வடகொரியா 43 வருட இடைவெளிக்குப்பின்னர் முதற் தடவையாக உலக கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றுள்ளது. 1966 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அந்த அணிக்கு இந்த வாய்ப்புக் கிட்டியுள்ளது.
ரியாத் நகரில் மன்னர் பஹத் விளையாட்டரங்கில்; 66 ஆயிரம் பார்வையாளர்கள் மத்தியில் நேற்று நடைபெற்ற சவூதி அரேபியா அணியுடனான தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றதையடுத்து வடகொரியாவுக்கு இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.
அதன்படி 2010 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிச்சுற்றில் ஆசிய பிராந்தியம் சார்பாக விளையாட வடகொரியா தகுதி பெற்றுள்ளது. தென்கொரியா, ஜப்பான்,அவுஸ்திரேலியா ஆகியன ஆசியா சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஏனைய அணிகளாகும்.