உல கெங்கும் யுத்தம் காரணமாகவும், துன்புறுத்தல்கள் காரணமாகவும் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி இடம்பெயர நேர்ந்துள்ள லட்சக்கணக்கான அகதிகள் சொல்லொனா சிரமங்களை அனுபவித்து வருகிறார்கள் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நலனுக்கான உயர்ஸ்தானிகர் அண்டோனியோ குட்டெரெஸ் கருத்து வெளியிட்டுள்ளார்.
உலகில் பெரிய அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவும் தற்போதைய தருணத்தில், மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர்கள் இடம்பெயர்ந்துள்ளவர்களும் அகதிகளும்தான் என ஐ.நா.மன்ற அகதிகள் நலன் உயர் ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.
மோதல்கள் காரணமாகவும் சட்டத்துக்கு அப்பாற்பட்ட தண்டனைகள் காரணமாகவும் உலக அளவில் இடம்பெயர நேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 4 கோடியே இருபது லட்சம் என்று மதிப்பிடப்படுகிறது.
ஆனால் அகதிகள் என்போர் வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல என்பதை ஐ.நா. அகதிகள் நலன் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
rony
“அகதிகள் என்போர் வெறும் புள்ளிவிபரங்கள் அல்ல”- இவர்கள் பொன்முட்டை இடும் வாத்துகள். இன்றைய உலகில் அதிபெரும் வியாபாரம் அகதிவியாபாரம்தான். இதில்தான் பல நாடுகளிபல அமைப்புகளி ஏன் ஐ.நா.கூட அதிக இலாபம் தேடுகின்றது. இதன் காரணமாகவே உலகில் அகதிகள் தொகை அதிகரிப்பதை அனைவரும் அதிகம் விரும்பீ அதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றார்கள். மனிதாபிமானம் கொண்ட பல நாடுகள் அகதிகளின் நலனுக்காக அள்ளிவழங்கும் பெரும்தொகை யானை வாயில் கரும்பு போலாகிவிட்டது.-ஐ.நா வின் அகதிகளுக்கான அமைப்புக்கூட இன்று அகதிகளை உருவாக்கும் அமைப்பாக மாறி செயல்படுகின்றது. இதைவிட பிச்சையெடுத்து பிழைக்கலாம்.