தவிபு தலைவர் பிரபாகரன் உண்மையிலேயே வீர மரணம் எய்தி விட்டார். : விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை

Pirabakaran V LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் உண்மையிலேயே வீரமரணம் அடைந்துவிட்டதாக அவ்வமைப்பின் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ள அறிக்கையில் தலைவர் வே பிரபாகரன் சரணடையவோ கைது செய்யப்படவோ இல்லை என்றும் சிறிலங்காப் படையினருடனான மோதலிலே வீரச்சாவு அடைந்ததாகவும் வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அறிவழகன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் குமரன் பத்மநாதன் தலைவர் வே பிரபாகரன் வீரமரணமடைந்தாக வெளியிட்ட அறிக்கைக்கு மாறாக இவர் மே 22ல் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் ‘தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடனும் நலமாகவும் இருக்கிறார்’ என்று தெரிவித்திருந்தார். ஆனால் அதற்காக வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் தற்போது மன்னிப்புக் கேட்டு உள்ளார்.

பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தியுள்ள வெளியகப் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் க அறிவழகன் அவருடைய மரணம் என்று நிகழ்ந்தது என்பதை குறிப்பிட்டு இருக்கவில்லை. மே 18 காலையே இவர் மரணமடைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மரணச் செய்தியை தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச இணைப்பாளர் கெ பத்மநாதன் ஆரம்பத்தில் மறுத்தாலும் அதனை பின்னர் உறுதிப்படுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக கெ பத்மநாதன் தேசம்நெற்ற்குத் தெரிவிக்கையில் விடுதலைப் புலிகளின் சர்வதேசப் பிரிவில் இருந்த சிலர் தலைவரின் மரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதாகக் கூறினார். யூன் 14ல் தேசம்நெற்றுக்குத் அவர் மேலும் தெரிவிக்கையில் அவர்கள் ஒவ்வொரு திகதிகளைக் கூறி இழுத்தடித்ததாகவும் ஆனால் தாயகத்தில் உள்ள போராளிகளும் திருமதி அடேல் பாலசிங்கம் அவர்களும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து உடனடியாக தலைவரின் வீர மரணச் செய்தியை அறிவித்தாகத் தெரிவித்தார்.

இச்செய்தியை ஜிரிவி வெளியிட்டதற்காக அதன் நிர்வாகிகளுக்கு பல கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அச்செய்தி நீக்கப்பட்டது. அச்செய்தியை வெளியிட்ட போது கெ பத்மநாதன் ஒருவாரத்தை தேசிய நினைவஞ்சலியாகக் கடைப்பிடிக்கும்படியும் கேட்டிருந்தார். அவ்வஞ்சலியும் நடைபெற்றிருக்கவில்லை.

30 வருட போராட்டத்தை முன்னெடுத்த உலகின் பலபாகங்களிலும் வியாபித்திருந்த ஒரு செல்வந்த இயக்கத்தின் தலைவர் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்துவதற்குள்ளேயே இவ்வியக்கத்தின் உட்பூசல்களும் அதிகாரப் போட்டிகளும் வெளிப்பட்டு உள்ளது. வெளியகப் புலனாய்வுத்துறையும் சர்வதேச இணைப்பாளரும் புலிகளின் தலைவர் வீரமரணம் அடைந்ததை உறுதிப்படுத்திய போதிலும் சர்வதேசப் பிரிவிற்குப் பொறுப்பாக இருக்கும் நெடியவன் என்றழைக்கப்படும் பேரின்பநாயகம் சிவபரன் பிரிவு இது பற்றி இன்னமும் மெளனமாகவே உள்ளனர். இவர்களிடமே சர்வதேச ரீதியில் திரட்டப்பட்ட நிதியும் ஊடகங்களும் கைவசமுள்ளதாகத் தெரியவருகிறது.

Pirabhakaran_Jothidamஇந்த சர்வதேசப் பிரிவு பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்தும் போது அவர்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள அசையும் அசையாச் சொத்துக்கள் மற்றும் நிதி பற்றிய சர்ச்சைகள் ஏற்படும் என்பதால் அவர்கள் பிரபா இன்னமும் உயிருடன் உள்ளார் என இந்திய அரசியல்வாதிகளுடாக தெரிவித்து வருகின்றனர். இந்த தமிழகத் தலைவர்களே பிரபாவின் மரணத்தை உறுதிப்படுத்திய, இறுதிவரை பிரபாவுடன் தொடர்பில் இருந்த கெ பத்மநாதனை தேசியத் துரோகி எனப் பட்டம் சூட்டினர். தற்போது பிரபாகரனின் சாதகப்படி அவர் 80 வயதுவரை நலமுடன் இருப்பார் என்றும் செய்தி வெளியிட்டுக் கொண்டு உள்ளனர். 2010 பிரபாவிற்குப் பொற்காலம் என்றும் இந்த ஜோதிடச் செய்தி தெரிவிக்கிறது.

பல்வேறு அரசியல் முரண்பாடுகள் விமர்சனங்களுக்கு உட்பட்டிருந்த போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை வழிநடத்தி அதில் தனக்கிருந்த நம்பிக்கையில் தன்னையும் தனது மனைவி பிள்ளைகளையும் முழுவதுமாக இழந்த ஒரு போராளிக் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய குறைந்தபட்ச கெளரவத்தைக்கூட தமிழீழ விடுதலைப் புலிகள் செய்ய மறுத்துள்ளனர்.

இன்னமும் பிரபாவின் மரணம் ஒரு கேலிக் கூத்தாக ஆக்கபட்டதற்குரிய பெரும்பான்மைப் பொறுப்பு நெடியவனின் தலைமையில் உள்ள சர்வதேச பிரிவையே சார்ந்துள்ளதாக முன்னாள் போராளிகள் பலரும் குற்றம்சாட்டுகின்றனர். நெடியவன் சர்வதேச விவகாரங்களைக் கவனிப்பதற்காக காலம்சென்ற புலிகளின் தலைவர் வே பிரபாகரனால் அனுப்பி வைக்கபட்டதாகவும் அப்போராளிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் பிரபாவின் இறுதி நாட்களில் அவருடன் ‘கெ பி அண்ணரே’ தொடர்பில் இருந்ததாகவும் அவருடைய தகவல்களே சரியானது என்றும் பெயர் குறிப்பிட விரும்பாத அப்போராளிகள் தேசம்நெற்றுக்குத் தெரிவிக்கின்றனர்.

தற்போது இவ்வறிக்கையை வெளியிட்டுள்ள வெளியக புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அறிவழகன் லண்டனில் வாழ்வதாக தேசம்நெற்றுக்கு தெரியவருகிறது.

._._._._._.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே:

வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை
18. 06. 2009

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம்

எம் பாசத்துக்குரிய தமிழ் பேசும் மக்களே!

எமது இயக்கத்தின் தலைவரும் பிரதம இராணுவத் தளபதியுமான தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் வீரச்சாவு அடைந்துவிட்டார் என்பதனை விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை இப்போது உறுதிப்படுத்தியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களைப் பாதுகாப்பான இடத்தை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் தொடர்பான இறுதி நேரச் சம்பவங்கள் பற்றிய தகவல்கள் அறிந்த – தற்போது பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ள – எமது புலனாய்வுப் போராளிகள் வேறு துறைப் போராளிகள் மற்றும் சிறிலங்கா படைத் துறையின் உயர் பீடத்துடன் தொடர்புடைய எமது தகவலாளர்கள் ஆகியோர் தலைவர் அவர்களது வீரச்சாவினை இப்போது உறுதிப்படுத்துகின்றனர்.

கடந்த மே மாதத்தின் நடுப் பகுதியில் – 15 (வெள்ளிகிழமை) முதல் 19 ஆம் திகதி (செவ்வாய்கிழமை) வரையான காலப் பகுதியில் வன்னி – முள்ளிவாய்க்கால் களப் பிரதேசத்திலிருந்து முரண்பட்ட பல தகவல்கள் வெளிவந்தபடி இருந்தன. சீரான தகவல் பரிமாற்ற வசதிகள் இருக்காமையாலும் அங்கிருந்து வெளியேறிய எமது புலனாய்வுப் பேராளிகள் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்று சேர முடியாமல் இருந்தமையாலும் அவர்களால் அனுப்பப்பட்ட பல தகவல்கள் சிதைவடைந்த நிலையிலேயே வெளியில் கிடைத்திருந்தன. அதனால் – அப்போது கிடைத்த தகவல்களைச் சீர்ப்படுத்தி எடுத்ததன் அடிப்படையில் – எமது அன்புக்குரிய தலைவர் அவர்கள் நலமாக இருப்பதாகக் கருதியே அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட நாம் மே மாதம் 22 ஆம் நாள் தீர்மானித்தோம்.

இதே வேளை – தலைவர் அவர்களது பாதுகாப்பான இருப்பு மற்றும் நகர்வுகள் தொடர்பாக – இறுதிவரை அவருடன் கூட இருந்த தளபதிகளால் பல தகவல்கள் வழங்கப்பட்டு வந்தன. இவற்றின் அடிப்படையிலேயே – எமது இயக்கத்தின் அனைத்துலக உறவுத் துறையின் இயக்குனர் திரு. செல்வராசா பத்மநாதன் அவர்களும் – ஆரம்பத்தில் – இரு வேறு முரண்பட்ட செய்திகளைத் தரும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டிருந்தார் என்பதையும் எம்மால் உணர முடிகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது அந்த மாபெரும் தியாகம் தொடர்பான உறுதிப்படுத்தப்படாத ஒரு செய்தியை 22 ஆம் திகதி வெளியிட்டமைக்காக வருத்தப்படுகின்ற அதே வேளையில் அவ்வாறான ஒரு செய்தியை வெளியிட்டு குழப்பகரமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தியதற்காக எமது அன்புக்குரிய மக்களிடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை மன்னிப்புக் கோருகின்றது.

எமது தேசியத் தலைவரின் வீரச்சாவு தொடர்பாக பல்வேறு தரப்பினர் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வந்தனர். அவர் கைது செய்யப்பட்டதாகவும் சரண் அடைந்ததாகவும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின் கொல்லப்பட்டதாகவும் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும் பல்வேறு மாறுபட்ட செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் – எந்த செய்தியினையும் தகவலையும் முழுமையாக உறுதிப்படுத்தி வெளியிட வேண்டிய கடமை புலனாய்வுத்துறையினர் ஆகிய எமக்கு உண்டு. அதனடிப்படையில் – தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் சிறிலங்கா படையினருடன் போரிட்டே வீரகாவியம் ஆகினார் என்பதையும் நாம் மிகத் திடமாக உறுதிப்படுத்துகின்றோம்.

இப்போது தோன்றியுள்ள மிக உச்ச நெருக்கடியான கால கட்டத்தில் – எம் பெருந் தலைவர் அவர்கள் உருவாக்கி வளர்த்தெடுத்து நமது கைகளில் தந்து விட்டுச் சென்றுள்ள எமது விடுதலைப் போராட்டத்தை – அதே உறுதிப்பாட்டுடனும் அதே கட்டுக்கோப்புடனும் அதே ஒருங்கிணைவுடனும் நாங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் எமது இறுதி இலட்சியத்தை நோக்கிய எமது போராட்டத்தின் அடுத்த படிநிலையாக – தற்போது உருவாக்கப்படவுள்ள ‘நாடு கடந்த தமிழீழ அரசு’ அமைவதற்கு நாம் எல்லோரும் சேர்ந்து பணியாற்றுவதே எம் முன்னால் உள்ள கடமையாகும்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த எமது இயக்கத்தின் போராளிகள் தளபதிகளுக்கும் வீரவணக்கத்தைச் செலுத்துவதுடன் இந்தப் போரில் படுகொலை செய்யப்பட்ட எமது பாசத்துக்குரிய மக்களுக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தனது அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகின்றது.

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

கதிர்காமத்தம்பி அறிவழகன்
பொறுப்பாளர்
வெளியகப் பணிப் பிரிவு
புலனாய்வுத்துறை

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

31 Comments

  • IPKF
    IPKF

    முகமூடி போட்டு தலையாட்ட ஆள் தேவை
    அரிசி பருப்பு வழங்கப்படும்.

    Reply
  • Raj
    Raj

    ஓ….இவ்வளவுதானா புலிகளின் புலனாகாத ஆய்வு? நாங்கள் எப்போதோ உறுதிப்படுத்தி விட்டதனை நீங்கள் கண்டுபிடிக்க 2மாதங்கள் தேவையோ?இப்படியான புலனாய்வால்தான் இந்த வெற்றியோ?இனியும் உங்கள் புலனாய்வையும் போராட்டத்தையும் யாரு கேட்டார்கள்.எவராவது தமிழனுக்கென்று ஏதாவது செய்ய கிளம்பமுன் குறிப்பாக நமது மண்ணிலுள்ள மக்களின் அனுமதியின்றி கணக்குப்போட்டீர்களோ ஐயகோ மீண்டும் மண்கவ்வல் நிச்சயம்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    அட… அட… உங்க “புலன்”மாய்வுப் பிரிவின் வேகம் புல்லரிக்க வைக்கிறது. என்னா வேகம், என்னா புத்திசாலித்தனம். அதனால்த் தான் உங்க பெயரும் அறிவழகனோ?? அப்ப எனி பொட்டம்மான் பற்றிய அறிக்கையையும், இதே வேகத்தோடு செயற்பட்டு அடுத்த வருசம் விடுவீங்களோ??

    Reply
  • Tamil
    Tamil

    பிரிந்தவர் மீண்டும் கூடிவிட்டார்கள்!
    சரி இனியென்ன உண்டியல் குலுக்கலை ஆரம்பிக்கவேண்டியது தானே!
    மாவீரர் தினம், தழிழ்ப் பாடசாலைகள், விளையாட்டு கழகங்கள், கோவில்கள் இசை விழாக்கள், மீண்டும் களை கட்ட ஆரம்பிக்கும்.
    ஏமாறுபவர்கள் இருக்கும் வரை இது தொடரும்…!

    Reply
  • palli.
    palli.

    அப்படியாயின் உங்கள் துறை தலைவர் பொட்டர் எங்கே.? அவர் இருக்கும் போது எதுக்காக KP தலைமை பதவி? இந்த புலனாய்வு துறைக்கு இப்போ யார் பொறுப்பு? இப்படி பல கேள்விகளுக்கு இந்த அறிக்கையை விட்டவர் பதிலக்கவேண்டும்; ஆனாலும் எல்லாமே சிரிப்புதான்;

    Reply
  • சட்டம் பிள்ளை
    சட்டம் பிள்ளை

    விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை தமிழீழத் தேசியத் தலைவரின் 31வது நாள் அந்தியேட்டிக் கிரியையைத்தான் இன்று ஞாபகப் படுத்தியுள்ளது போலும்

    Reply
  • Sellam
    Sellam

    “தேசியத் தலைவர் அவர்கள் சரணடையவோ அல்லது கைது செய்யப்படவோ இல்லை என்பதையும் அவர் இலங்கை படையினருடன் போரிட்டே மரணம் ஆகினார்” மார்பில் காயம் இருந்தால் வீர மரணம் என காவியங்கள் சொல்லுது. புற மண்டையில் அடி வாங்கி செத்தா அது வீர காவியமா?

    Reply
  • BC
    BC

    வரும் கார்த்திகை 27ம் திகதி எதிர்காலத்தின் விதியை நிர்ணயிக்கப் போகின்ற தலைவரின் உரையை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தன்மான தமிழர்கள் என்ன செய்ய போகிறார்கள்? அவர்களுடன் சர்வதேச சமூகமும் காத்திருந்ததாம்.

    Reply
  • Vanasana
    Vanasana

    good food, even very good food for LTTE experts.

    Reply
  • போராளி
    போராளி

    தமிழீழம் என்பது நடைமுறைச்சாத்தியமா இல்லையா என்பது ஒருபுறமிருக்க. தனதுயிரையும் மனைவி பிள்ளைகளின் உயிரையும் தமிழீழக் கனவுக்குக்காவு கொடுத்த ஒரு தனிப்பெரும் தலைவனை…………….. தப்பியோடப் பலசந்தர்ப்பங்கள் கிடைத்தபோதும் அதனைப் பயன்படுத்தாமல் தான் கொண்ட கொள்கைவிட்டு கடைசிவரை விலைபோகாமல் வீரமணமடைந்த தலைவனுக்கு எனது வீரவணக்கங்கள்.

    Reply
  • Balachandran Sivaguru
    Balachandran Sivaguru

    தேசியத் தலைவருக்கு பாலூற்றிக் கதையை முடிக்க விரும்பும் சிலருக்கு….

    தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு விட்டதாக சிறிலங்கா அரசு அறிவித்த நிலையிலும், பல புகைப்படங்கள், வீடியோ காட்சிகள் போன்ற ஆதாரங்களை வெளியிட்ட நிலையிலும் தமிழீழ உணர்வாளர்கள் அந்தச் செய்தியை முற்றாக நிராகரித்தனர்.

    தமிழீழ மக்களின் இந்த நிலைப்பாடு அவர்களது ஆத்மார்ந்த நம்பிக்கை சார்ந்தது. தேசியத் தலைவர் அவர்கள்மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த அளவற்ற அன்பும், அவர் குறித்த பிரமிப்பும் தமிழீழம் மலரும்வரை தேசியத் தலைவர் அவர்களை எந்த சக்தியும் எதுவும் செய்ய முடியாது என்ற மன உறுதியைத் தமிழ் மக்களது மனங்களில் நிறைத்து வைத்துள்ளது.

    இந்த நம்பிக்கை தவறிப் போனதாகவோ அல்லது பொய்த்துப் போனதாகவோ கூட இருந்தாலும், தமிழ் மக்களின் அந்த நம்பிக்கையே அவர்களது பயணத்தை நெறிப்படுத்தும் சக்தியாக உள்ளது என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. தமிழீழ தேசியத் தலைவர் மீதான நம்பிக்கையும் அவர் உருவாக்கித் தந்த தமிழீழத் தேசியக் கொடியும் வாழும் சக மனிதர்களை விட உயர்ந்தவையாகவும், இலட்சிய நெருப்பை தமிழ் மக்கள் மனங்களில் அணையாமல் காப்பவையாகவும் உள்ளன.

    அந்த நம்பிக்கை மட்டுமே அவர் குறித்த எந்தத் தகவல்களையும் ஏற்க மறுக்கும் நெஞ்சுரத்தையும் ஏன் வக்கிரத்தையும் கூட தமிழ் மக்களிடம் உருவாக்கியுள்ளது. அந்த நம்பிக்கையே தேசியத் தலைவரை ஆழமாக நேசிக்கும் அனைவரையும் தொடர்ந்து அவரது பாதையில் பயணிக்க வைக்கும் மந்திர சக்தியாக உள்ளது. அந்த நம்பிக்கை மட்டுமே இத்தனை அழிவுகளையும் தாங்கி அதனை ஜீரணித்துவிட்டு முன்னே செல்லும் தைரியத்தை அவர்களுக்கு வழங்கியுள்ளது. அந்த அதீத நம்பிக்கையே இன்றும் தமிழீழ மக்களில் பலரை மனச் சிதைவுகளிலிருந்தும், எதிர்காலம் குறித்த அச்சத்திலுமிருந்தும் அவர்களை விடுவிக்க உதவுகின்றது.

    தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுக்குப் பால் வார்க்க சிங்கள எதிரிகளை விடவும் நம்மவர் சிலர் அதீத அக்கறை கொள்வது புரியப்படாத விடயமாகவே உள்ளது. தெரிந்தெடுத்த சில வலைத் தளங்கள் ஊடாகத் தமிழ் மக்களது மன உறுதியையும் நம்பிக்கையையும் தகர்ப்பதில் இவர்கள் காட்டும் தீவிரம் இவர்கள் மீதான சந்தேகங்களை மேன் மேலும் வலுப்படுத்துவதாகவே உள்ளது.

    தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களது மரணம் குறித்த திரு. செல்வராஜா பத்மநாதன் அவர்களது செய்தியை படு அவசரமாகத் தமிழ் தக்கள் மத்தியில் கொண்டு செல்ல முற்பட்ட GTV தொடர்ச்சியாக தமிழ் மக்கள் கொடுத்த புறக்கணிப்பு அச்சுறுத்தல் காரணமாக அந்த மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகியது. அதே செய்தியை தீபம், ஐபிசி போன்ற ஊடகங்கள் முற்றாக நிராகரித்திருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

    தேசியத் தலைவர் அவர்களது மறைவுச் செய்தியை மக்கள் மனங்களில் விதைத்து, தமிழீழ மக்கள் மத்தியில் தம்மைத் தலைவர்களாக உருவாக்க முயல்பவர்கள் முதலில் தமிழீழ மக்கள் மனங்களில் எழுந்துள்ள கேள்விகளுக்கு விடை கொடுத்துத் தெளிவை ஏற்படுத்த வேண்டும். தமிழீழ விடுதலைப் போரின் இறுதி நாட்களில் தலைமையுடன் நேரடித் தொடர்பில் இருந்ததாகவும், அருகில் இருந்ததாகவும் நிரூபிப்பவர்கள் மத்தியில் தமிழீழ மக்கள் சார்பாக சில கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது அவசியமாகவே உள்ளது.

    1) தமிழீழ விடுதலைப் போரின் இறுதி நாட்களில் நடந்தவை அனைத்தும் உங்களுக்குத் தெரியுமா?

    2) அந்தப் போரின் உக்கிரத்திலிருந்து அங்கிருந்த மக்களையும் போராளிகளையும் தளபதிகளையும் தேசியத் தலைவரையும் காப்பாற்ற என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்?

    3) அப்படி நீங்கள் எடுத்த நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்துவிட்டதாக நீங்கள் கருதினால் உங்கள் திறமை மீது நாங்கள் நம்பிக்கை கொள்வதற்கு ஏதாவது கடுகளவு காரணமாவது உள்ளதா?

    4) எதிரியின் கொடூரத்தை அறிந்து கொள்ள முடியாமல் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் ஆகியோரின் தலைமையில் வெள்ளைக் கொடியுடன் எதிரியிடமே சரணடையும் கீழ் நிலைக்கு ஆலோசனை வழங்கியதோடல்லாமல் அந்த எதிரிகள் கையாலே அவமானகரமான சாவுக்கும் காரணமான உங்களை மேலும் நம்புவதற்கு நீங்கள் கூறக்கூடிய உங்கள் திறமை எது?

    5) தமிழீழத் தேசியத் தலைவரின் உத்தரவோ அங்கீகாரமோ இன்றி விடுதலைப் புலிகளின் தபால் தலையில் அறிக்கைகளும் மரண அறிவித்தல்களும் விடுவதற்கான அதிகாரத்தை யார் உங்களுக்கு வழங்கியது?

    9) தமிழீழ மக்களையோ மண்ணையோ குறைந்தது தமிழீழ விடுதலைப் போரையோ அந்த மண்ணில் தக்க வைக்க முடியாமல் போன புவனாய்வுத் துறை இனி வரும் காலங்களில் எதை வெட்டி வீழ்த்தப் போவதற்காக அறிக்கைகள் மூலம் புலம்பெயர் தமிழீழ மக்களைக் குழப்புகின்றது?

    10) தலைவர்கள் மக்கள் மத்தியிலிருந்து, மக்களது விருப்பங்களோடு மட்டுமே உருவாக முடியும். தனி நபர்கள் எவரும் சுயம்பாக உருவாகி வந்ததாகப் புலம்புவதை புலம்பெயர் தமிழீழ மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற உங்கள் மனப் பிரமைக்காக எங்கள் தலைவரை இன்னமும் எத்தனை தடவை கொல்லப் போகின்றீர்கள்?

    இந்தக் கேள்விகள் தங்கள் மீதான காழ்ப்புணர்ச்சியால் எழுந்தவை அல்ல. மாறாக, தமிழீழ மக்களது எதிர்காலம் குறித்த உண்மையான அச்சம் காரணமாக எழுந்தவை. இவற்றைத் தீர்த்து வைப்பதன் மூலமாக ஒருவேளை உங்களுடன் இணைந்து நாங்களும் பயணிக்கலாம் என்ற நப்பாசையில் எழுந்தவையாகவும் கொள்ளலாம்.

    Reply
  • rohan
    rohan

    இப்படியே வக்கணை பேசிக் காலத்தைக் கடத்துவோம். முகாம்களில் அடைபட்டுள்ள மூன்று இலட்சம் தமிழர்களின் சுதந்திர வாழ்வு, வதைமுகாம்களில் உள்ள ப்ல்லாயிரம் புலி முத்திரை குத்தப் பட்ட இளைஞர்களின் பரிதாப நிலைமை, தமிழர்கள் நாட்டில் உரிமையுடன் வாழ்வதற்கான நிலைமை இவை பற்றியெல்லம் எவர் கவலைப் பட்டாரகள்?

    இதனை யாராவது சுட்டிக் காட்டினால், நாம் வெளியில் சொல்லாமல் செய்யும் சேவைகளினால் நாட்டில் பாலும் தேனும் ஒடுகிறது என்று ஒரு பொய்யை இலகுவாக இழுத்து விடலாம்.

    செத்த புலியின் பொ(ய்)ம்மைச் சடலத்தை இழுத்துக் கொண்டு திரிபவர்களுக்குத் தாம் ஏதோ பெரிய ஜாம்பவான்கள் என்றும் ஒரு நினைப்பு.

    Reply
  • santhanam
    santhanam

    பல்லியின் மனமாற்றத்திற்கான காரணம் கடவுளாக உங்களால் நீண்டகாலம் ஏமாற்ற முடியாத அல்லது இந்தசந்தர்ப்பத்தை பயன்படுத்தி சர்வதேச முட்டாள்களை முட்டாள் ஆக்குவதற்கா தமிழ்நெற்றுக்கும் ஆப்பு வைப்பதற்கா.ஆனால் தமிழ்மக்களிற்கு நன்மைபயக்குமாயின் இந்தவழியும் ஒரு ராயதந்???

    Reply
  • thurai
    thurai

    போராளி ஒருவனிற்கு உயிரை விட தன்மானமே பெரியதென்று வளர்த்து விட்ட தலைவர். தமிழரின் விடுதலையே தன் மூச்செனெ வருடா வருடம் முழக்கமிட்டவர். தமிழீழம்தான் காற்ரோடு போச்சு. 3 லட்சம் தமிழரை சிங்களவரின் காலில் போய் விழவிட்டவர்.

    இவர் என்றென்றும் வீடு வீடாக் தலைவர் கட்டளை கொடுங்கள் பணம் என்று மிரட்டி பணம் பறித்த அனைவரிற்குமே அழியாத தலவராக என்றுமிருப்பார்.

    இவரைப் பற்ரி சிந்திப்பதும், பேசுவதும், எழுதுவதும் தமிழரை மேலும் முட்டாள்களாக்கிக் கொண்டே போகும். இனிமேலாவது தேவையறிந்து செயற்படுவோம்.

    துரை

    Reply
  • palli.
    palli.

    சந்தானம் உன்மையில் பல்லி பல பேரை குழப்பியதை பல்லி பல பின்னோட்டத்தில் கண்டேன்; ஆனால் இன்று பல வருடத்துக்கு பின்பு தங்கள்
    பின்னோட்டம் பல்லிக்கு புரியவில்லை என்பதை விட பல்லி குளம்பி விட்டேன் என்பது தான் உன்மை;தயவு செய்து உங்கள் பின்னோட்டத்தை பல்லிக்கு புரியுமா போல் தரவும் நன்றி.

    Reply
  • amma
    amma

    சட்டம்பிள்ளை ஒன்றை விளங்கிக் கொள்ளுங்கோ புலனாய்வு எவ்வளவு கெட்டிக்காரரர் எண்டு தலைவர் செத்துப்பொட்டார் என்று 31ம்நாள் தான் தெரியம் இந்த புலாய்விற்கு இலங்கை இராணுவம் கிளி நொச்சி வருகிறது என்பதம் 31 நாள் கழிச்சுத்தான் தெரியவந்திரக்குமோ?

    Reply
  • yoganathan
    yoganathan

    தலைவர் முன்றாவது பிரிவாக படையினரிடம் சரணடைந்தவர்கிள் ஒருவர் என்பதம் இவர் கைத செய்ப்பட்டதும் பனாகொட இராணுவ முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது இதன்போது தனது மெபைல் போனில் படம் எடுத்த இராணுவ கப்டன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் ஆனால் இந்த மெபைல் போன் மெமொறி தற்போது ஒர மனித உரிமைகள் அமைப்பினால் வாங்கப்பட்டுவிட்டது இதை ஒழுங்கு செய்து கொடுத்த முஸ்லீம்நபரும் கைது செய்யப்பபட்டுள்ளார் தலைவரை மீள கொண்டுவந்து வன்னியில் மண்டையில் என்ன கழிமண்ணா என்று தேடியுள்ளனர் இவங்கை இராணுவம்.

    பலிகளின் புலனாய்வு உங்கட கட்டுக்கதைகளை எங்களுக்கு சொல்லாதேங்கோ தலைவர் போரிட்டு மடிந்தார் என்று.

    Reply
  • Rompa pala nedumarn
    Rompa pala nedumarn

    எம் தலைவன் சாகாவரம் பெற்றவன். கே.பி மற்றும் புலன் ஆப்பு எல்லாம் துரோகிகள். நானும் என் தளபதி வீரப்புயல் வைகோ, சீறும் சிஙகம் சீமான். புலனாய்வு புயல் ராமதசு, அரசியல் சிறுததை திறுமாவளவு மற்றும் பலரின் ஆக்கத்தில் ஏக்கத்தில் 5ஆம் ஈளப்போர் தொடஙக்வுள்ளோம். விரைவில் உலகம் எஙகும் உஙள் அபிமான நகரஙகளில் :உண்டியலுடன் உலா:

    அன்புடன்
    றொம்ப பள நெடுமாறன்

    Reply
  • msri
    msri

    பாலச்சந்திர சிவகுரு> “பிரபாகர புராணம்” பாடுகின்றார்! இதை உலகெலாம் பரவும்வகை செய்தல் லேண்டும்! பிரபாகரன் “இரண்டாவது மார்க்கண்டேயர்” அவருக்கு “தீர்க்க ஆயுள்சேநம”

    Reply
  • நண்பன்
    நண்பன்

    அடுத்த வேலையை பாருங்கோ…தலைவரா அப்படி யாராவது இருந்தினமோ?

    Reply
  • mmani
    mmani

    அறிவழகன்(அப்படி ஒருவர் இருந்தால்) மீண்டும் பொய் சொல்கிறார்.சரணடைந்து கொல்லப்பட்ட்திற்கு பெயர் வீர மரணமா? மகா துரோகி என்று வேண்டுமானால் அழைக்கலாம்.

    Reply
  • lavan
    lavan

    எல்லோருக்கும் துரோகி பட்டம் கொடுத்த மே த கு இன்று மகா துரோகி ஆகியுள்ளர்.

    Reply
  • பார்த்திபன்
    பார்த்திபன்

    பிரபாகரன் மரணம் தொடர்பாக மகிந்த சகோதரர்களிடம் கேட்டால், பதில் என்னவாக இருந்திருக்கும்??

    அது ஒரு துன்பியல் சம்பவம்.

    Reply
  • palli.
    palli.

    யார் இந்த பாலசந்திரன்??
    ஓஓ இவர்தான் அவரா??? அதுதானப்பா பாரிஸ் புலிகளின் தலமை ஆலோசகர்; அவராக இருந்தால் அவருக்கு பல விடயங்களை சொல்லலாம்; அல்லது அவரது பிரதியாக இருந்தால்;?? ஈழநாட்டின் பிழைப்பிலும் இந்த மகிந்தா மண்ணை அள்ளி போட்டு விட்டார்,

    Reply
  • thurai
    thurai

    விரைவில் பிரபாவின் நினைவுச்சின்னமைக்க உலகமெங்கும் புலிகள் புறப்படுவார்கள். பணம் கேட்க கதவைத் தட்டுவார்கள்.

    எங்கள் தலைவன் பிரபாகரன், நாங்கள் எல்லோரும் புலிகள் என்றவர்கள்தான் முன் வந்து பணம் கொடுத்து புலிகளின் பண வேட்டையைத் தடுக்க வேண்டும்.

    துரை

    Reply
  • SUDA
    SUDA

    வீர மரணமென்றால் “குறளிக் கட்டையால் மண்டையில் அடி வாங்கிச் சாவது அல்லது மண்டையில் கோடரியால் வெட்டு வாங்கிச் சாவுதல்” என்று எப்போது உங்களது அகராதியை மாற்றினீர்கள் புலன் ஆகாத பண்டங்காள்?.
    சகோதர இயக்கத்தவர்களையும் இனத்தவர்களையும் கொலை செய்வதற்கு “மண்டையில் போடுதல்” என்று உங்கள் கொலை அகராதியில் வகையறை செய்தவர்களல்லவா நீங்கள்?
    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். அதுதான் உங்கள் தலைவர் இன்று மண்டையில் போடப்பட்டுள்ளார். மனு நீதி வென்றுள்ளது! புலி நீதி தோற்றுள்ளது!!

    Reply
  • visuvan
    visuvan

    இந்த வைகாசி மாதம் ஒரு பொல்லாத மாதம்! அது தான் தலைவரும் மண்டையை போட்ட மாதம்! ஆ இந்த மே மாதம் பலிகொண்டு மற்ற தலைவர்களை வரிசைப்படுத்தினால்…

    மே 1 சிறீ லங்காவின் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசா
    மே 04 ரெலோ அமைப்பின் தலைவர் சிறீ சபாரத்தினம்
    மே 21 இந்திய முன்னை நாள் பிரதமர் ராஜீவ் காந்தி
    மே 17 சரோஜினி யோகேஸ்வரன் யாழ் மேயர்

    இவர்கள் அனைவரினதும் கொலைக்கு பொறுப்பான பிரபாகரன் கொல்லப்பட்டதும் இந்த மே மாதம் தான்!
    இந்த வினோதம் இத்துடன் நின்றுவிடவில்லை : பிரபாகரன் கொல்லப்பட்டது 19ம் திகதி அதிகாலை! ஈபிஆர்எல்எப்பின் தலைவர் பத்மநாபா கொல்லப்பட்டதும் 19ம் திகதி தான் ஆனால் மாதம் மட்டும் ஜுன்.

    Reply
  • Pottu Amman
    Pottu Amman

    He is living, he went into hiding with his family one month before the end of war, this massage of death is to cheat india and sonia, because they won’t rest until he is killed. we sprad false news that he is staying with us and directing the war to cheat Tamil people, he is owning 100 Houses in Lomdon , 200 corner shop. 50 nursing homes etc and he and his family is living like a king in palace and children went to private school, and pungudu thevar and valluveddithurayar are guarding as they run all business collected from the money of Tamils. Long live thalivar.

    Pottu Amman

    Reply
  • santhanam
    santhanam

    பல்லி புரியவில்லையா? தமிழ்மக்களின் தலைவிதியை தனிநபர்கள் தங்கள்கைகளில் எடுக்காது பார்த்துகொள்ளவேண்டியது மக்களின் அக்கறையாக இருக்கவேண்டும் மக்களின் தலைவன் மக்களுடன் தான் வாழவேண்டும் அறிவழகன் யார் என்பது பல்லிக்கு தெரியாதா? எல்லோருக்கும் பின்னோட்டம் விடும் நீங்கள் தமிழ்ஈழபோரட்டத்தின் சகலசக்திகளிற்கும் பின்னோட்டம் விடுகிறீர்கள் ஏன்இந்தஅறிவழகனிற்கு விடமுடியாதுள்ளது.

    Reply
  • palli.
    palli.

    அறிவழகனனோ அல்லது யாராக இருந்தாலும் தேசத்தில் வந்துவிட்டால் அவரது ஆசைகள் அபிலாசைகள் பூர்த்தி செய்ய பல்லியல்ல பல உன்மையான அறிவாளர்கள்; பல்லி எப்போது புள்ளி மட்டுமே வைப்பேன அதில் பலர் கோலமும் போடுகின்றனர் சிலரோ எ9 வீதியை விட பெரிய ரோட்டே போடுகின்றனர்; ஆனால் இந்த அறிவழகனைவிட இதுக்கு காரனமான சிலரை (தலமை) KP அவருக்கு தளபதிகளான இடைகாடு; தயா மோகன்; பாலசந்திரன்; பாஸ்கரன்; இப்படி பலபேரை புதுமுகங்களாக அம்பலபடுத்தி உள்ளேன்; லண்டனில் நடந்த ஆர்பாட்ட ஊர்வலத்தில் சில குளறி படிகள் (உள்வீட்டு சமாசாரம்)நடந்திருக்கிறது, யார் புலி தலைவன்? KP யா? அல்லது பிரபாகரனா என!

    இதில் வியாபாரிகள் அனைவரும் KP என முணுக பணம் கொடுத்த புண்ணாக்குகள் அது எப்படி எமக்கு தலைவன் அவனே அவரது மாவீரர் உரை கேட்ட பின்புதான் எதுவானாலும் என குளம்பி விட்டனராம்; இதனால் பாரிஸ் ஜேர்மன்; டென்மார்க் ;நோர்வே போன்ற நாடுகளில் போட்டி கூட்டங்கள் மிகவிரைவில் அரங்கேறும்; இதில் 05.07.09 அன்று பாரிஸில் நடக்க இருக்கும் ஆறுதல் ஆட்டம் நிகழ்வில் பல புலிகள் கலந்துகொள்ள வேண்டாம் என லாச்சப்பல் செய்தி; எது எப்படியோ கனடா KPயைதான் ஆதரிப்பதாக சொல்லுகிறது; ஆனால் சந்தானம் புலியின் சாபகேடு அதன் தலை யாராக இருந்தாலும் இருட்டு வாழ்க்கைதான்;பணத்தில் குறிதான் மக்களுக்கு ஆப்புதான்; சந்தானம் எம்ஜிஆர் இறந்தவுடன் அதிமுக கழகம் உடைந்து பல அணியாக செயல்பட்டது அப்போது எம்ஜிஆர்ந் மிக நல்ல நண்பரும் அந்த கழகத்தின் நம்பிக்கை நட்செத்திரமுமான அண்ணாவால் நடமாடும் பல்கலைகழகம் என பட்டம் சூட்டபட்டவரையே இந்த பிள்ளை ஜெலலிதா ஒரு பேட்டியில் சொன்னார் இவர்கள் எல்லாம் உதிர்ந்த முடியில் ஒன்று என; அதேபோல்தான் அறிவழகன் கதையும் இப்படி பல உதிர்ந்து கிறுக்கு பிடித்து ஏதோ சொல்லுகிறார்கள் ;எனக்கு தெரிந்த ஒரு மிகபெரிய பணக்காரனுக்கு பெயர் பிச்சைமுத்து அதேபோல் தான் அரிவழகன் சமாசாரமும்;

    Reply
  • indian
    indian

    Let us know when you going to have a rem day and meeting- the money you collected for this struggle and other investment in the world what will happen let us people know this

    we know your terror leader died and how please tell your BTF and other tiger terror factions in the world.

    Reply