 000 பேருக்கு மேல் கொன்றும், கொல்வதற்கு வழிவகுத்தும் நின்றவர்கள் புலிகளும் சில இயக்கங்களும். இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

சிங்களவர்கள் தமிழரைக் கலவரத்தில் கொன்றால் இது இனப்படுகொலை. மக்கள் கொடிபிடித்தார்கள் கோசம் போட்டார்கள். ஆனால் ஒரு இயக்கத்தை மற்றைய இயக்கம் கண்மூடித் தனமாக இராணுவத்தை விட மோசமாக கொன்றபோது ஏன் வாழாதிருந்தீர்? இது எப்படித் தியாகமானது?

சுமார் 500 000க்கு மேல் தமிழர்களை வெளிநாடுகளில் அகதியாக்கி, தம்சொந்த மண்ணை விட்டு அவனியெங்கும் அலையவிட்டு, அவர்களிடமே ஏமாற்றிப் பணம்பிடுங்கி வாழ்ந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

மக்களை ஒருபோராடும் சக்தியாகக் கருதாது அவர்களை பதுங்கு குழிகளாகவும், மறைவிடங்களாக மட்டும் பயன்படுத்தி, போராடும் வலுவை இழக்கச்செய்து, பங்காளிகளாக்காது பார்வையாளராக வைத்திருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஈரோசைத்தவிர அனைத்து சிறு இயக்கங்களில் இருந்து பெரிய இயக்கங்களாக வளர்ந்த புளொட், ரெலோ, ஈபிஆர்எல்எவ் வரை கொன்று குவித்தது யார்? அவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

ஒவ்வொரு இயக்கமும் தம்முள் ஒருவரை ஒருவர் கொன்று தீர்த்தனவே அவர்கள் தியாகிகளா? துரோகிகளா? யாருக்கு விரல்விட்டுக் காட்டத் துணிவிருக்கிறது.

ஆயுதம் ஏந்தியவனால் தான் பிரச்சனை என்றால் ஆயுதமே தொட்டுப்பார்க்காத அரசியலில் மட்டும் ஈடுபட்ட அரசியல்வாதியில் இருந்து ஒன்றுமே அறியாத அப்பாவித்தமிழர்கள் வரை கொன்று போட்டவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

எம்மினத்தவனைக் கொல்லத் துப்பாக்கி தூக்கும் போது இவன் என்னினத்தவன் என்று ஒரு செக்கன் கூட சிந்திக்காது நிந்தித்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

அடித்துவிட்டு ஒளிப்பதற்கே மக்களைப் பயன்படுத்தியது மட்டுமல்ல, அவர்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் அருகில் நின்றும் தம்மை மட்டும் பாதுகாத்தவர்களை எப்படித் தியாகிகள் என்பது?

மண்மீட்பு மண்மீட்பு என்றவர்கள் மக்களை, மக்கள் கருத்துக்களை என்றும் காது கொடுத்துக் கேட்டதில்லை. மக்களை இராணுவம் கொன்று குவித்தபோதும் ஒடி ஒளித்தார்கள். மக்களை தம்பாதுகாப்புக்காக கேடயமாய் பாவித்தார்கள்? இவர்கள் மக்களுக்காக என்ன செய்தார்கள்? மண் மண் என்றார்களே இன்று மண் எங்கே? ஒரு மண்ணாங்கட்டியைக் கூட மீட்க முடிந்ததா? மண் என்பது இருப்புமட்டுமே அன்றி மக்களாகாது. மக்களில்லாத மண்ணை வைத்து என்ன செய்யுமுடியும்? மண்ணின் பெயரைச் சொல்லிச் சொல்லி மக்களை அழிக்கக் காரணமாக இருந்தவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். இறுதியாகப் புலிகளால் எமக்கு விளைந்தது என்ன? மக்கள் போராட்டம் என்றாலே பயப்படும் மனநிலைக்கும், தன்னம்பிக்கைச் சிதைவுக்கும், அடிமைத்தனத்தை ஆதரிக்கும் நிலைக்கும், கல்வி செல்வச்சீரழிப்புக்கும் எம்மக்களை உள்ளாக்கி, இறுதியில் விடுதலை என்ற சொல்லை எம் இருதலைமுறைகள் உச்சரிக்கவே பயப்படும் அளவுக்கு செய்துவிட்டு மறைந்த புலிகள் துரோகிகளா? தியாகிகளா?

மற்றவர்களை, தாம் விரும்பாதவர்களை, மற்ற இயக்கங்களை எல்லாம் துரோகிகள் என்று கூறிக்கூறியே தமிழ்மக்களின் உண்மைத் துரோகிகளாய் போனவர்கள் யார்?

இலங்கையரசின் காலத்தில் பேச்சு சுதந்திரமும் எழுத்துச் சுதந்திரமும் இருந்தது. ஆனால் புலிகள் ஆட்சியில் இச்சுதந்திரமும் பறிக்கப்பட்டது. எதிரியைக் கூட நல்லவனாக்கியது புலிகளே. இவர்கள் துரோகிகளா? தியாகிகளா?

என்கண்ணில் மக்கள் மட்டுமே பார்வையாளராக இருந்து தற்கொலை செய்து கொண்ட தியாகிகள்.

உயிருடன் மனிதனை ரயர்போட்டுக் கொழுத்த எதிரிக்குப் பழக்கிவிட்டது யார்? வீட்டில் வைத்துப்போடுதல், கவர் பண்ணும்போது போடுதல் போன்றவற்றில் ஈடுபட்டது யார்?

உலகத்தில் எத்தனையோ போராட்டங்கள் நடந்தன, வென்றன. எந்த இயக்கமும் தற்கொலைத் தாலிகட்டிச் சென்றதில்லை. ஆனால் மக்களின் போரட்ட உந்துசக்தியாக இருக்கும் இளைஞர்களை தற்கொலைக்கு தாலிகட்டி வழியனுப்பும் ஒரு கோழைத்தனமான விடுதலை அமைப்பு மன்னிக்கவும் மாவியா அமைப்பு புலிகளே. ஒவ்வொரு போராளியின் மனதிலும் எதிரியைக் கொல்லுவேன் வெல்லுவேன் எனும் மனத்திடம் தளர்ந்து அடிப்பேனா அன்றி சயனைட்டைக் கடிப்பேனா எனும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். புலிகள் தம்மைமட்டும் பாதுகாத்துக் கொள்வதற்காக தற்கொலைக் கலாச்சாரத்தை வளர்த்து ஒரு இனத்தையே தற்கொலை செய்யத் தூண்டியிருக்கிறார்கள்

இனியாவது சாப்பிடமட்டுமே வாய்திறப்பதை விட்டு விட்டு ஈழத்தமிழ் மக்களே! உண்மைக்காகவும் உரிமைக்காகவும் வாய் திறப்பீர்களா? எப்போ உங்கள் மௌனம் கலையும். சரியான மக்கள் நலன்விரும்பும் அமைப்புகளை உண்மை விடுதலை விரும்பிகளை இனங்காணுவீர்களா? உங்களைக் காக்கிறோம் என்று அரசில் இருந்து புலிகள் வரை இன்னும் எத்தனை எத்தனையோ அமைப்புகள் வரப்போகின்றன. உங்கள் அனுவங்களை வைத்து அடையாளம் காண்பீர்களா? அல்லது கெடுகிறேன் பிடிபந்தயம் என்று முன்புபோல் மீண்டும் மீண்டும் வதைபடப் போகிறீர்களா என்பதையும் நீங்களே தீர்மானியுங்கள்.

புலி இயக்கம் பிரபாகரனால் மட்டுமா ஆரப்பிக்கப்பட்டது?
தனிநபராக பிரபாகரன் பேருந்து ஒன்றை தீயிட்டுவிட்டு மாணவர்பேரவையைச் சேர்ந்த சத்தியசீலன் இடம் உரும்பிராய்க்கு வந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார் என்றும் யூரியூபில் கூறியிருந்தார். அக்காலகட்டங்களில் சிவகுமாரனில் இருந்து தனிநபர் தீவிரவாதிகளே உருவாகியிருந்தார்கள். இருப்பினும் சிலஅமைப்புக்கள் தம்மாலியன்ற போராட்டங்களைச் செய்து கொண்டிருந்தனர். அவற்றில் மாணவர்பேரவை, இளைஞர் பேரவை போன்றவற்றைக் குறிப்பிடலாம். ரெலோ ஈரோஸ், ஈபிஆர்எல்எவ் என்பனவும் மிகப்பழமையான இயக்கங்கள். இவைபற்றிய வரலாறு எனக்குத் தெரியாது என்பதால் அதை விட்டுவிடுகிறேன்.

நீர்வேலி வங்கிக் கொள்ளையிலேதான் கேபி விமலராசா எனும் ரியூசன் வாத்தியாரின் உந்துறுளியை பாவித்தார் என்ற காரணத்தால் விமலராசா சிறைபோனார். அவர் மாதகலிலுள்ள கடம்பவாதத்தை முகவரியாகக் கொண்டவர். இதனால் இவர் நோர்வேக்குப் போனபோது புலிகளின் பொறுப்பாளராக ஆக்கப்பட்டார். அப்போதும் இவர்தொடர்பில் கேபி வந்துபோவார்.

மாணவர்பேரவையைச் சேர்ந்தவர்கள், இளைஞர்பேரவை இரண்டாகி இளைஞர்பேரவை விடுதலை இயக்கம் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு புறப்பட்டவர்கள், தனிநபர் தீவீரவாதிகள் எனப்பலரும் ஒரு அமைப்பாகி மத்திய செயற்குழுவை அமைத்தார்கள். இளைஞர்பேரவையில் இருந்த உமாமகேஸ்வரன் தலைவராகவும் பிரபாகரன் இராணுவ ஆயுதப் பொறுப்புக்களையும் ஏற்றனர்.

புதிய புலி என்றார்கள், உட்பூசல்களில் பிரிந்தார்கள். பிரிந்தவர்கள் புளொட் என்றும் புதியபாதையுடன் புறப்பட்டனர். இவை ஆரம்பகாலமும், ஒருபக்கச்சார்பான தகவல் மட்டும்தான். இக்காலகட்டங்களில் ரெலோ ஈரோஸ் தம்பரிமாணங்களையும் வளர்த்துக்கொண்டது. உட்பூசல்கள் சகோதரப் படுகொலைகளாகப் பரிணாமம் பெற்றது. முக்கிய நோக்கம் திசைமாறியது. இதை ஏன் இங்கே எழுதுகிறேன் என்றால் தமிழ்தேசிய விடுதலையை ஆரம்பித்தது பிரபாகரன் என்றும் அதன் ஏகபோக உரிமை அவருக்கே உண்டு என்றும் நம்புபவர்களுக்காகவே. அதுமட்டுமல்ல புலியியக்கம் தனியே பிரபாகரனால் மட்டும் உருவாக்கப்பட்டது என்பது தவறானதே.

யார் கெரில்லா, மாவியா?
ஒரு கெரில்லாவுக்கும் கொள்ளைகாரர், மாவியாக்களுக்கும் பலவித்தியாசம் கிடையாது. இவர்கள் அனைவரினதும் இயங்குதன்மை, செயற்பாட்டுத்திறன், நகர்வுகள், நகர்த்தல்கள் அனைத்தும் இரவுகளிலும், கூடுதலாக இரகசியமாகவும், உண்மை முகங்கள் மறைக்கப்பட்டும் இருக்கும். குறைந்த பொருட்செலவில் பெருவெற்றிகளையும், யாரும் எதிர்பாராவண்ணம் சடுதியான தாக்குதல்களையும் செய்வார்கள். அரசியலில் ஆர்வமும் பின்புல உறவுகளும் இருக்கும். ஆனால் வித்தியாசம் ஒன்றே ஒன்று மட்டும்தான் ”நோக்கம்” அதாவது மாவியாவானவன் என்றும் தன்சுயநலத்தில் மிக மிக கவனமாகவும், அக்கறையாகவும் இருப்பான். ஆனால் கொறில்லாவானவன் முக்கியமாக மக்களின் நலத்திலும், மக்களை நேசிப்பவனாகவும், மக்களின் முன்னேற்றத்தில் அக்கறையுள்ளவனாகவும் இருப்பான். இப்போ புலிகள் கெரில்லாக்களா? மாவியாக்களா? கெரில்லா தாக்குதல்கள் செய்பவர்கள் அனைவரும் கெரில்லாக்களாகிவிட முடியாது. சந்தணக் கடத்தல் வீரப்பன் பல கெரில்லாத் தாக்குதல்களைச் செய்தவன், இன்னுமேன் மக்களால் நேசிக்கப்பட்டவனும் கூட. ஆனால் இவன் ஒரு விடுதலைப் போராளியாகவோ கெரில்லவாகவோ இருக்க இயலாது. இங்கே புலிகள் மாவியாவா? கெரில்லாவா என்பதை வாசகர்கள் கையில் விட்டு விடுகிறேன்.

இனங்காணல்
இனங்காணல் என்பது ஒவ்வொரு மிருகங்களுடனும் ஏன் எல்லா ஜீவராசிகளுடனும் கூடிப்பிறந்த ஒன்றாகும். இது ஏன் தமிழர்களுக்கு மட்டும் இல்லாது போனது? நாலு ஆமியை சுட்டுவிட்டு 40 ஆமி என்று கொண்டாடும் போது மக்கள் புலிகளை அடையாளம் கண்டிருக்க வேண்டும் இது வெறும் வானவேடிக்கை என்பதை உணர்ந்திருக்க வேண்டும். சினிமா பார்த்து கீரோய்ஸ்சத்தில் (நாயகத்துவம்) வளர்ந்தவர்கள் நாயகமார்க்கத்தையே பின்பற்றுவர். மக்களும் கைதட்டி வரவேற்றனர். ஆமியைக் கொல்வதுதான் தமிழ்மக்களின் விடுதலையா? சரி இராணுவத்தை ஈழமண்ணில் இருந்து கலைத்து விட்டதும் எமக்கான விடுதலை கிடைத்துவிடுமா? அக்கேள்விகளும் இதற்கான வேள்விகளும் ஏன் நடக்கவில்லை?

ஒரு கெரில்லாவானவன் முக்கியமாக சகோதரப் படுகொலையைச் செய்யக்கூடாது. காரணம் அச்சகோதரனும் அவன் நேசிக்கும் மக்களின் ஒருவனே. இயலாக் கட்டத்திலோ பல அறிவுறுத்தல்கள் விளக்கங்களின் பின் சில கொலைகள் செய்யப்பட்டிருந்தால் கூட புலிகளை மன்னித்திருக்கலாம். எல்லோரும் தெரிந்து பிழைவிடுவதில்லை. விளக்கவின்மையும் தெளிவும் இல்லாமையே காரணம். சகோதரப் படுகொலைகள் நடைபெற ஆரம்பித்தபோது மக்களாவது தட்டிக்கேட்டிருந்தால் சிலவேளை புலிகள் திருந்தியிருக்கலாம். துப்பாக்கியால் மக்களிள் வாய்கள் பொத்தப்படும்போதே மக்கள் உணர்ந்திருக்க வேண்டும் இது சரியான விடுதலை அமைப்பா இல்லையா என்று. விடுதலை என்ற பெயரில் வளர்ந்த வளர்த்தெடுக்கப்பட்ட மாவியாக் கும்பல்தான் என்பதை இன்றைய நிலை உணர்த்தியுள்ளது. இன்னும் இப்படி பல எம்மத்தியில் உருவாகுவதற்குத் தயாராக உள்ளன. இவற்றை இனங்காண்பதற்கே இக்கட்டுரை முன்னுரிமை கொடுக்கிறது.

மாவீரர் தினத்தையோ பொங்குதமிழையோ ஒரு வெகுசனபோராட்ட நிகழ்வாகக் கொள்ள இயலாது. இது வெறும் வேடிக்கை மட்டுமே அன்றி வேறில்லை. மக்களை ஒரு போராட்ட சக்தியாக்கி அவர்களின் முன்னெடுப்புகளுக்கு பக்கபலமாக ஆயுதங்கள் இருந்திருந்தால் மக்கள் தமக்குரிய விடுதலையை வென்றெடுத்திருப்பார்கள். புலித்தலைமை முடிந்துவிட்டது புலிகள் அழிந்து விட்டார்கள் என்று நிம்மதியாக இருந்து விட இயலாது. தமிழர்களுக்கென்று ஒரு அரசியல் சுதந்திரம் உருவாகும் வரை போராட்டம் தொடரும். உயிருள்ள ஜீவராசிகள் அனைத்தும் போராடவே பிறந்தன. ஒரு சின்னங்சிறிய வயிற்றுக்காக எறும்பு போராடுகிறது. நாம்…?

புத்திஜீவிகள் அன்று கொல்லப்படும் போது கைகட்டி மௌனியாய் சமூகம் இருந்தது. அன்று கூட ஒரு கண்டன ஊர்வலத்தையோ புலிகளுக்கெதிரான குரல்களையோ எழுப்பியிருந்தால் இன்று குறைந்தபட்சம் தமிழர்களுக்கு இந்த நிலைவந்திருக்காது. மக்களுக்காகப் போராடுகிறேன் என்று கூறும் அமைப்பு எப்போது மக்களின் குரல்களுக்கு மதிப்பளித்தது? அப்போது கூட மக்கள் ஏன் புலிகளை இனங்காணவில்லை. தெரிந்தும் தெரியாமல் இருந்தீர்களா? ஆகவே உங்களுக்கு இன்று கிடைத்த தண்டனை சரியானதா இல்லையா?

பிரோமதாசாவின் வேண்டுகோளுக்காவே அமிர்தலிங்கம் கொல்லப்பட்டார் என்று அறியப்படுகிறது. சரி ஆயுதம் தாங்காது அரசியலை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இயங்கிய திறமைசாலியான அமிர் கொல்லப்படும் போது கூட மக்களே வாய் மூடிக்கொண்டுதானே இருந்தீர்கள். அன்று துணைத்தளபதி அமிர்தலிங்கம் என்று வாயாரக்கத்திய உங்கள் வாய்கள் ஏன் அடைத்துப்போயின?

எதிரியென நீங்கள் கருதும் சிங்கள அரசுடன் புலிகள் சேர்ந்து பலசெயற்பாடுகளைச் செய்த போது ஏன் மௌனமாக இருந்தீர்கள்? அப்போது தெரியவில்லையா புலிகளின் இயக்குதன்மை மாவியாக்கள் போல் அமைகிறது என்று? ஏன் இனங்காணவில்லை? எடுத்துக் கூறவில்லை. இன்று உள்ள கூத்தணிகளில் ஒருவரை விரல்விட்டுச் சுட்டிக்காட்டுங்கள் அன்றைய அமிருக்கு நிகராக இன்று வெளிநாட்டிலோ உள்நாட்டிலோ பேச்சுவார்த்தையையோ சட்டநுணுக்கங்களையோ அறிந்த அன்றி தமிழர்களின் நிலையை சரியான முறையில் எடுத்துரைக்கக் கூட ஒருமனிதரை? எல்லாவற்றுக்கும் காரணம் யாருமல்ல மக்களே நீங்கள் தான்..

மக்கள் மேல் குற்றச்சாட்டு
அப்பன் உழைத்துக் கொண்டுவர முழுக்குடும்பமும் சாப்பிட்டு வயிறாறும். அப்பன் இறந்தால் பெற்றோரின் பழிகளை சேர்த்து குடும்பவண்டியை இழுக்க மூத்தமகன் என்ற மாடு தயாராகி நிற்கும். குடும்பப் பெண்கள் பெண்கள் என்று யாரோ முன்பின்னறியா ஒருவனில் தங்கிவாழ பிறந்ததில் இருந்து தமிழ்பெண்கள் தயாராக்கப்படுகிறார்கள். இப்படியான ஒரு சமூகக் கட்டுமானத்தில் இருக்கும் மனிதர்களிடம் சுயசிந்தனையை எதிர்பார்ப்பது சரியா? இச்சமூகம் போராடும் குணாம்சங்கள் கொண்டதல்ல என்பதை புலிகள் அறிந்திருந்தார்கள்.

கலாச்சாரம் குடும்பம் என்று மற்றவர்களின் மூளையிலே சிந்திப்பார்கள். திருவள்ளுவர் சொன்னார், கம்பர் சொன்னார், லெனின் சொன்னார், மாக்ஸ், சே, மாவோ, தொல்காப்பியர், யேசு, புத்தன், கீதை என்று மற்றவர்களின் மூளையில் எம்மினம் சிந்தித்தது, வாழ்ந்தது வாழ்கிறது. எம்மக்கள் என்று புரட்சிகரமாக புதிதாக சிந்திக்கிறார்கள் என்ற நிலைவருகிறதோ அன்றுதான் எம்மக்கள் போராட்டத்துக்குத் தயாரானவர்கள் என்று கொள்ளலாம். எம்மக்கள் போராடத் தயாராக இருந்திருந்தால் புலிகள் பிள்ளை பிடிகாரர்களைப்போல் ஆள்பிடிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எமது கலாச்சாரமும் சரி, அரசியல் போராட்ட சக்திகளும் சரி மக்களை சுயமாகச் சிந்திக்கவோ போராடவோ அனுமதிக்கவில்லை என்பதே உண்மை.

இன்றும் தலைவா உன்னைத் தலையென்று நம்பினோமே விட்டுவிட்டுப் போட்டாயே என்று ஒப்புச்சொல்லி மாரடிக்கும் நிலையில்தான் மக்கள் இன்றும் உள்ளார்கள். இவர்கள் போராட, தன்உரிமைகளை வென்றெடுக்க தயாரானவர்கள் என்று சொல்கிறீர்களா? பிரபாகரன் இறந்துவிட்டார் என்றதும் ஒரு சமூகமே ஆடிப்போய் ஏன் நின்றது? அடுத்து என்ன செய்வது என்று ஏன் முழிக்கிறது. இதை மறைக்க மீட்பர் பிரபாகரன் இருக்கிறார் வருவார் என்று நம்புகிறது. இது ஏன்? இது தன்னம்பிக்கை இல்லாத ஒரு சமூகத்தையே புலிகளும் மக்களும் அரசியலும் கட்டிவைத்திருக்கிறார்கள் என்பது தான் நிஜம்.

புரட்சி என்பது புரளும் துப்பாக்கியான றிவோல்வர் போன்றவற்றில் இருந்து பிறப்பதல்ல. புரட்சியும் போராட்டகுணமும் மூளையில் இருந்தே பிறக்கிறது. துப்பாக்கி தூக்கும் ஒவ்வொரு போராளியின் மனத்திலும் நான் எதற்காகப் போராடுகிறறேன் என்ற தெழிவு இருக்கவேண்டும். புலிப்போராளிகளினது பல வாக்குமூலங்களை ஊடகங்களுடாகக் கேட்டும் போது பலதடமை வேதனைப்பட்டேன். ஆமிக்காரன் அடிக்கிறான் அனைப்கலைக்க வேண்டும். அண்ணை யோசிக்காதையுங்கோ நாங்கள் இருக்கிறம். சின்னப்புலிகள் சொன்னவார்த்தை இது. இவர்கள் நாட்டுக்காகப் போராடினார்களா? அண்ணைக்காகப் போராடினார்களா? இது ஒரு விடுதலை இயக்கமா? மாவியா கும்பலா?

போராட்டம் என்பது சமூக, பொருளாதார, சூழல் நிலைகளுக்கமைய மாறுபடும். ஒவ்வொரு கெறில்லாப் போராட்ம் என்றும் சூழல் காலநிலைகளுக்கேற்ப மாறுபட்டே ஆகும். சூழலுக்கு ஏற்ப போராடுபவன்தானே கெறில்லா? புலிகளும் புலம்பெயர்ந்த தமிழரிடம் போதிய பணம் வசதியுள்ளது என்ற சூழலை அறிந்து கொண்டுதான் போராடினார்களோ என்னவே? புலிகள் மக்களை தம்பதுங்கு குழிகளாகப் பாவித்தார்களே தவிர போராட்டம் சக்தியாக என்றும் பார்க்கவில்லை என்பதே உண்மை. அப்படி அவர்கள் மக்களைப் போராடுடம் சக்தியாகப் பார்த்திருந்தால் மக்களைப் போராடவிட்டுவிட்டு ஊக்கசக்தியாகவும் அவர்களைப் பாதுகாக்கும் சக்தியாகவுமே இருந்திருப்பார்கள். செய்தார்களா?

ஏன் இல்லை
ஒரு இறைமையுள்ள நாட்டில் இருந்த ஒருபகுதி பிரிந்துபோவதற்கு பலவரையறைகள் உண்டு. அதற்கு வெளிநாடுகளின் அனுசரணை என்பது மிகமுக்கியமானது. அன்ரன் பாலசிங்கத்துக்கு கூட இது தெரியவில்லை என்றால் பாவம் பிரபாகரனுக்கு இதுவற்றித் தெரிவதற்கு சந்தர்ப்பமே கிடைக்காது. தெருச்சண்டித்தனம் ஊர்சண்டித்தனம் போல் ஒருநாட்டைப் பிரித்துவிட முடியாது. உலகம் முழுவதும் தெருத்தெருவாய் கத்தினாலும் ஒர் இறைமையுள்ள நாட்டினுள் மற்றைய நாடுகள் தான்தோன்றித்தனமாக தமிழர்கள் கத்துகிறார்கள் என்பதற்காக ஊடுருவ முடியாது. அரசியலே தெரியாத புலிகளுக்கும் புலம்பெயர் புலிகளுக்கும் இது எப்படித்தெரியும்?

புலம்பெயர்நாட்டுத் தமிழ்பெற்றோரே
இனம் இனவுணர்வு, மொழி மொழியுணர்வு என்பது முக்கியமானதும் எம்முடையானானதுமாகும். ஆனால் உங்கள் பிள்ளைகள் சரியான முறையில் சரியான வழியில்தான் அரசியலையும் போராட்டத்தையும் புரிந்திருக்கிறார்களா என்பது மிக மிக முக்கியமானது.

இவ்வளவுகாலமும் இலங்கைக்குள் ஈழம் என்று விழுந்த கொலைகள் இனி……..? என் சிற்றறிவுக்குத் தெரிந்ததைச் சொல்லவேண்டியது எனது கடன். முடிவெடுப்பதும் வழிநடத்துவதும் உங்கள் திறன்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

28 Comments

  • Vanachana
    Vanachana

    Morethan LTTE supporters anti-LTTE specialists are worried about the death of Prabaharan. They fear after some weeks people forget their son god leader no one will be there to read them.
    If possible these experts will give rebirth to Prabaharan with the help of Nedumaran and Vaiko. If Prabaharan lives they can also live with their expert analysis.
    At least ahter one year (Anthirady) our specialists have to pack their bags.
    It is better all the experts get together and take a bath in Thames and forget about Prabaharan.

    Reply
  • Kusumbo
    Kusumbo

    பிரபாகரனை மறக்கத்தான் விரும்புகிறோம். ஆனால் 30 வருடங்களுக்கு மேல் தம்பி ஆடிவிட்டுப்போன கூத்துக்களை மறக்கச் சொல்கிறீர்களா? மறக்கத்தான் முடியுமா? தமிழ்மக்களின் போராட்டத்தை முற்றாக நசுக்கியது அரசல்ல. பிரபாகரனே என்பதை தமிழ்மக்கள் உணரும்வரை அதற்கான போராட்டம் தொடரப்பட வேண்டும்

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    Prabhakaran was tortured before being killed, says report.June 10th, 2009.
    New Delhi, June 10 (IANS) Tamil Tigers leader Velupillai Prabhakaran was tortured by the Sri Lankan military before being killed, a leading human rights body said in a report released Wednesday.“Several army sources have said that Prabhakaran’s (younger) 12-year-old son Balachandran was killed after capture. Our (sources) said that he was killed in front of his father,” said UTHR.According to the report, among the LTTE leaders who surrendered to the army included Baby Subramaniam, a member of the group since 1976 and one of Prabhakaran’s oldest associates.
    Others reportedly now in government custody included former eastern province political leader Karikalan, former spokesman Yogaratnam Yogi, former head of the LTTE international secretariat Lawrence Thilakar, political advisor V. Balakumar, Jaffna leader Ilamparithi and Trincomalee political leader Elilan.– http://www.sindhtoday.net/news/1/19642.htm

    Reply
  • IPKF
    IPKF

    So many people survived by opposing Pirapakaran. They were paid by GoSL and RAW to write against LTTE. If there is no more LTTE or Pirapakaran, how can these people continue their luxury life? RAW and GoSL will abandon you soon. Normal Tamils only know Pirapakaran spiritually. They still worship him.

    Reply
  • Trinco Boy
    Trinco Boy

    காலத்தால் அழியாத காவியம் அண்ணா!

    காஞ்சியில் பிறந்த காவியம் எங்களண்ணா!
    வாஞ்சையுடன் எம்மினம் தலைநிமிர – வண்ண
    மிகுவரசு நிறுவி தமிழின நாடுதனை நிறுவி
    பகைவர் நெஞ்சை பதைக்க வைத்த பகுத்தறிவருவி!

    அறிவில் ஆற்றலில் உயர்ந்த உள்ளம்
    செறிவான ஆட்சிக்குஅவர் தமதாட்சி இலக்கணம்
    வாதத்தால் ஆரியமடைமை யுடத்தெறிந்த மாவீரன்
    பாதகமிகு மூடர்தம் இருளகற்றிய தமிழ்தாய் உதயன்

    காலத்தால் அழியாத காவியம் உம்பேச்சு
    ஞாலமெங்கும் பரவிய தமிழர்நலனே நின்மூச்சு
    தூங்கிய இனமெழுப்பநீ பறையறைந்த பாசறை
    தேங்கிய புகழனைத்தும் தமிழினத்தின் வைகறை

    உன்னுள உறுதியில் நின்கொள்கை உயர்வு
    தன்னலமிலா மானமிகு உழைப்பில் செறிவு
    வங்கக்கடலன்னை மடிமீது இன்றுந்தன் ஓய்வு
    எங்களுக்காய் யுழைத்த ஆதவனுந்தன் மறைவு

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    ‘Converted’ LTTE
    Submitted by rkm on Mon, 02/23/2009 – 23:06.

    * LTTE is a christian militant organization.
    Though almost all Indians are sympathetic and worried about the misery of ordinary Tamil folks in Srilanka, the heightened battle between government forces and LTTE has helped us expose one of the biggest lies in recent times by India ’s arch pseudo-secularists.Many aspects of LTTE and Terrorism are now crystal. When Prabhakaran was indeed Prabhakaran, LTTE remained a ‘dharmic’ force fighting for the legitimate rights of Lankan Tamils who were majority Hindus. But when Prabhakaran Annan was ‘converted’ by his European godfathers to Brother Prabhakar, the situation changed….

    Reply
  • DEMOCRACY
    DEMOCRACY

    Top-aide says LTTE may not have killed President Premadasa
    by P K Balachandran, September 8, 2004
    http://www.sangam.org/articles/view2/?uid=533

    Reply
  • BC
    BC

    //பகைவர் நெஞ்சை பதைக்க வைத்த ப கு த் த றி வ ரு வி!
    அறிவில் ஆற்றலில் உயர்ந்த உள்ளம்
    செறிவான ஆட்சிக்குஅவர் தமதாட்சி இலக்கணம்
    வாதத்தால் ஆரியமடைமை யுடத்தெறிந்த மாவீரன்//

    Trinco Boy, இந்த கவிதை அறிஞர் அண்ணாவை பற்றியது.
    இலங்கை தமிழர்களின் துரோகி பற்றியது அல்ல.

    Reply
  • kala
    kala

    தாங்கள் குறிப்பிட்டவை அத்தனையும் மிகவும் உண்மையானகவயே

    ஆனால் நீங்கள் மக்கள் எதிர்த்தார்களா? என்று அதற்கு உங்கள் குறிப்பிலேயே பதில் இருக்கிறது.அதாவது நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களே “புலிகள் பிள்ளைபிடிகாரரைப்போல் ஆள்பிடிக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது” மக்கள் ஆதரவு வழங்கியிருந்தால்.

    Reply
  • yoganathan
    yoganathan

    புலிகள் செய்யும் தவறுகளையோ அன்றி ஆரம்ப காலத்தில் சக இயக்கங்கள் செய்யும் தவறுகளையோ தட்டிக் கேட்கும் நிலையில் மக்கள் இருந்ததில்லை. அந்தளவுக்கு சேர்ந்து செயற்படும் தன்மை தமிழர்க்கு இல்லை என்பதே என் கருத்து. அதன் பிரதிபலிப்பை நாம் இப்போதும் பார்க்கிறோம்.

    அடுத்து புலம்பெயர் இளையோரை மட்டுமல்ல புலம்பெயர் பழையோருக்கும் சேர்த்து அறிவூட்டப்படல் வேண்டும்.உங்கள் முயற்சியை வரவேற்கிறேன்.

    இதுபோன்ற விழிப்பூட்டல்கள் போராட்டகாலங்களில் முன்னெடுக்கப் படாததன் காரணத்தை குலன் முன்வைப்பாரா? தற்போதைய உயிரிழப்புகளைக் குறைத்திருக்குமல்லவா?

    Reply
  • palli.
    palli.

    குலன் உங்கள் கட்டுரயுடன் பல்லி பலவகையில் முரன்பட வேண்டி இருக்கிறது; ஆனாலும் உங்களது நோக்கமுமும் அமைப்புகள் சார்ந்தது இல்லாமல் அரசியல் அபிலாசைகள் இல்லாமல் மக்கள் பற்றி சிந்திக்க தூண்டுவதால் ஏற்று கொண்டு சில விடயங்களை தருகிறேன்: மக்கள் ஏன் கேக்க இல்லை? பல்லி சில விமர்சனம் வைக்கவே (பல்லியும் மக்கள்தான்) 30 வருடம் காத்திருந்து அதுவும் தேசம் என்னும் ஒரு ஊடகம் எமக்கு பாதுகாப்பாக எழுதமுடியும் என ஒரு நம்பிக்கையை தந்தபின்பே மனதில் உள்ள பாரத்தை இறக்க முடிகிறது; இதிலும் பல்லி தன்னை அறிமுக படுத்தாமலே பலரிடம் ஒரு குத்து மதிப்பாய் இன்னல்கள் படவேண்டி உள்ளது, இதில் காக்கை வலிப்புகாரர் மாதிரி இடுப்பில் இரும்புடன் பலர் காயும்போது மக்களால் பெருமூச்சு மட்டும்தான் விடமுடியும்; இதில் பல்லி குலனும் அடங்கும்:

    இவர்கள் மாவியாவா?? அல்லது கொரிலாவா?
    மாவியா தன்னுயிரை பயணம் வைத்துதான் வாழ துடிக்கும்: கொரில்லா தான் அழிந்து தனது இலக்கை அடைந்து தனது மக்களை வாழவைக்கும்(கரும்புலியை அல்ல) ஆனல் இவர்கள் மக்கள் உயிரை குடித்து தாம்வாழ நினைப்பதால் பிணங்கள்பாதி மிருகம்பாதி சேர்த்து மிதித்த கலவைகளே; அமிர்தலிங்கத்தை யாரோ சொல்லி போட்டதாக சொன்னீர்கள், அதுமட்டுமா அமிர்தலிங்கம் சொல்லியும் சிலரை போட்ட நிகழ்வும் உண்டு;
    தொடரும் பல்லி;

    Reply
  • Kulan
    Kulan

    நன்றி கலா! ஒன்று நச்சு விதை எனும் பொழுது அதை ஆணிவேருடன் பிடுங்கி விடவேண்டும் என்பர்கள். கருவிலே பேராட்டம் நஞ்சூட்டுப்பட்டபோது அது விருட்சமானபின் அதை வெட்டு வீழ்த்தமுடியாது திண்டாடினார்கள் என்பதே உண்மை. அதை ஆதரித்தவர்கள் அவர்களே பாதிக்கப்பட்டபோது தடுக்க முடியாது திண்டாடினார்கள். மக்கள் சரியாகத் தயார்படுத்தப்பட்டு மக்களின் முழுமையான ஆதரவுடள் போர் நடந்திருக்குமானால் புலிகள் தோற்றிருக்கவே முடியாது. இதில் இருந்து தெரியவருவது என்றால் புலிகள் வேறு மக்கள் வேறாக தான் வாழ்ந்திருக்கிறார்கள் என்று

    Reply
  • Kulan
    Kulan

    யோகநாதன்! நிச்சயமாக முன்வைக்கப்படும். எம்மக்கள் இந்திய சினிமாவில் மயங்கி வாழ்ந்தவர்கள். அதுபோன்ற அடையாளங்கள் நேரடியாகக் கிடைக்கப் பெறும் பொழுது நிஜம் என நம்பத்தொடங்கினர். இராமாயணம் மகாபாரதம் விக்கிரமாதித்தன் ஏன் பிரபாகரன் படித்த அம்பலிமாமா போன்றவைகள் சாகசங்களை கற்பனைகளில் பிரதிபலித்தவையே. எமக்கு எம்பெற்றோர் முதல் ஆசிரியர்கள் வரை முதன் முதலில் சொல்லித்தந்த கதை என்ன? பாட்டி வடைசுட்டகதை. அப்படியென்றால் என்ன? காகம் பாட்டியை எப்படிச் சுத்தியது. பின் காகம் நரியால் எப்படிச்சுற்றப்பட்டது. சுற்றுபவன் சுற்றம்படுவான் என்பதை பிட எப்படிச் சுற்றியது என்பதைக் கேட்டு கைதட்டத் தேடங்கிய எம் கலாச்சாரம் பின் 4 இராணுவம் செத்ததை 40 என்று சொன்னவுடன் மகிழ்சியில் ஆரவாரித்தது. வெறும் கொலைகள் தான் விடுதலையாகியதே தவிர இனமீட்பு மக்கள் மீட்பு என்பதை விடுத்து மண்மீட்பு என்று வெறும் கொலைகளே வெற்றி என்று நம்பத் தொடங்கியது. மக்களைப்பற்றி மீட்பைப்பற்றிக் கதைத்த அனைத்து இயக்கங்களும் துப்பாக்கிகளால் துவம்சம் செய்யப்பட்டன. புத்திஜீவிகள் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். ரயல் அக்பார் என்று ஒரு பெருவழக்கை அமிர்தலிங்கம் திருச்செல்வம் போன்றோர் ஒரு சொல்லை வைத்து ஆடி அந்த வழக்கில் பெருவெற்றி பெற்றனர். புத்திஜீவிகள தேடித்தேடி அழிக்கப்பட்டதன் விளைவால் அரசியல் என்ற ஒன்று இல்லாமல் போனது. அதன்விளைவைத்தான் பார்த்தீர்களே.

    Reply
  • indiani
    indiani

    //புத்திஜீவிகள் தேடித் தேடி அழிக்கப்பட்டனர். ரயல் அக்பார் என்று ஒரு பெருவழக்கை அமிர்தலிங்கம் திருச்செல்வம் போன்றோர் ஒரு சொல்லை வைத்து ஆடி அந்த வழக்கில் பெருவெற்றி பெற்றனர். புத்திஜீவிகள தேடித்தேடி அழிக்கப்பட்டதன் விளைவால் அரசியல் என்ற ஒன்று இல்லாமல் போனது. அதன்விளைவைத்தான் பார்த்தீர்களே// குலன்

    இந்த ரயல் அட்பார் என்ன பிரயோசனம் சாதாரண தமிழ் மகனுக்கு அப்படி அவர்கள் வென்றதால் அவர்கள் யாரிடமிருந்தோ வழக்கு செய்ததிற்கு காசு வாங்கியிருப்பார்கள் சரி அந்த வழக்கை வென்றதால் எந்த தமிழ் மகன் என்ன பிரயோசனம் பெற்றான் என்று சொல்ல முடியமா? குலன் இப்படியான புத்திஜீவிகள் ஸ்ரண்டை திரம்பவும் எங்களக்கு காட்ட வேண்டாம்.

    இப்ப ஆனந்தசங்கரியும் கூட இப்படியான கூத்துக்கள் தொடங்கிவிட்டார் அமிர்தலிங்கத்தை சுட்டவர்களை கூப்பிட்டு தனது உறவினர் என்பதற்காக அவர்களை கூட்டணியில் இணைத்து தேர்லில் விட்டுள்ளார் பல காலமாக கூட்டணியை மிகவும் கஸ்டமான காலங்களில் பாதுகாத்தவர்களை எல்லாம் கை விட்டுவிட்டு ஒரு வெள்ளை வேட்டி கதைகள் விடுகிறார் இதில் உள்ள ஆபத்து என்ன வென்றால் இப்போது இந்த ஆனந்த சங்கரியுடன் உள்ளவர்கள் 6 மாதங்களுக்கு முன்பு ஆனந்த சங்கரியை கொல்ல பக்கத்தே இருந்து உளவு பார்த்தவர்கள்.

    Reply
  • yoganathan
    yoganathan

    //அமிர்தலிங்கம் சொல்லியும் சிலரை போட்ட நிகழ்வும் உண்டு// பல்லி

    இந்த நபர்கள் யார் தயவு செய்து உண்மைகளை வெளிக்கொணருங்கள் காரணம் இந்த தவிகூ தாங்கள் சிறந்தவர்கள் கொலையே செய்யாதவர்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள்.

    பல்லி அவர்களே இபடியாக கொலை செய்யப்பட்டவர் தோழர் சுந்தரம் என எனக்கு ஒரு ஞாபகம் இது பற்றி பல கதைகள் எனது ஆரம்ப கால அரசியலில் வந்துபோனது தோழர்கள் இப்படியாக கொல்லப்ட்டால் ஏன் திரை மறைவில் பேச வேண்டும்.

    Reply
  • palli.
    palli.

    யோகநாதன் திரைமறைவு எழுத்து மிக சுகந்திரமாக உள்ளது; காரனம் பலஇடங்களில் நட்ப்புகளே தவறு விடுவதால் அதை நாமும் சுட்டிகாட்டாமல் இருப்பதால் அவர்களும் நாமும் தமக்கு சாதகமாக செயல்படுவதாக எண்ணி குண்டக்க மண்டக்க விளையாட்டுகள் செய்யினம்; இதுக்கு ஒரு எடுத்துகாட்டு புலம் பெயர் இலக்கியம், பெண்ணியம், தலித்தியம், நிதி சேகரிப்பு, ஊடகம் வானொலி; இப்படி பல விடயங்கள் செய்யும் தில்லுமுல்லை அதில் சம்பந்தபட்டவர்களே (அங்கு பேச முடியாத உன்மையை) தேசத்தில் போட்டு உடைத்ததன் விளைவு இன்று பலர் அப்படியான நிகழ்வில் அடக்கி வாசிப்பதை காண முடிகிறது, அதே நேரம் நல்லதை பாராட்டவும் நாம் தயங்கியதில்லை;ஆகவே பல்லியின் லொள்ளுக்கு மறைமுக எழுத்தே பலமாக உள்ளது; அதுக்காக தவறான தகவல் வந்தால் சுட்டி காட்டுங்கள் தவறாயின் திருத்தி கொள்கிறேன்; அமிர்தலிங்கம் பற்றிய விடயங்கள் பலதடவை தேசத்தில் எழுதபட்டது; இதில் தங்கள் கணிப்பும் ஒன்றுதான்;

    அதேபோல் இன்று சிலர் வன்னியில் இருந்து வந்து வவுனியா முகாமில் அடைபட்டு கிடப்பவர்களை வெளியே எடுத்து விட லட்ச்ச கணக்கில் பணம் வேண்டுவது போல் 1984 கால பகுதியில் இவர் இந்தியாவில் படிக்க வந்த பலரிடம் கல்லூரியில் இடம் வாங்கி கொடுக்க பலரிடம் லச்சகணக்கில் பணம் வேண்டினார் ;நான் கூட சிலருக்காக அவரிடம் போய் அன்று நின்று உள்ளேன்; அதை பின் பலரிடம் சொன்னபோது பலர் இதில் இவரிடம் மாட்டியது தெரிந்தது; யோகநாதன் உன்மையில் அந்த கல்லூரிகளில் இவரது கடிதத்துடன் இடம் கிடைக்கும் என்பது பின்பு தெரிய வந்தபோது அமிர்மீது எனக்கு அருவெருப்பு மட்டுமே வந்தது;

    Reply
  • Kulan
    Kulan

    பல்லி சொல்வதுபோல் மக்கள் எனும் குற்றச்சாட்டினுள் குலனும் அடங்குகிறார். அதேவேளை எமது மக்களைப் போராடத் தூண்டி ஏன் துப்பாக்கி தூக்கியும் தூக்கிக் கொடுத்துவிட்டும் போராட்டம் பாதைமாறுகிறது என்னும்போது அதேதுப்பாக்கிகள் நெற்றிப்பொட்டில் எழுது முயலும்போது வசதி இருந்தது என்பதற்காக நாட்டை விட்டு புறமுதுகு காட்டிவிட்டோமே என்று குற்றவுணர்வில் நானும் என்னைப்போன்ற பலரும் வாழ்ந்தும் செத்துக் கொண்டல்லவா இருக்கிறோம். நான் அல்லது நாம் எம்மக்களுடன் செத்திருக்க வேண்டியவர்கள் அல்லவா? தயவுசெய்து இதை ஒருகட்டுரையாக மட்டும் படிக்காமல் தயவுசெய்து என்மனச்சாட்சியின் தண்டனையாகப் பாருங்கள். இதன் தொடர்ச்சி தேசத்தில் வெகுவிரையில் வரும். பல்லி! நாம் எவ்வளவு கஸ்டநட்டங்களிலும் வாழலாம் ஆனால் என்னைப்போல் மனச்சாட்சியால் தண்டிக்கப்பட்டுக் கொண்டு சூழலின் கைதியாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் பலர் உண்டு. இவ்வரிசையில் நீங்களும் அடங்கலாம். காலம்கடந்த ஞானம் கண்கெட்டபின் சூரியநமஸ்காரம் தான்.

    Reply
  • Kulan
    Kulan

    யோகநாதன் நீங்கள் பல்லியிடம் கேட்ட கேள்விக்கு என்னாலும் பதில் சொல்ல முடியும். தோழர் சுந்தரம் தொழில்நுட்பவியலில் படிப்பதற்காக இந்தியா சென்றிருந்தார். மிக மிக கஸ்டப்பட்ட குடும்பம் அவருடையது. படிப்புக்களுக்கெனக் கொடுக்கப்பட்ட பணத்தில் சிவப்புப் புத்தகங்களை வாங்கி வாசிக்கலானார். ஆயுதப்போராட்டத்தில் உந்தப்பட்டார். ஊரில் சுந்தரமும் அமிரும் அதிக தொலைவில் வாழ்ந்தவர்கள் இல்லை. புதியபாதை புத்தகம் வெளிவரும் வேளை நான் கண்ணன் குமணன் போன்றோர் சுந்தரத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என்பதை மட்டும் சொல்ல முடியும் தயவுசெய்து வாய்களைக் கிண்டாதீர்கள். சுந்தரத்தின் கொலைக்கும் அமிர்தலிங்கத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இதற்கு முக்கிய காரணம் புலிகளின் உடைவே. சுந்தரத்துடன் பழகியவர்களுக்கு நன்கு தெரியும் இவர் மிக எழிதில் முரண்படமாட்டார். அமிர்தலிங்கம் போன்றோர் செய்த தவறுகள், இப்படிச் சில இளைஞர்கள் தொடங்கிவிட்டார்கள் என்று தெரிந்தும் அவர்களை அணுகி அவர்களைச் சரியான பாதையில் வழிநடத்தாது தான்தோன்றித்தனமாக விட்டதேயாகும். காரணம் அரசியல் பிழைப்பு எனலாம்.

    Reply
  • Kulan
    Kulan

    அமிர்தலிங்கம் பலருக்கு வேலை எடுத்துக் கொடுத்திருந்தார். இவரின் சிபாரிசில் பலருக்கு இந்தியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் பாடசாலைகள் கிடைத்திருந்தன. ஆனால் ஒருசதம் கூட வாங்கவில்லை என்பது எனக்குத் தெரியும். பலர் பலவிதமாக கட்டுக்கதைகளை விடலாம். சுந்தரத்தில் இருந்து அமிர்தலிங்கம் வரை எனக்கு நன்கு பழக்கம் உண்டு காரணம் நான் மிகச்சிறுவயதிலேயே அரசியலினுள் புகுந்து இளைஞர் பேரவையுடன் ஒரு தொகுதி அமைப்பாளராக இருந்தவன். அமிர்தலிங்கம் இளைஞர்களுக்காக பலவழக்குகளை இலவசமாகப் பேசிவென்று கொடுத்தார். இந்தியானியின் கேள்விக்கும் இதுதான் பதில். அமிர்தலிங்கம் வசதிபடைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு அரசியலில் வந்துதான் பணம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இவர் மிகப்பிரபல்யமான ஒரு வழக்கறிஞர் என்பதையும் அறிக.

    Reply
  • palli.
    palli.

    குலன் ஒருவிடயத்தை புரிந்து கொள்ள வேண்டும்; உங்கள் பக்கத்தில் அமிர் நியாயமாக இருக்கலாம் ஆனால் யோகனாதன் சொல்லுவதை எப்படி உங்களால் மறுக்கமுடியும், அமிரின் மனவியோ அல்லது காண்டிபனோ சொல்லட்டும் எமக்கும்(அமிர்) சிலரிடம் வேலைக்காகவோ அல்லது படிப்புக்காகவோ பணம் வாங்க இல்லைஎன; அதேபோல் சுந்தரத்தின் கொலையின் திட்டம் அமிர் வீட்டில்தான் என்பதுகூட தெரியாமல் சுந்தரத்தின் நண்பனாகவும் அமிரின் அமைப்பு அஙத்தவராகவும் இருந்திருப்பது வேதனைதான்;

    பணம் அமிர் குடும்பத்துக்கு பிரச்சனை இல்லை என்பது உங்கள் வாதம்; ஆனால் அதே பணத்துக்காக இதே அமிரின் மகன் இந்தியா லண்டன் ஆள் அனுப்பும் முகவர் செய்தது ஏன் தங்களுக்கு தெரியவில்லை; அமிரும் எமது இனத்துக்கு ஒரு சாபகேடுதான்; தாங்கள் சொன்னது போல் எமது வாயையும் கிளறி இறந்தவர்களையும் தாங்கள் தெய்வமாக வழிபடுபவர்களையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற வேண்டாமே; அமிர் பற்றி இதே தேசத்தில் பல பின்னோட்டம் பல்லி தவிர்ந்த, பல விடயம் தெரிந்தவர்கள் எழுதியதை குலன் கவனிக்க தவறியது வருத்தம்தான்; இது தங்களை குற்றம் சாட்ட பல்லி எழுதவில்லை, எந்த ஒரு தமிழின குற்றவாழியும் தண்டிக்கபடாவிட்டாலும் உத்தமராக வரலாறோ அல்லது சரித்திரமோ வந்துவிட கூடாது என்பதில் பல்லி போல் பலர் கவனமாக உள்ளனர்; சுந்தரத்தின் அயலவர்கள் தேச நிர்வாகத்திலும் இருப்பதால் பல்லியின் எழுத்தில் தவறு இருப்பின் சுட்டி காட்டவும்;

    Reply
  • Kulan
    Kulan

    பல்லியவர்களின் கூற்றை என்னால் மறுதலிக்க முடியாது. நானும் இளைஞர்பேரவையின் வேகம் போதாது; வெறும் தேர்தலுக்கான ஒரு அமைப்பாக சேனாதிராஜாவின் பின் உருமாறத் தொடங்குகிறது; விடுதலைக்காக வேலைத்திட்டங்கள் இல்லை; இளைஞர்களின் உயிர்ப்பை மழுங்கடிக்கும் அமைப்பாக உருமாறுகிறது என்று விடுதலை இயக்கமாகப் பிரிந்து வந்தவர்களில் நானும் ஒருவன். என்கருத்துக்களுடன் சுந்தரம் உடன்பட்டிருந்தார். ஆனால் எம்மைப்போல் சுந்தரம் எதையும் நேரே சொல்லி முறிப்பவர் அல்ல எப்படி அமிருடன் முரன்பட்டார் என்பது எனக்குத் தெரியாது. இதுபற்றி சுந்தரம் எனக்கு எதுவும் கூறவில்லை என்பதில் எந்த ஆச்சரியமும் கிடையாது. காரணம் இரகசியம் காப்பதில் சுந்தரம் வல்லவர். 1985 ஆரம்பங்களில் நான் நாட்டுக்கும் இயக்கங்களுக்கும் கைகாட்டிவிட்டு வந்தவன். அதன்பின் ஒரு சில தொடர்புகள் இருந்தாலும் அவற்றை இல்லை என்றே கூறலாம். எனக்கு 1979க்கு முந்திய அமிரைத் தெரியுமே தவிர அதன்பின்னுள்ள அமிரைத் தெரியாது. அரசியல் ரீதியாக த.வி.கூ எதிராக இருந்தாலும் அமிர் நல்லவர் என்ற எண்ணம் இருந்தது. அறிவைக் கொடுக்கும் கல்விக்குக் அமிர் காசுவாங்கியிருப்பார் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.

    பல்லி! நான் சுந்தரம் கொலை நடப்பதற்கு பலகாலத்துக்கு முன் இளைஞர்பேரவையில் இருந்து முரண்பட்டுப் பிரிந்து வந்துவிட்டேன். அதன்பின் எந்தத் தொடர்பும் த.வி.கூ அல்லது இளைஞர்பேரவை உடனும் இருக்கவில்லை. எனக்குத் தெரிந்தவரை 1977/78 வரை அமிர்தலிங்கம் பலருக்கு வேலை பள்ளிக்கூடம் போன்றவற்றுக்கு சிபாரிசு செய்தவர் ஆனால் ஒருசதமும் வாங்கவில்லை. ஆனால் நீங்கள் கொடுத்தீர்கள் என்கிறீர்கள் அதை என்னால் மறுதலிக்க இயலாது. மேலும் சுந்தரத்தையும் சந்ததியாரையும் அமிர் பிரச்சனையில் சேர்த்துப் பார்க்கும் போது சந்தியார் அமிருடன் நேரடியாகவே முரண்பட்டவர். வாக்குவாதப்பட்டவர்; இளைஞர் பேரவை மத்திய செயற்குழுவில் இருந்தவர்; சுந்தரம் அப்படியல்ல.அப்படியானால் அமிர் சந்ததியையே முதல் போடத் தூண்டியிருக்க வேண்டும். அது மட்டுமல்ல அமிரின் அரசியல் முன்றேற்றத்துக்கு சந்ததி முழுத்தடையாக இருந்தவர்கள் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்.

    இந்தியாவில் அமிர் இருந்தபோது ஏறக்குறைய எல்லா இயக்கத்தவர்களும் தாம் கூட்டணியில் இருந்தவர்கள் என்று கடிதம் வாங்கிக் கொண்டு வெளிநாடு போனார்கள். இதில் என் மாற்றியியக்க நண்பர்கள் உள்ளடங்குவர். (தற்போதும் என்னுடன் தொடர்பிலிருப்பவர்கள்) எவருக்கும் அமிர் ஒரு சதமும் வாங்கவில்லை. அமிருக்கு சுந்தரத்தைப் போடவேண்டிய அவசியம் என்ன? சுந்தரம் முரண்பட்டவர்களுடன் நின்று விவாதித்து பிரச்சனையை வளர்ப்பவர் அல்ல. புலிகளில் இருந்து துப்பாக்கி புத்தகங்களுடன் புளொட் பிரிந்து வந்தது என்பதும்: சுந்தரம் தளபதி என்பது மட்டுமல்ல: புளொட்டின் அபரீதமான வளர்ச்சி: சுந்தரத்தின் திறமை அரசியல் முன்நோக்கு என்பன தான் சுந்தரத்தை சுட்டதற்கான காரணம் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். இதற்கும் அமிருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் புரியவில்லை

    Reply
  • yoganathan
    yoganathan

    குலன் உங்களின் பதில்கள் போதுமானதாக இல்லை குலன் உங்களின் நினைவிற்கு சில விடயங்களை தருகிறேன்;

    வட்டுக்கோட்டை மகாநாடு பொதுகூட்ட மேடைக்குப் பின்னால் இருந்த பிரபாகரனை பார்த்து நான் நினைக்கிறேன் மாவை சேனாதிராசா என(தவறாயின் தெரிந்தவர்கள் திருத்தவும்)கேட்டார் > இருட்டில் இருக்கிறீர்கள் என்று கேட்ட போது பிரபாகரன் இப்ப நாங்கள் இருட்டில் இருக்கிறம் எங்களுக்கு தெரியும் எப்ப வெளியே வரவேண்டும் என்று.

    தோழர் சுந்தரம் கொல்லப்படுவதற்கு 3 வாரங்களுக்குள் நடந்த விடயங்களைப் பாருங்கள் பிரபாகரன் எத்தனை தடவைகள் இந்தக்காலத்தில் அமிர் வீட்டில் இருந்து சாப்பிட்டு விட்டு இருந்து பேசினார்கள்.

    தோழர் சுந்தரம் கொல்லப்படுவதற்கு முதல் இரு நாட்களும் கூட அமிரும் பிரபாகரனும் மிக நெருக்கமாக இருந்தனர் காரணம் இரு வாரங்களுக்கு முன்பு தோழர்கள் சந்ததியாரும் சுந்தரமும் ஏன் பிரச்சினைப்பட்டார்கள் தோழர் சுந்தரமும் சந்ததியாரும் அமிருக்கு எதிராக எழுதியதும் நோட்டீஸ் விட்டதும் ஞாபகம் இருக்கா.

    அந்த நோட்டீஸ்ல் அமிரின் தலமையும் இதன் பிரச்சினைகளையும் குறிப்பிட்டு இருந்தது அதில் அமிர் கூட்டணி தலைமை தமிழர் போராட்டத்தின் தவறான தலைமைகள் இது மக்களின் விவசாயிகள் தொழிலாழிகளின் பிரச்சினைகளை அடையாளம் காண முடியாதது இவர்களின் பிரதிநிதித்துவம் பணக்காரவர்க்கத்க்கு உரியதே என்றும் (இதை கூர்ந்து கவனிக்க) இந்த அமிருடன் சில தனி நபர் ஆயுதவாதிகளை வைத்துக்கொண்டு புரட்ச்சி செய்யலாம் என்று கனவு காண்கிறார் என்றும் இந்த தனிநபர் ஆயுதவாதியும் அமிர் கூட்டணி தலைமையும் தமிழர்போராட்டத்தின் தவறான தலைமைகளே என்பதாகும்.

    இதன் பின்னர் தோழர் சுந்தரம் கொல்லப்பட்டார். தோழர் சுந்தரம் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தி புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் நோட்டீஸ் அடித்தனர். இப்படி நோட்டடீஸ் அடித்தவர்களில் நிர்மலா. நித்தியானந்தன். ராகவன். ஆகியோர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று பெரும்பாலான ஆரம்பகால புளட் உறுப்பினர்கள் இன்றும் பேசிக்கொள்கிறார்கள்

    இதன் பின்னர் உமா மகேஸ்வரன் சொல்லுகிறார் பிரபாகரன் தலைமையில் ஈழப்போராட்டம் எடுத்துச்செல்லும் குறிகள் தென்படுகிறது இது முழு தமிழர்க்கும் அழிவிலேயே முடியும் என்பதாகும்.

    பின்னர் பிரபாகரன் மனோ மாஸ்டரிடம் ஏதோசிறு பிரச்சினை வந்த போது தமிழீழம் மலருவது என்றால் எனது தலைமையில் மட்டும்தான் இல்லையேல் முழு தழிழர்களுமே அழிந்தாலும் வேறுயாரின் தலைமையில் எதுவும் நடக்காது.

    அந்த தனி நபர் பயங்கரவாதியாக சுந்தரத்தால் குறிப்பிடப்படவர் பிரபாகரனும் தவறான தலைமை எனபது அமிரும் பின்னர் இவர்கள் இருவரும் சுந்தரத்தால் தமக்கு ஆபத்து என இணைந்தது உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

    ….-அமிர் வட்டுக்கோட்டையில் பா- உறுப்பினராக இருந்தபோது இவருக்கு எதிராக காங்கிரஸ் காரைநகர் தியாகராசாவை நியமித்த போது மங்கயற்கரசி காரைதீவான் பாராளுமன்றம் போவதா என்று பிரதேசவாதம் பேசியது ஞாபகம் இருக்க வேண்டும்.

    குலன் இங்கே பொருத்த வேண்டியது இவர்களின் பதவி ஆசையையும் அதற்காக யார் யாரை எப்படியான ஆழுமையுடன் என்பதை பொருத்திப்பார்க்கவும்.

    உங்களுக்கு சுந்தரத்தை தெரிந்திருந்தால் சுந்தரம் எத்தனை தடவை அமிரை பதவி ஆசை பிடித்தவர் என்று பேசியுள்ளார் சந்ததியார் இந்தக்காலத்தில் என்ன சொன்னார் என்பதையும் சேர்த்துப் பார்க்கவும். அமிர் தமது பதவிகளை காப்பாற்றவே இன வெறியை ஊட்டுவதையும் பதவி கிடைத்ததும் தமிழர்களை மறப்பர் என்றெல்லாம் பேசியது ஞாபகம் இல்லையா?

    இப்போ தெரியும் ஏன் சுந்தரம் கொல்லப்பட்டார் பின்னர் ஏன் அமிர் கொல்லப்பட்டார் ஒரே புலிகளால்….விமர்சனங்கள் தொடரப்பட வேண்டும்.

    புதியபாதை பத்திரிகையில் தமிழிழப் போராட்டத்தின் தலைமைகள் பற்றிய குறிப்புக்களையும் நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும்.

    இது அமிர் சம்பந்தமான எனது விமர்சனம்.

    Reply
  • palli.
    palli.

    அமிர் பலருக்கு உதவி செய்தார் யார் அந்த பலர்?? பணக்காரர்தானே; ஏன் ஏதாவது ஒரு வழக்கு அமிர் ஏழைகளுக்காக பேசியதாக சுட்டி காட்டுங்கள்; பெரும்பாலான பணக்காரர் கூட்டணியை ஆதரிக்க இல்லை, அவர்கள் காங்கிறஸ் க்ட்ச்சியைதான் ஆதரித்தனர், ஆனால் கூட்டணியை ஏழைகள் பாதிக்கபட்ட மக்கள் அனைவரும் இவர்களால்தான் எமக்கு விடிவுபிறக்கும் என நம்ப்பி ஒட்டு மொத்தமாக ஆதரித்ததால் கூட்டணி வெற்றி உறுதி என அறிந்த பல பணக்காரர்+மேல் வகுப்பினர் பின்னாளில் உதவும் என்பதால் கூட்டணி பக்கம் வந்தனர்; இதில் அமிர் ஏழைகளுக்கு செய்த நன்மை என்ன என்பதை யாராவது சொல்லுங்கோ பல்லி தெரிந்து கொள்கிறேன்;

    ராசதுரையையும்; காசியானந்தனும் தேர்தலில் போட்டியில் இறங்கியதுக்கு யார் காரனம்? இது தெரிந்த பலர் இருக்கின்றனர்; கரவெட்டி இராசலிங்கத்துக்கு கட்ச்சியில் என்ன மரியாதை அது ஏன்? அன்னை மங்கையர்கரசி சொல்லட்டும்; சுந்தரத்துக்கும் அமிருக்கும் என்ன பகை? அமிர் புத்திசாலி அதனால் யார் தயவில் சந்ததியார் பேசுகிறார்; அவர் பேச்சுக்கு பின்னால் யார் உள்ளனர் என பார்த்தபோது உமாவாகதான் பட்டார்; ஆனால் சுந்தரத்தின் பலம் மிக திறமையானது மட்டுமல்ல எந்த அரசியல்வாதியுடனும் வாதிக்கும் வல்லமையும் அறிவும் அவரிடம் இருந்ததை பலர் கவனித்த போது ஏன் அமிர் கவனித்திருக்க மாட்டார்; அமிர் தமக்கு எதிராக யாராவது வந்தாலும் அதை முளையிலேயே கிள்ள வேண்டும் என நினைப்பவர்; அதனால் தன்னுடன் வைத்திருந்த பலர் (அடிதடி பாட்டிதான்) பரந்தனில் ஒரு உளவு யந்திர திருத்தம் செய்யும் இடத்தில்(பாலுரத்தினத்தினுடையது) கும்மாளம் போடும்போது பொலிசாரில் மாட்டி சிலவருடம் சிறைசென்று திரும்பி வந்து கூட்டணிக்கு சிறப்பு தளபதிகளாக மேடையில் முளங்கியது அனைவரும் அறிந்ததுதான், அதில் வண்ணை; திசை,பாலு; யோகராசா என பட்டியல் நீளுகிறது

    இதை ஏன் இங்கு எழுதுகிறேன் எனில் பின்நாள்களில் இவர்கள் யாரும் எந்தஒரு அமைப்புடனும் தொடர்பு இல்லை மேடையில் முழங்கி மாணவர்களை உசுப்பேத்தி விட்டு பாதுகாப்பு கருதி புலம் பெயர்ந்து வந்து விட்டார்களாம் 1982லேயே; அதேபோல்தான் மற்ற எம்பி மாரும் அடுத்த பஸ்சில் பயணம் வெளினாடு; அமிருக்கு ஒரு நப்பாசை சிலவேளை இந்த ஆயுத போராட்டத்துக்கு பயந்தோ அல்லது இந்திராவின் வற்புறுதலாலோ சிலவேளை ஈழம் கிடைத்து விட்டால் என்ன செய்வது ;அதனால் இந்தியாவில் இந்தியாவின் செலவில் வாழ்ந்தார் என்பது பலருக்கும் தெரியும்; இதில் லோகேஸ்வரன் உன்மையிம் வேறுபட்டவர் அவரால் பல ஏழைகள் மாணவர்கள் உதவி பெற்றனர் என்பதை மறுக்க முடியாது: எத்தனையோ தவறுகளை அவர்கள் (அமிர் குழு) விட்டிருந்தாலும் அவர்கள் இழப்பு தமிழர் பிரச்சனையை சர்வதேசத்துக்கு எடுத்து செல்ல முடியாமல் போனதுக்கு காரணம்; எந்த நாட்டு அரசியல் தலைவர்களுடனும் அரசியல்நாகரிகமாக பேச தெரிந்தவர்கள்; அமிர் என்ன காரனத்துக்காக சுந்தரத்தின் மீது பகை கொண்டாரோ; அதே காரணம் தான் புலி புலி அமிர் மீது பகை கொல்ல காரணம்; எல்லாமே பதவிதான் பல்லியின் இந்த விமர்சனம் அமிர்மீது கொண்ட பகையோ பாசமோ அல்ல: எம்மினத்தை அனாதைகளாக அகதிகளாக ஆக்கிய அதுக்கு காரனமானவர்கள் மீதுள்ள எரிச்சல் இவர்களை பல்லி துரோகிகள் என வாதிட இல்லை ஆனால் தமிழின தியாகிகள் அல்ல அல்ல அல்ல;

    Reply
  • Kulan
    Kulan

    இங்கே பல்லி சொன்ன விடயங்கள் பல என்னை மருவிப்போனவைதான். //அதில் வண்ணை; திசை, பாலு; யோகராசா என பட்டியல் நீளுகிறது// அவர்களும் என்னால் அறியப்பட்டவர்கள். சுந்தரத்துக்கும் அமிருக்கும் இருந்த பகை எனக்குத் தெரியாது. ஆனால் சுந்தரம் சுடப்பட்டது புலிப்பிளவு என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். புளொட்டின் அபரீத வளர்ச்சியை பொறுக்க முடியாது பிரபா அலைந்ததை அறிவேன். சுந்தரத்தைச் சுட்டதற்குக் காரணம் கேட்டபோது உமா தன்னாலே தான் அழிவார். சுந்தரம் அப்படியல்ல என்று கூறியது என்காதுக்கு வந்தது. மேலும் பல்லி செல்வதுபோல் சுந்தரம் திறமைசாலியாக இருந்தபோதிலும் அவர் அதை என்று வெளிக்காட்டியது இல்லை. அடக்கம் என்பதற்கு நான் வரவு இலக்கணம் சொல்வேனானால் அது சுந்தரம் மட்டும்தான்.

    உமா இளைஞர்பேரவையின் கொழும்புக்கிளைக்குப் பொறுப்பாக இருந்போது சந்ததி வடக்குக் கிழக்குகளில் தான் நிற்பார். ஆரம்பத்தில் உமாவுக்கும் சந்ததிக்கும் தொடர்பெதுவும் இருந்ததில்லை. ஆரம்பத்திலேயே சந்ததி அமிருடன் மிரண்டு பிடிப்பது வளக்கம். வட்டுக்கோட்டையில் கலைநகர் வீதியில் வசித்த சில ஏழைக்குடும்பத்தினருக்கு வேலைவாய்ப்புக்கு அமிர் வசதி செய்தார். பெயர் குறிப்பிட விரும்பவில்லை. நானறிந்த மட்டில் கூடுதலாக நடுத்தரவகுப்பினரே அமிரின் உதவியைப் பெற்றார்கள். எனக்கும் அமிர் மேல் மட்டுமல்ல கூட்டணிமேலும் மிக மோசமான கண்டனங்கள் இருந்தன. ஆனால் இவர்களை நல்லவராக்கி விட்டார்களே என் ஆயுதம் தூக்கிய நண்பர்களும் தோழர்களும். அமிரின் தலைக்கனமும் அடங்காத்தனமும் கட்சியின் உள்ளும் புறமும் பல எதிரிகளை உருவாக்கியது.

    யூரியூப்பில் பிரபாகரனிடம் கூட்டணியுடன் முரண்பட்டதற்கான காரணத்தைச் சொன்னார்: பொதுத்தேர்தலிலும் ஈழக்கோரிக்கை மாநகரசபை தேர்தலிலும் அதேதான். இங்கே அரசியல் காரணங்கள் சரியாக வைக்கப்படவில்லை. பல்லியின் தரவுகளை வைத்து நிறுவ வெளிக்கிட்டால்: சுந்தரத்தைச் சுட்டது புலிகள். காரணம் புலியுடைவு. இதற்கான திட்டம் அமிர்வீட்டில் போடப்பட்டிருந்தால் அமிருக்கு பிரபாவுக்கும் மிக மிக நெருங்கிய தொடர்பு இருந்திருக்க வேண்டும். சுந்தரம் சுடப்பட்டதால் பிரபா அமிருடன் முரண்பட்டு ஒரு த.கூ அரசியல் பொதுக்கூட்டத்தில் காரில் வந்து வானைநோக்கிச் சுட்டுவிட்டு மறைந்தார்கள். இதன் பின்புதான் சுந்தரம் சுடப்பட்டார் என்று நினைக்கிறேன். காலப்பகுதிகள் நினைவில்லை. கொலை செய்வது எப்படித்தவறானதோ அதேயளவு தவறு கொலைசெய்ய உடன்படுவதும் தூண்டுவதும். நிச்சயமாக எனக்குத் தெரியாத ஒன்றை நான் சரியென்று வாதாட விரும்பவில்லை. ஆனால் பிழையான ஒருவரின் தலையில் பழி விழுந்துவிடக்கூடாது என்று பார்க்கிறேன். அமிர்தலிங்கத்தின் மேல் எனக்கு வேறு வேறு விடயங்களில் முரண்பாடுகள் உண்டு இதனால்தான் நாம் பிரிந்து விடுதலை இயக்கம் என்று போனோம். உ.ம்: ஈழம் ஈழம் என்றும் துப்பாக்கியை விடத் தூள்பறக்க பேசி இளைஞர்களைத் உசுப்பி விட்டு பின் அவர்களைச் சரியாக வழிநடத்தாதது முக்கியமாக அமிரினதும் த.கூ பொறுப்பு. இந்த வரலாற்றுத் தவறுதான் எம்மையும் எம்மினத்தையும் இன்நிலைக்குக் கொணர்ந்தது என்பதை வரலாற்று வல்லுணர்கள் அறிவர்.

    Reply
  • palli.
    palli.

    நன்றி குலன் நாம் ஒரே கருத்தில்தான் இருக்கிறோம் ஆனால் பாதைதான் வேறு; ஆக மக்களை நேசிக்கும் யாரும் தவறானவர்களை நேசிக்க முடியாது என்பதுக்கு உங்களது கட்டுரையும் பல்லியின் பின்னோட்டமும் ஒரு எடுத்துகாட்டு; ஒரு கருத்தாளனின் வெற்றியே கருத்துகளம் முடிந்த பின் நட்பாய் இருப்பதுதான் என எங்கோ படித்த நினைவு; அந்த வகையில் பல்லி ஒரு கருதாளனாக குலனுடன் நட்ப்பாகவே இருக்க விரும்புகிறேன்;

    Reply
  • Kulan
    Kulan

    நன்றி பல்லி: கருந்துக்கள் கருத்துக்களுடன் மோதுவது என்றும் ஆரோக்கியமானதுதான். நான் பிடித்த முயலுக்கு 3கால் என்றில்லாது சரியெனப்படுவதை ஏற்றுக் கொள்வதும் ஒருவகையில் வீரம்தான். இப்படியான கருத்துப்பரிமாற்றங்கள் இயக்கங்களிடையேயும் புலிகளினுள்ளேயும் வெளியேயும் இருந்திருந்தால் நாம் எம்மக்கள் இப்படியொரு நிலையைத் சந்தித்திருக்க மாட்டார்கள். கண்ணகியா மாதவியா கற்பில் சிறந்தவர்கள் என்றும் இராமனா இராவணனா என்றும் விவாதித்தார்களே தவிர அரசியா? ஆயுதமா? மக்களா? கெறில்லாவா? யார்தான் விவாதிக்க விட்டார்கள். கருத்தைச் சொல்வதே குற்றமானபோது கருத்துக்களம்எங்கே? பல்லியவர்களே! நண்பர்களாக இன்றுபோல் விவாதிப்போம் சரியெனப்பட்டால் ஏற்போம் பிழையெனப்பட்டதைத் திருந்துவோம். இது என்றும் எல்லோருக்கும் ஆரோக்கியமானதே. மீண்டும் நன்றிகள்

    Reply
  • மாயா
    மாயா

    அமிர் பல வேளைகளில் நரித்தனத்தைக் காட்டியவர். அரசியல் சாணக்கியம் மற்றும் திறமை அவரிடம் இருந்தாலும் , பலரது பூசல்களுக்கு அமிர் காரணம். சென்னையில் வாழ்ந்த காலத்தில் எப்படி வாழ்ந்தார். அவர் யாரை வளர்க்க முயன்றார் என்பது பலரும் அறிந்ததே. தன் மகன் காண்டீபனை வைத்தே இயக்கம் ஒன்றை ஆரம்பிக்கும் அளவுக்கு சுயநலவாதியாக காணப்பட்டார். அமிரின் மனைவி மங்கயர்கரசியின் பேச்சுகள் கூட ……………… மக்களை இனவாதமாக உசுப்பேத்திய பேச்சுக்களே.

    தந்தை செல்வாவுக்கு பின்னர் செ.இராசதுரை அக் கட்சியின் தலைமைக்கு வர வேண்டும் எனும் நிலையில் காசி ஆனந்தனை இடைச் சொருகி ஒரு உடைவை ஏற்படுத்தினார். இராசதுரையை இல்லாமலே பண்ணினார் அமிர்.

    தந்தை செல்வாவின் மரண நிகழ்வில் செ.இராசதுரைக்கு பேசவிடாது தடுக்க அமிர் முயன்றார். அதையும் மீறிய சலசலப்புகள் உண்டான போது இராசதுரைக்கு 3 நிமிடங்கள் பேச அமிர் அனுமதித்தார். மேடையில் இரங்கல் உரை நிகழ்த்திய இராசதுரை “30 வருடம் என் தலைவனோடு வாழ்ந்த எனக்கு , என் தலைவனைப் பற்றி பேச எனக்கு 3 நிமிடங்களா?…..” என கணீர் குரலில் அழகு தமிழில் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கினார். அமிர் போன்றவர்கள் அன்றைய இளையோரை தவறான வழியில் செல்ல ஊக்கப்படுத்தினார்கள்.

    Reply
  • Kulan
    Kulan

    நிச்சயம் மாயா. நீங்கள் சொன்னது அவ்வளவும் உண்மை. எனக்கும் இப்படியான பல படுமோசமான விமர்சனங்கள் அமிர் மேல் உண்டு. தாங்கள் வளர்த்த இளைஞர்களே தமக்கு ஆபத்தாக மாறும் போது தன்மகனைத் தனக்குப் பாதுகாப்பாக துனைத்தளபதி உருவாக்க முயன்றார். இராசதுரை விடயத்தில் இராசதுரையிடன் சில பிழைகள் இருந்தபோதும் இதை அமிர் இராசதுரையுடன் ஒத்துமேவி உட்பூசல்கள் தவிர்த்துச் செய்திருக்கலாம். காசியானந்தனைச் செருகியது ஒரு நல்ல தலைவனுக்கு அழகில்லை. இதை மற்றைய மத்திய செயற்குழு உறுப்பினர்களும் ஒத்துப்போனதைதான் விசனமானது. இராசதுரையிடன் கட்டியாழும் திறன் (அட்மினிஸ்ரேசன் பவர்) இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் செயற்குழு அதை சிறந்த முறையில் அணுகி முரண்பாடுகளைத் தவிர்த்திருக்கலாம். சந்ததி; சேயோன் போன்றவர்களை இளைஞர் பேரவைக்குள் கொண்டுவந்த அமிர் பின் அவர்களாலேயே அவமானப்பட்டார். காரணம் அமிரின் செயல்கள்தான் அதற்குக் காரணம்.

    Reply