இலங் கையில் ஐ.நா. தொண்டு நிறுவன ஊழியர்கள் இரண்டு பேர் அரச அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம் தெரிவித்துள்ளது.
அந்த ஊழியர்கள் காணாமல் போனதாகத் தகவல் வந்து சில நாட்கள் கழிந்த பின்னரே அவர்கள் அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்று தமக்குத் தெரியவந்துள்ளதாக ஐ.நா. அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தடுத்துவைக்கப்பட்டுள்ள அந்த ஊழியர்கள் மீது எவ்விதமான குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன எதற்காக அவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என்பது தொடர்பில் தங்களிடம் விபரம் இல்லை என்று ஐ.நா.அலுவலம் தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் இருவரும், வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் பணியாற்றி வந்த தமிழர்கள் என்று இலங்கையில் ஐ.நா. சார்பாகப் பேசவல்லர் ஒருவர் தெரிவித்துள்ளார்.