ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்று ஆர ம்பிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்கு முன்னர் அப்பகுதி வாக்காளர்களு க்கு தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொடுப்பதற்கான துரித நடவடிக்கையை உள்நாட்டு நிருவாக அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இதற்கிணங்க ஆட்பதிவுத் திணைக்களம் பதுளை மாவட்டத்தில் பல்வேறு பகுதிக ளிலும் நடமாடும் சேவைகளை நடத்தி தேசிய அடையாள அட்டைகளை வழங்கத் தீர்மானித்துள்ளது.உள்நாட்டு நிருவாக அமைச்சரான பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் பணிப்பின் பேரில் ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் ஏ. பீ. தர்மதாச இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இதன்படி நேற்று 17ம் திகதி முதல் எதிர்வரும் 21ம் திகதி வரை பதுளை மாவட்டத்தின் பத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்படுகிறது. நேற்று ஹல்துமுல்லை, ஹாலிஎல பிரதசங்களில் நடமாடும் சேவை நடைபெற் றதுடன், 18ம் திகதி அப்புத்தளை, வெலி மடையிலும் 19ம் திகதி ஊவா பரணகம, பண்டாரவளையிலும் 20ம் திகதி லுணு கலை, சொரணாதொட்டவிலும் 21ம் திகதி பதுளை மற்றும் கந்தகெட்டிய பிரதேசங்க ளிலும் இந்த நடமாடும் சேவை நடத்தப்ப டவுள்ளது.
ஊவா மாகாணத்தின் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளிலும் 2008ம் ஆண்டு தேர் தல் இடாப்பில் பெயர் உள்ளடக்கப்பட்டு, இதுவரை தேசிய அடையாள அட்டைக ளைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் மற்றும் அடையாள அட்டை தொலைந்தவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளு மாறு ஆட்பதிவுத் திணைக்கள ஆணையாளர் தெரிவிக்கின்றார்.இதேவேளை; ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று ஆரம்பமாகியதுடன், எதிர்வரும் 24ம் திகதி வேட்புமனுத் தாக்கல் நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.