20.20 உலகக் கிண்ண போட்டித் தொடரின் இரண்டாவது அரையிறுதியாட்டம் இலங்கை அணிக்கும் மேற்கிந்திய அணிக்குமிடையே நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
நாண்ய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய அணி இலங்கையை முதலில் துருப்பெரடுத்து ஆடும்படி கேட்டுக் கொண்டது. இதன்படி முதலில் துருப்பெடுத்தாடிய இலங்கை குறித்த 20 ஓவர்களில் ஐந்து விக்கட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திலக்கரத்ன டில்சான் இறுதிவரை துடுப்பெடுத்தாடி 57 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 96 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். இலங்கையின் ஏனைய அணி வீரர்களின் துடுப்பாட்டம் சோபிக்கவில்லை. ஜயசூரிய 37 பந்துகளை எதிர்கொண்டு 24 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
வெற்றி இலக்கான 159 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய மேற்கிந்திய அணிக்கு முதலாம் ஓவரே பெரும் சவாலாக அமைந்தது. முதலாம் ஓவரில் மெத்யூஸ் வீசிய பந்தில் 03 விக்கட்டுகளை மேற்கிந்திய அணி இழந்தது. இலங்கையில் பந்து வீச்சு பந்து தடுப்பு உயர் மட்டத்தில் காணப்பட்டது. இறுதியில் 20 ஓவர் முடிவதற்குள் மேற்கிந்திய அணியினர் சகல விக்கட்டுகளையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. இறுதிவரை துடுப்பெடுத்தாடி 50 பந்துகளை எதிர்கொண்டு ஆட்டமிழக்காது 63 ஓட்டங்களைப் கிறிஸ் கேளி பெற்றுக் கொண்டார். இலங்கை அணி 57 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதி ஆட்டத்துக்குத் தெரிவானது. போட்டி சிறப்பாட்டக்காரராக டில்சான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாளை லோட்ஸ் மைதானத்தில் இறுதியாட்டம் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் இலங்கை அணியினர் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.
GHHD
நாளை லோட்ஸ் மைதானத்தில் இறுதியாட்டம் நடைபெறவுள்ளது. இறுதிப் போட்டியில் பாக்கிஸ்தான் இலங்கை அணியினர் பங்கேற்கவுள்ளனர். இப்போட்டி இலங்கை நேரப்படி இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும் இலங்கை வெற்றிபெறும்
பார்த்திபன்
ஆம், மீண்டும் இலங்கை அணி ஒரு சாதனை படைக்கும் என்றே நானும் நம்புகின்றேன்.