வவுனியா, நெலுங்குளம் பகுதியில் இன்று காலை மூன்று புலி உறுப்பினர்கள் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் இன்று காலை தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்ட வவுனியா விஷேட பொலிஸ் பிரிவினர் வாகனம் ஒன்றை சோதணை செய்ய முற்பட்டபோது இந்த மூன்று புலி உறுப்பினர்களும் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
இதனை வெற்றிகரமாக முறியடித்த பொலிஸாரின் பதில் துப்பாக்கிப் பிரயோகத்தில் இம்மூவரும் கொல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் வவுனியா ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லப்பட்டன என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.