வடக்கில் நடந்து முடிந்த யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு மக்கள் பலர் முகாம்களில் அகதிகளாக அவலப்பட்டு வாழ்ந்து வருகின்றனர். அவர்களை முகாம்களுக்குச் சென்று பார்வையிட்டு, அவர்களுக்கான உதவிகளை வழங்கும் ஒரு சந்தர்ப்பத்தை எமது நாட்டு எதிர்க்கட்சிகளுக்கோ மற்றும் சிவில் சமூக அமைப்புகளுக்கோ அரசு வழங்கவில்லை.
எமது நாட்டு மக்களின் நிலையை நேரில் சென்று அறிய முடியாத நிலையை அரசு உருவாக்கி உள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயலத் ஜயவர்தன, லஷ்மன் செனவிரத்ன, மங்கள் சமரவீர, ஹசன் அலி, மனோ கணேசன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று பிரதம நீதியரசர் அசோக் டி சில்வாவின் முன்னிலையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
விவாதத்தின் பின்னர் இம்மனு தொடர்பான விசாரணை எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
msri
சொந்தநாட்டுமக்களை>அந்நாட்டின் அரசியல் தலைவர்களே நேரில் பார்க்கமுடியாத நாடு> பாரினில் எம்நாடென தோள் கொட்டுவோம்!