ஈழத் தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கொண்டு வந்த வணங்கா மண் கப்பலுக்கு சென்னை துறைமுகம் சார்பில் 200 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக எம்.வி. கேப்டன் அலி என்று பெயரிடப்பட்ட வணங்கா மண் கப்பலில் நிவாரணப் பொருட்கள் அனுப்பினர்.
884 டன் எடை கொண்ட நிவாரணப் பொருட்களுடன் வன்னிப் பகுதிக்கு வந்த இக்கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது.
இதையடுத்து எங்கு போவது என்று தெரியாமல் அந்த கப்பல் சென்னையில் இருந்து சுமார் 5 கடல் மைல் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளது. .இந்த நிலையில், கப்பலில் இருந்த இரண்டு ஊழியர்களின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் சிலரின் நிலையும் பாதிக்கப்பட்டது. குடிநீர் இல்லாததால் நிலைமை மேலும் மோசமாகியது.
கடந்த 12ம் தேதி முதல் நடுக்கடலில் இருந்த அந்த ஊழியர்கள் ஈழத் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட உணவு பொருட்களை சாப்பிட்டு உயிர் பிழைத்து வருகின்றனர். இந்நிலையில் குடிநீர் இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு சென்னை துறைமுகம் சுமார் 200 லிட்டர் குடிநீர் வழங்கி உதவியுள்ளது.
இது குறித்து சென்னை துறைமுக பொறுப்புக் கழக தலைவர் சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், இலங்கையில் இருக்கும் தமிழர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண பொருட்களை கொண்டு சென்ற வணங்கா மண் கப்பலை இலங்கை அரசு திருப்பி அனுப்பிவிட்டது. இதனால் அந்த கப்பல் சுமார் 1 வார காலத்துக்கு மேல் கடலில் நிற்கிறது.
அதில் 15 ஊழியர்கள் இருப்பதாகவும், அவர்கள் தங்களுக்கு குடிநீர் இல்லை எனறும் கடந்த 16ம் தேதி அவசரத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து அவர்களுக்கு மறுநாளே 200 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. இந்தக் கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் வர வேண்டும் என்றால் அந்த சரக்குகளுக்கான முறையான சான்றிதழ், அனுமதி கடிதம் போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டும். ஆனால் அதுதொடர்பாக எங்களிடம் யாரும் பேசவில்லை. ஏதாவது உதவி கேட்டால் மனிதாபிமான அடிப்படையில் செய்யத் தயாராக இருக்கிறோம் என்றார் அவர்.
புதிய சிக்கல்…
பொதுவாக நிவாரண பொருட்களை அனுப்பும் போது அதில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்ற பட்டியல் மற்றும் சில ஆவணங்களை இணைத்து அனுப்ப வேண்டும். ஆனால், தற்போது வணங்கா மண் கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களின் பட்டியல் தயாரிக்கப்படவில்லை. மேலும், நிவாரணப் பொருட்களை தொண்டு நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது தூதரகம் மூலமாகவோ அனுப்புவது வழக்கம். ஆனால், இலங்கையில் தவிக்கும் மக்களுக்கு விரைவாக உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் ஐரோப்பிய தமிழர்கள் நடைமுறையில் உள்ள சில சம்பிரதாயங்களை கவனிக்காமல் விட்டு விட்டதாக தெரிகிறது. சில ஆவணங்களை சேர்த்து இணைக்காமல் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுவதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இந்நிலையில் வணங்கா மண் கப்பலை துறைமுகத்துக்குள் கொண்டு வர, ஆவணங்களை சரிபார்க்கும் பணியில் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டு வருகிறது. மேலும் இந்த கப்பல் தொடர்பாக கியூ பிராஞ்ச் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
msri
தமிழ்ததேசியம்>சீ.சீ.பொன்னம்பலம் முதல் பிரபாகரன் வரை> தமிழமக்கள் இலங்கையின் “பெரும்பான்மை இனமென” கொண்டே> அரசியல் நடாத்தினர்! கடைசியல் சரணடைவதும்> கோடரி+பொல்லுக் கட்டைகளிடம் மண்டை பிளபட மாழுவதுமே வரலாறு! “வணங்காமண்ணிற்கும்” நடந்தது இதுதான்! இப்போ நடுக்கடலில் குடிதண்ணீருக்கு வணங்குகின்றது!
accu
திருப்பதிக்கே லட்டா? அகதிகளை காப்பாற்றப் போனவர்களே அகதிகளா?? இது தேவையா?