தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.கனகரட்ணம் கொழும்பு பிரதம நீதிவான் முன் ஆஜர்

tna_mp-kanagarathnm.jpgவடக்கில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னி பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்குண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. கனகரட்ணம் நேற்று திங்கட்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் (சி.ஐ.டி) கொழும்பு பிரதம நீதிவான் நிஷாந்த அப்பு ஆராச்சி முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார்.

படையினரின் மனிதாபிமான நடவடிக்கையின்போது கடந்த மே மாதம் 21 ஆம் திகதி கனகரட்ணம் எம்.பி.கைதுசெய்யப்பட்டதாக சி.ஐ.டி.யினர் பிரதான நீதிவானுக்கு அறிவித்துள்ளனர். பாதுகாப்புச் செயலாளரது பணிப்பின்பேரில் இவர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன், விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தமை, பயங்கரவாத செயற்பாடுகளுக்கு உதவி, ஒத்துழைப்பு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் இவர் மீது சுமத்தப்பட்டிருப்பதாகவும் சி.ஐ.டி.யினர் நீதிவானுக்கு விளக்கமளித்துள்ளனர்.

அத்துடன், கனகரட்ணம் எம்.பி. அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல தவறுகளை இழைத்தமைக்கான குற்றச்சாட்டுகளுக்குரிய தகவல்கள் தெரியவந்திருப்பதாகவும் எனவே, இவரை மேலும் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி வேண்டுமென்றும் சி.ஐ.டி.யினர் கொழும்பு பிரதான நீதிவானிடம் கோரியுள்ளனர். இதேநேரம், நீதிவானின் கண்காணிப்புக்கு உட்படுத்தும் பொருட்டே கனகரட்ணம் எம்.பி.யை ஆஜர் படுத்தியதாக சி.ஐ.டி.யினர் தெரிவிக்கவே ஏதேனும் பிரச்சினைகள் இருக்கிறதா? என்று பிரதான நீதிவான் அப்புஆராச்சி எம்.பி.யிடம் கேட்டிருக்கிறார்.

இதற்கு கனகரட்ணம் எம்.பி.உணவு, சுகாதரம் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுவதாகவும் பிரச்சினைகள் எதுவுமில்லையென்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, நீதிவானின் உத்தரவின் பேரில் கனகரட்ணம் எம்.பி. மீண்டும் சி.ஐ.டி.யினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேநேரம், எஸ்.கனகரட்ணம் எம்.பி.யை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கடந்த பாராளுமன்ற அமர்வின் போது (ஜூன் 10 ஆம் திகதி) சபாநாயகரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி.யான பி.அரியநேத்திரன் தெரிவித்தார். இதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 6 எம்.பி.க்களது கையொப்பங்களடங்கிய கடிதம் சபாநாயகருக்கு சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • msri
    msri

    ஓர் பாராளுமன்ற உறுப்பினருக்கே> இந்தப் பாடென்றால்> ஓர் சாதாரண தமிழ்இளைஞளை> ஐனநாயக நீரோட்டக்காரர்களின் தலையாட்டிகள் இவர் புலியென தலையாட்டிவிட்டால்> அவ்விளைஞனின் நிலை எப்படியாகும்! இந்நிலையில்> அரசிடம் தொழுதுண்டு வாழ்வோர்கள் சொல்கின்றார்கள்!> நம்புங்கள் “மகிந்தன்” நல்லவன் என்று! நம்பவும் ஒரு கூட்டமுண்டு!

    Reply
  • நண்பன்
    நண்பன்

    புலி பாசம் மகிந்த அரசில் கருணையாகித் தெரிகிறது.

    Reply
  • shantha
    shantha

    புலிகளின் ஏகப்பிரதிநிதித்துவத்தை தற்போது மகிந்தர் எடுத்துள்ளார். கருணா டக்ளஸ் அனைவரும் இனி மகிந்தர் தலைமையில் தான் போட்டியட முடியும். புலிகளை வைத்து அரசியல் செய்தமையால் வந்த வினையோ தெரியாது.

    Reply